இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5 வது ஒருநாள் போட்டி மற்றும் தொடரை தீர்மானிக்கும் போட்டியானது டெல்லி, பெரோஷா கோட்லா மைதானத்தில் இந்திய நேரப்படி நண்பகல் 1:30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியில் ஷான் மார்ஷ் மற்றும் ஜேஸன் பெஹாரன்ஆஃப் ஆகியோருக்கு பதிலாக மார்கஸ் ஸ்டாய்னிஸ் மற்றும் நாதன் லயான் களமிறங்கினர். இந்திய அணியில் கே.எல்.ராகுல் மற்றும் யுஜ்வேந்திர சகாலிற்குப் பதிலாக முகமது ஷமி மற்றும் ரவீந்திர ஜடேஜா களமிறங்கினர்.
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆரோன் ஃபின்ச் மற்றும் உஸ்மான் கவாஜா களமிறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். பவர் பிளேவில் இருவரும் இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை கணித்து விளையாடத் தொடங்கினர். கவாஜாவின் சிறப்பான பேட்டிங் இந்த போட்டியிலும் தொடர்ந்தது. முதல் பவர்பிளே ஓவரில் ஆஸ்திரேலிய அணிக்கு விக்கெட் இழப்பின்றி 52 ரன்கள் வந்தது. 14வது ஒவரில் பந்துவீச வந்த ஜடேஜா தான் வீசிய 4வது பந்தில் ஆரோன் ஃபின்சை போல்ட் ஆக்கினார். இவர் மொத்தமாக 43 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டரிகளுடன் 23 ரன்களை அடித்தார். பின்னர் களமிறங்கிய ஹான்ட்ஸ்கோம் கவாஜா-வுடன் கைகோர்த்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார்.
16.2வது ஓவரில் உஸ்மான் கவாஜா தனது 8வது சர்வதேச அரைசதத்தை விளாசினார். 20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 100 ரன்களை கடந்தது. மிடில் ஓவரில் இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை சிதைத்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார்கள் கவாஜா மற்றும் ஹான்ட்ஸ்கோம். 31.5வது ஓவரில் உஸ்மான் கவாஜா தனது 2வது சர்வதேச சதத்தை அடித்தார். இதன்மூலம் இந்திய அணியுடனான தொடரில் அதிக ரன்கள் அடித்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார். 32.6வது ஓவரில் புவனேஸ்வர் குமார் வேகத்தில் விராட் கோலி-யிடம் கேட்ச் ஆனார் கவாஜா. சிறப்பாக விளையாடிய இவர் 106 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 100 ரன்களை அடித்தார். கவாஜா மற்றும் ஹான்ட்ஸ்கோம் பார்ட்னர் ஷிப்பில் 148 ரன்கள் ஆஸ்திரேலிய அணிக்கு வந்தது.
ஜடேஜா வீசிய அடுத்த ஓவரின் 5வது பந்தில் மேக்ஸ்வெல் 1 ரன்களில் விராட் கோலி-யிடம் கேட்ச் ஆனார். 34.4வது ஓவரில் நிலைத்து விளையாடிய பீட்டர் ஹான்ட்ஸ்கோம் அரைசதம் விளாசினார். 36.2வது ஓவரில் முகமது ஷமி வீசிய பந்தில் ரிஷப் பண்ட்-டிடம் கேட்ச் ஆனார் ஹான்ட்ஸ்கோம். இவர் மொத்தமாக 60 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டரிகளுடன் 52 ரன்களை எடுத்தார். கடந்த போட்டியில் அசத்திய அதிரடி வீரர் ஆஸ்டன் டர்னர் குல்தீப் யாதவ் வீசிய 42.2வது ஓவரில் ஜடேஜா-விடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 20 பந்துகளை எதிர்கொண்டு 2 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 20 ரன்களை குவித்தார். நிலைத்து விளையாட முயன்ற மார்கஸ் ஸ்டாய்னிஸ் புவனேஸ்வர் குமார் வீசிய 44.2வது ஓவரில் போல்ட் ஆனார். இவர் மொத்தமாக 27 பந்துகளை எதிர்கொண்டு 1 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸருடன் 20 ரன்களை எடுத்தார். முகமது ஷமி வீசிய அடுத்த ஓவரின் 5வது பந்தில் அலெக்ஸ் கேரே 3 ரன்களில் ரிஷப் பண்ட்-டம் கேட்ச் ஆனார். பின்னர் களமிறங்கிய ஜெ ரிச்சர்ட்சன் சிறிய அதிரடியை வெளிபடுத்தினார்.
48.3வது ஓவரில் பேட் கமின்ஸ் புவனேஸ்வர் குமார் வீசிய பந்தில் அவரிடமே காட்டன் போல்ட் ஆனார். இவர் மொத்தமாக 8 பந்துகளை எதிர்கொண்டு 2 பவுண்டரிகளுடன் 15 ரன்களை எடுத்தார். இறுதியாக வந்து சிறப்பாக விளையாடிய ஜெ ரிச்சர்ட்சன் 49.6வது ஓவரில் விராட் கோலி-யிடம் ரன் அவுட் ஆனார். இவர் மொத்தமாக 21 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டரிகளுடன் 29 ரன்களை எடுத்தார். கடைசி 4ஓவரில் மட்டும் ஆஸ்திரேலிய 46 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்களை எடுத்தது. இந்திய அணி சார்பில் புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டுகளையும், ஜாஸ்பிரிட் பூம்ரா மற்றும் ஜடேஜா 2 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
273 என்ற இலக்குடன் இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் ஷிகார் தவான் களமிறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரை பேட் கமின்ஸ் வீசினார். 2 பவுண்டரிகளுடன் சிறப்பான தொடக்கத்தை அளித்த ஷிகார் தவான் பேட் கமின்ஸ் வீசிய 4.2வது ஓவரில் 12 ரன்களில் அலெக்ஸ் கேரே-விடம் கேட்ச் ஆனார். பின்னர் களமிறங்கிய இந்திய கேப்டன் விராட் கோலி ரோகித் சர்மா-வுடன் சேர்ந்து சிறிது நேரம் பொறுமையாக விளையாடினார். இந்திய அணி முதல் பவர்பிளே ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 48 ரன்கள் அடித்தது. 12.2வது ஓவரில் மார்கஸ் ஸ்டாய்னிஸ் வீசிய பந்தில் விராட் கோலி , அலெக்ஸ் கேரே-விடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 22 பந்துகளை எதிர்கொண்டு 2 பவுண்டரிகளுடன் 20 ரன்களை எடுத்தார்.
அதன்பின் களமிறங்கிய ரிஷப் பண்ட் சிறிது அதிரடியை வெளிபடுத்திவிட்டு 17.5வது ஓவரில் நாதன் லயான் வீசிய பந்தில் டர்னரிடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 16 பந்துகளை எதிர்கொண்டு 1 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸருடன் 16 ரன்களை எடுத்தார். இந்த போட்டியில் ரோகித் சர்மா 46 ரன்கள் அடித்ததன் மூலம் ஒருநாள் போட்டியில் 8000 ரன்களை கடந்தார். 23.1வது ஓவரில் ரோகித் சர்மா தனது 41வது சர்வதேச சதத்தை அடித்தார். பின்னர் களமிறங்கிய விஜய் சங்கரும் நிலைத்து நிற்காமல் 24.4வது ஓவரில் ஆடம் ஜாம்பா வீசிய பந்தில் உஸ்மான் கவாஜா-விடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 21 பந்துகளை எதிர்கொண்டு 1 சிக்ஸருடன் 16 ரன்களை எடுத்தார்.
28.2வது ஓவரில் ஆடம் ஜாம்பா வீசிய பந்தில் சிறப்பாக விளையாடி வந்த ரோகித் சர்மா அலெக்ஸ் கேரே-விடம் ஸ்டம்ப் ஹிட் ஆனார். இவர் மொத்தமாக 89 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டரிகளுடன் 56 ரன்களை எடுத்தார். அதே ஓவரின் 5வது பந்தில் ஜடேஜாவும் ஸ்டம்ப் ஹிட் ஆனார். இந்திய அணி தொடர் விக்கெட் சரிவை சந்தித்து மோசமான நிலையில் இருந்தது. 33.1 வது ஓவரில் இந்திய அணி 150 ரன்களை கடந்தது. பின்னர் களமிறங்கிய கேதார் ஜாதவ் மற்றும் புவனேஸ்வர் குமார் பார்ட்னர் ஷிப் செய்து மிகவும் பொறுமையுடன் விளையாடி வந்தனர். 41வது ஓவர் முடிவில் கேதார் ஜாதவ் மற்றும் புவனேஸ்வர் குமார் பார்ட்னர் ஷிப்பில் 50 ரன்கள் வந்தது. 42.5வது ஓவரில் இந்திய அணி 200 ரன்களை கடந்தது. கடைசி 5 ஓவர்களில் இந்திய அணி வெற்றி பெற 59 ரன்கள் தேவைப்பட்டது. சிறப்பாக விளையாடி வந்த புவனேஸ்வர் குமார் 45.6வது ஓவரில் பேட் கமின்ஸ் வீசிய பந்தில் ஆரோன் ஃபின்ச்-டம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 54 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 46 ரன்களை எடுத்தார். கேதார் ஜாதவ் மற்றும் புவனேஸ்வர் குமார் பார்ட்னர் ஷிப்பில் 91 ரன்கள் இந்திய அணிக்கு வந்தது. ஓரு ஓடிஐ தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸ்திரேலிய வீரர்கள் பட்டியலில் பேட் கமின்ஸ் 14 விக்கெட்டுகளுடன் 3வது இடத்தை பிடித்தார்.
அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே கேதார் ஜாதவ்-வும் ரிச்சர்ட்சன் வீசிய பந்தில் , மேக்ஸ்வெல்-டம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 57 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 44 ரன்களை எடுத்தார். 48.3வது ஓவரில் ஜெ ரிச்சர்ட்சன் வீசிய பந்தில் முகமது ஷமி 3 ரன்களில் காட்டன் போல்ட் ஆனார். 49.6வது ஓவரில் ஸ்டாய்னிஸ் வீசிய பந்தில் குல்தீப் யாதவ் 8 ரன்களில் போல்ட் ஆனார். இந்த விக்கெட்டுடன் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 237 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை 3-2 என கைப்பற்றியது. ஆஸ்திரேலியா சார்பில் ஆடம் ஜாம்பா 3 விக்கெட்டுகளையும், பேட் கமின்ஸ், ஜெ ரிச்சர்ட்சன், மார்கஸ் ஸ்டாய்னிஸ் தலா 2 விக்கெட்டுகளையும், நாதன் லயான் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். ஆட்டநாயகன் மற்றும் தொடர் ஆட்ட நாயகன் விருதினை உஸ்மான் கவாஜா வென்றார்.