இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி ஹைதராபாத்தில் கடந்த மார்ச்-2 அன்று நடைபெற்றது. ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் ஆஸ்திரேலிய அணியை சுமாரான ரன்களில் மடக்கினர்.
ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தங்களது விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். 240 ரன்களுக்கும் குறைவாகவே 50 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி அடித்தது. கவாஜா மற்றும் மேக்ஸ்வெல் மட்டுமே தங்களது சிறப்பான பேட்டிங்கை வெளிபடுத்தினர்.
இந்திய பந்துவீச்சாளர்களுக்கு இந்த போட்டி மிகவும் சிறப்பாக அமைந்தது. ஜாஸ்பிரிட் பூம்ரா ஓவர் சுமாராக இருந்தாலும், முகமது ஷமியின் அதிரடி பந்துவீச்சாள் மேக்ஸ்வெல் விக்கெட்டுடன் சேர்த்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரவீந்திர ஜடேஜாவின் சிறப்பான சுழலில் 10 ஓவர்களில் வெறும் 33 ரன்களே தனது பௌலிங்கில் தந்தார்.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான தவானின் விக்கெட் இரண்டாவது ஓவரிலேயே வீழ்த்தப்பட்டது. விராட் கோலி சற்று பொறுமையாக விளையாட ஆரம்பித்தார். ரோகித் சர்மா 37 ரன்களை விளாசினார். ஒரு கட்டத்தில் இந்திய அணி 24 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்களை எடுத்திருந்தது.
பின்னர் களமிறங்கிய கேதார் ஜாதவ் மற்றும் எம்.எஸ்.தோனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கேதார் ஜாதவ் அதிரடியாகவும், தோனி அவருக்கு பக்கபலமாகவும் இருந்தார். இருவரின் சிறப்பான அரைசதத்தால் இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். கேதார் ஜாதவ் 81 ரன்களை குவித்து ஆட்டநாயகன் விருதினை வென்றார். தோனி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக தொடர்ந்து 4வது அரைசதத்தை அடித்தார்.
இந்திய அணி இரண்டாவது ஒருநாள் போட்டியில் சில மாற்று ஆட்டக்காரர்களுடன் களமிறங்க வாய்ப்புள்ளது. நாம் இங்கு இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் உத்தேச XI பற்றி காண்போம்.
டாப் ஆர்டர்
இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவுடன், கே.எல்.ராகுல் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கே.எல்.ராகுல் டி20 தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியுள்ளார். 2019 உலகக் கோப்பையில் இந்திய அணியிக்கு தொடக்க மாற்று ஆட்டக்காரர் தேவைப்படும் நிலையில், உலகக் கோப்பை தொடருக்கு முன்னர் சில போட்டிகளில் கே.எல்.ராகுலை விளையாட வைக்க வேண்டும்.
கே.எல்.ராகுல் ஆடும் XI-ல் இடம்பெற்றால் தவானிற்கு ஓய்வளிக்கப்படும். தவான் முதல் ஒருநாள் போட்டியில் கோல்டன் டக் அவுட் ஆனார். இவரது ஆட்டம் சமீப போட்டிகளில் சீராக இருப்பதில்லை. விராட் கோலி வழக்கம்போல 3வது வீரராக களமிறங்குவார்.
கடந்த சில ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி தனது ஆட்டத்தை தொடங்கும் போது சிறப்பாக தொடங்குகிறார். ஆனால் அதிக ரன்களை குவிக்காமல் அரைசதத்திற்கு முன்னதாகவே தனது விக்கெட்டை இழக்கிறார். இது ஒரு வழக்கமற்ற செயலாகும். விராட் கோலி, இரண்டாவது ஒருநாள் போட்டியில் 3வது பேட்ஸ்மேனாக களமிறங்கி அதிக ரன்களை குவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
#2: மிடில் ஆர்டர் மற்றும் ஆல்-ரவுண்டர்கள்
ராயுடு நம்பர்-4 பேட்ஸ்மேனாக களமிறக்கப்படுவார். மிடில் ஆர்டரில் தோனி இளம் வீரர்களுக்கு வழிகாட்டியாக திகழ்வார். முதல் ஒருநாள் போட்டியில் கேதார் ஜாதவ் தோனியின் வழிகாட்டுதலின் படியே என்னால் சிறப்பாக பேட்டிங் செய்ய முடிந்தது என கூறியிருந்தார். தோனி நம்பர்-4 வீரராக களமிறங்கினால் ஆட்டத்திற்கு தகுந்தாவாறு செயல்படுவார். இந்த இடம் இவருக்கு சரியானதாக இருக்கும் என்பது கிரிக்கெட் ரசிகர்களின் வேண்டுகோளாகும்.
விஜய் சங்கர் முதல் ஒருநாள் போட்டியில் மிகவும் குறைவாகவே பயன்படுத்தப்பட்டார். ரிஷப் பண்ட் நம்பர்-6 பேட்ஸ்மேனாக களமிறக்கப்பட்டு ஆட்டத்தை முடிக்கும் பணியை செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. கேதார் ஜாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் சிறப்பாக அசத்தி சிறப்பான ஆல்-ரவுண்டர் ஆட்டத்திறனை வெளிபடுத்தி வருகின்றனர்.
மிடில் ஆர்டர் பேட்டிங்கை சோதிக்கும் வகையில் பேட்டிங் வரிசையில் சற்று மாறுதல் செய்யலாம். முதல் ஒருநாள் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய ஜடேஜா நம்பர்-5 பேட்ஸ்மேனாக களமிறக்கி சோதனை செய்து பார்க்கலாம். முதல் ஒருநாள் போட்டியில் இவரது பந்துவீச்சில் ஒரு ஓவருக்கு 4 ரன்களுக்கு குறைவாகவே ரன்கள் வழங்கினார். அத்துடன் ஃபீல்டிங்கில் மிகவும் சிறப்பாக செயல்படுகிறார் ரவீந்திர ஜடேஜா.
#3: பந்துவீச்சாளர்கள்
முகமது ஷமியின் பௌலிங் முதல் ஒருநாள் போட்டியில் மிகவும் சிறப்பாக இருந்தது. இவர் வீசிய முதல் 4ஓவர்களில் வெறும் 6 ரன்கள் மட்டுமே தனது பௌலிங்கில் குடுத்தார். அத்துடன் இரண்டு முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். 28 வயதான முகமது ஷமி இந்திய கிரிக்கெட் அணியில் சரியான உடற்தகுதியுடன் உள்ளார். அத்துடன் இந்திய கேப்டன் விராட் கோலியின் பிடித்த பௌலராக திகழ்கிறார்.
ஒருநாள் போட்டியின் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஜாஸ்பிரிட் பூம்ரா, தான் வீசிய முதல் ஓவரிலேயே ஆரோன் ஃபின்சின் விக்கெட்டை வீழ்த்தினார். அதன்பின் அவரது பௌலிங்கில் சற்று அதிகமாவே ரன்கள் சென்றது. இவ்வாறு நடப்பது மிகவும் அரிதான செயலாகும். இந்திய அணியின் சிறந்த பௌலராகவும், உலகக் கோப்பையில் பந்துவீச்சில் துருப்பு சீட்டாகவும் பூம்ரா திகழ்கிறார்.
குல்தீப் யாதவ், யுஜ்வேந்திர சகாலிற்கு பதிலாக முதல் ஒருநாள் போட்டியில் விளையாடினார். முதல் ஒருநாள் போட்டியின் மேட்ச் வின்னர் குல்தீப் யாதவ், கடந்த சில தொடர்களில் போதுமான அளவு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. எனவே இனி வரும் போட்டிகளில் இவருக்கு ஓய்வளிக்க வாய்ப்பில்லை. இரண்டாவது ஒருநாள் போட்டி நாக்பூரில் மார்ச்-5 ஆம் தேதி நடைபெறவுள்ளது.