#4 விராட் கோலியின் சீரான ஆட்டத்திறன்
இந்திய கேப்டன் விராட் கோலி இந்த ஒருநாள் தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிபடுத்தி 2 சதங்களை விளாசியுள்ளார். இந்த தொடரில் 72.50 சராசரியுடன் 290 ரன்களை குவித்து அதிக ரன்களை குவித்தோர் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார். இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக விளையாடிய 4வது ஒருநாள் போட்டியில் மட்டுமே விராட் கோலி சோபிக்கவில்லை. தற்போது மொகாலியில் தவறவிட்ட அதிரடி ஆட்டத்தை தனது சொந்த மண்ணான டெல்லி ஓடிஐயில் வெளிபடுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
விராட் கோலி கண்டிப்பாக எம்.எஸ்.தோனியை மிஸ் செய்வார். இந்த தொடரில் விஜய் சங்கர் மற்றும் கேதார் ஜாதவ் இவருடன் சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர். ரிஷப் பண்ட் தனது அதிரடி ஆட்டத்தை ஒருநாள் போட்டியிலும் வெளிபடுத்தி வருவது மற்றொரு பக்கபலமாக இந்திய அணிக்கு உள்ளது.
இந்திய அணியின் பேட்டிங் வரிசை மிகவும் சிறப்பாக உள்ளது. இந்த பேட்டிங் வரிசை எவ்வளவு பெரிய பந்துவீச்சாக இருந்தாலும் தகர்த்து விடுவார்கள். இரு கேப்டன்களில் யார் டாஸ் வென்றாலும் பௌலிங்கையே முதலில் தேர்வு செய்ய அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் இரு அணியுமே பேட்டிங்கில் வலிமையாக இருப்பதால் சேஸிங்கையே அதிகம் எதிர்பார்க்கும். ஆஸ்திரேலிய மற்றும் இந்திய ஆகிய இரண்டு அணிகளின் டாப்-3 பேட்ஸ்மேன்கள் மிகவும் சிறந்த ஆட்டத்திறனுடன் திகழ்கின்றனர். இருப்பினும் இந்திய அணிக்கு சொந்த மண் என்ற நன்மை உள்ளதால் இந்திய அணிக்கு சாதகமாக திகழ அதிக வாய்ப்புள்ளது.