இந்தியா vs ஆஸ்திரேலியா 2019, 5வது ஒருநாள் போட்டி: ஆட்டத்தின் முன்னோட்டம் மற்றும் உத்தேச XI

Aston turner & Rishap pant
Aston turner & Rishap pant

மொகாலியில் மோசமான தோல்விக்குப் பிறகு தொடரை தீர்மானிக்கும் 5வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நாளை சந்திக்கவுள்ளது. கடந்த போட்டியில் ஆஸ்டன் டர்னரின் அதிரடியில் ஆஸ்திரேலிய அணி வரலாற்று வெற்றி பெற்றது. இந்திய அணி கடைசியாக விளையாடிய 2 ஒருநாள் போட்டிகளிலும் தொடர் தோல்வியை தழுவியுள்ளது.

தனது சொந்த மண்ணிலேயே இந்திய அணி மிகுந்த நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளது. இந்த தொடருக்கு முன்பு இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட்டில் வலிமையான அணியாக திகழ்ந்தது. ஆஸ்திரேலிய அணிக்கு தாங்கள் இழந்த ஆட்டத்திறனை மீண்டும் வெளிக்கொணரும் வகையில் கடைசி இரு போட்டிகளும் அமைந்தது. இந்திய அணியின் வலிமையான பந்துவீச்சு இந்த தொடரில் எடுபடவில்லை. ஏற்கனவே 2-0 என ஆஸ்திரேலியாவிடம் டி20 தொடரை இழந்த இந்திய அணி ஒருநாள் தொடரையும் இழக்க விடாமல் தங்களது முழு ஆட்டத்திறனை 5வது ஒருநாள் போட்டியில் வெளிபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

4வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அதிக ரன்களை சேஸிங் செய்து வெற்றி பெற்றதால் அந்த அணி ஒருநாள் தொடரையும் வெல்வோம் என்ற நம்பிக்கையில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி கடந்த ஒருநாள் போட்டியில் 359 ரன்களை 4 விக்கெட்டுகளை இழந்து 13 பந்துகள் மீதமிருக்கும் நிலையிலே எட்டியது. ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கத்தில் 2 விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், உஸ்மான் கவாஜா மற்றும் பீட்டர் ஹான்ட்ஸ்கோம்ப் ஆகிய இருவரின் பொறுப்பான ஆட்டத்தால் ஆட்டம் திசை மாறியது. பின்னர் வந்த ஆஸ்டன் டர்னர் தனது அதிரடியை வெளிபடுத்தி வரலாற்று புகழ் வெற்றியை ஆஸ்திரேலிய அணிக்கு தேடித் தந்தார். 43 பந்துகளில் 87 ரன்களை விளாசிய இவர் ஆட்டநாயகன் விருதினை வென்றார். இதே உத்வேகத்துடன் ஆஸ்திரேலிய அணி 5வது ஒருநாள் போட்டியிலும் செயல்பட்டு தொடரை கைப்பற்றும் நோக்கில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டியின் தகவல்கள்

தேதி: புதன், 13 மார்ச் 2019

நேரம்: 01:30(இந்திய நேரப்படி)

இடம்: பெரோஷா கோட்லா, டெல்லி

தொடர்: ஆஸ்திரேலிய அணியின் இந்திய சுற்றுப்பயணம் 2019

ஒளிபரப்பு: ஸ்டார் நெட்வொர்க்

இனைய ஒளிபரப்பு: ஹாட் ஸ்டார் (வலைத்தளம், செயலி)

நேருக்கு நேர் (கோட்லா மைதானத்தில்)

இதுவரை - 04

இந்தியா - 03

ஆஸ்திரேலியா - 01

ஆடுகள புள்ளிவிவரங்கள்

மொத்த ஆட்டங்கள் - 24

முதலில் பேட் அணி செய்த அணி வென்ற ஆட்டங்கள் - 11

முதலில் பௌலிங் செய்த அணி வென்ற ஆட்டங்கள் - 12

முதல் இன்னிங்ஸின் சராசரி ரன்கள் - 233

இரண்டாவது இன்னிங்ஸின் சராசரி ரன்கள் - 211

மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் - 330/8 (50 ஓவர்கள்) மேற்கிந்தியத் தீவுகள் vs நெதர்லாந்து

மைதானத்தில் அடிக்கப்பட்ட குறைந்த ரன்கள் - 115/10 (31.3 ஓவர்கள்) நெதர்லாந்து vs மேற்கிந்தியத் தீவுகள்

அதிகபட்ச ரன் சேஸிங் - 281/4(40.5 ஓவர்கள்) இந்தியா vs இலங்கை

2வது இன்னிங்ஸில் குறைந்த ரன்களில் எதிரணியை வீழ்த்தியது - 167/10 (43.4 ஓவர்கள்) இந்தியா vs பாகிஸ்தான்.

அணிகளின் தகவல்கள்:

இந்தியா:

• எம்.எஸ்.தோனிக்கு கடைசி இரு ஒருநாள் போட்டிகளில் ஓய்வளிக்கப்பட்டுள்ளதால் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக செயல்படுவார்

• யுவேந்திர சஹாலிற்கு பதிலாக முகமது ஷமி மீண்டும் அணிக்கு திரும்புவார்

• கே.எல்.ராகுல் ஆடும் XIல் இடம்பெறுவார்

ஆஸ்திரேலியா:

• மார்கஸ் ஸ்டாய்னிஸ் உடற்தகுதி பெற்றால் அலெக்ஸ் கேரே பதிலாக அணியில் இடம்பெறுவார். பீட்டர் ஹான்ட்ஸ்கோம்ப் விக்கெட் கீப்பராக செயல்படுவார்.

• ஆடம் ஜாம்பாவிற்குப் பதிலாக நாதன் லயான் களமிறங்க வாய்ப்புள்ளது

அணி விவரம்:

இந்தியா:

ரோகித் சர்மா, ஷிகார் தவான், கே.எல்.ராகுல், விராட் கோலி (கேப்டன்), விஜய் சங்கர், கேதார் ஜாதவ், ரிஷப் பண்ட், அம்பாத்தி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், ஜாஸ்பிரிட் பூம்ரா, யுஜ்வேந்திர சகால், குல்தீப் யாதவ், முகமது ஷமி.

ஆஸ்திரேலியா:

ஆரோன் ஃபின்ச், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாய்னிஸ், பீட்டர் ஹான்ட்ஸ்கோம், ஆஸ்டன் டர்னர், அலெக்ஸ் கேரே, ஜேஸன் பெஹாரன்ஆஃப், ஆடம் ஜாம்பா, நாதன் லயான், ஜே ரிச்சர்ட்சன், பேட் கமின்ஸ், நாதன் குல்டர் நில், ஆன்டிரிவ் டை.

நட்சத்திர வீரர்கள்

இந்தியா

ரோகித் சர்மா

விராட் கோலி

ஜாஸ்பிரிட் பூம்ரா

ஆஸ்திரேலியா

ஆரோன் ஃபின்ச்

மேக்ஸ்வெல்

பேட் கமின்ஸ்

உத்தேச XI

இந்தியா

ரோகித் சர்மா, ஷிகார் தவான், விராட் கோலி (கேப்டன்), கே.எல்.ராகுல், விஜய் சங்கர், கேதார் ஜாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா/முகமது ஷமி, புவனேஸ்வர் குமார், ஜாஸ்பிரிட் பூம்ரா, குல்தீப் யாதவ்.

ஆஸ்திரேலியா

ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹான்ட்ஸ்கோம், மேக்ஸ்வெல், ஆஸ்டன் டர்னர், அலெக்ஸ் கேரே/மார்கஸ் ஸ்டாய்னிஸ், பேட் கமின்ஸ், ஆடம் ஜாம்பா, ஜெ ரிச்சர்ட்சன், ஜெஸன் பெஹாரன்ஆஃப்/நாதன் லயான்.

Quick Links

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now