#2 சொந்த மண்ணில் இந்திய அணியின் சிறப்பான ஒருநாள் தொடர் சாதனைகள்
இந்திய அணி கடைசி 10 வருடங்களில் தனது சொந்த மண்ணில் விளையாடிய போட்டிகளில் 62% வென்றுள்ளது. அதே சமயத்தில் தனது சொந்த மண்ணில் 85% தொடரை கைப்பற்றியுள்ளது இந்திய அணி.
கடைசி 10 வருடங்களில் தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகள் மட்டுமே இந்திய அணியை ஒரு நாள் தொடரில் அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியுள்ளது. இந்திய அணி தனது சொந்த மண்ணில் விளையாடிய கடைசி 20 ஒருநாள் தொடர்களில் 17 தொடர்களை வென்றுள்ளது. தற்போது இந்திய அணி பாகிஸ்தான் அணியை தவிர மற்ற அனைத்து சர்வதேச அணிகளையும் ஒருநாள் போட்டியில் வென்றுள்ளது. இந்திய அணி தனது சொந்த மண்ணில் 2011 உலகக் கோப்பையும் வென்றது. இந்திய அணிக்கு எப்பொதுமே தனது தாய் மண் சாதகமாக இருக்கும் என்பது சந்தேகமில்லா உண்மையாகும்.
இந்திய புள்ளி விவரங்களை பார்க்கும் போது ஆஸ்திரேலிய அணி இந்திய மண்ணில் இந்தியாவை டெல்லியில் நடைபெறவுள்ள தொடரை தீர்மானிக்கும் ஒருநாள் போட்டியில் வெல்வது மிகவும் கடினம். கடந்த முறை இந்திய மண்ணில் தொடரை தீர்மானிக்கும் போட்டியில் இந்தியா வென்று தொடரை கைப்பற்றி உள்ளது குறிப்பிடத் தக்கது.