#1 சொந்த மண்ணில் தொடரை தீர்மானிக்கும் போட்டி இந்தியாவிற்கு சாதகமாக இருந்து வந்ததாக கூறுகிறது கடந்த கால வரலாறு
சொந்த மண்ணில் தொடரை தீர்மானிக்கும் போட்டியாக இந்தியாவிற்கு அமைவது இது முதல்முறை அல்ல.
கடந்த முறை மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 2-1 என்ற நிலையில் இருந்த போது மேற்கிந்தியத் தீவுகள் அணி 4வது ஒருநாள் போட்டியில் தொடரை சமன் செய்யும் நோக்கில் களமிறங்கியது. ஆனால் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகள் அணியை 104 ரன்களில் சுருட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று 3-1 என தொடரை கைப்பற்றியது.
டிசம்பர் 2017ல் இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி தர்மசாலாவில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது. இந்திய அணி மொகாலியில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வென்று சமநிலையில் இருந்த போது விசாகப்பட்டினத்தில் நடந்த 3வது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-1 என மற்றொரு ஒருநாள் தொடரை தனது சொந்த மண்ணில் வென்றுள்ளது.
இலங்கையைப் போலவே நியூசிலாந்து அணியும் அக்டோபர் 2017ல் நடந்த ஒருநாள் தொடரில் முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று, அடுத்த 2 ஒருநாள் போட்டியிலும் இந்திய அணியிடம் தோல்வியை தழுவியது. அத்துடன் 2016 அக்டோபரில் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது போலவே 2-2 என இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் சமநிலையில் இருந்த போது கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா 190 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடந்த முறை 2013ல் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் 2-2 என சமநிலையில் இருந்த போது பெங்களூரில் நடந்த தொடரை தீர்மானிக்கும் போட்டியில் ரோகித் சர்மா இரட்டை சதம் விளாசினார்.
இந்த புள்ளி விவரங்களை வைத்து பார்க்கும் போது இந்திய அணியை தொடரை தீர்மானிக்கும் போட்டியில் அசைக்க கூட முடியாது எனத் தெள்ளத் தெளிவாக நமக்கு தெரிகிறது.
மார்ச் 13ல் டெல்லியில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலியா உடனான தொடரை தீர்மானிக்கும் போட்டியிலும் இதே நல்ல முடிவுதான் இந்திய அணிக்கு நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.