#3: பந்துவீச்சாளர்கள்
முகமது ஷமியின் பௌலிங் முதல் ஒருநாள் போட்டியில் மிகவும் சிறப்பாக இருந்தது. இவர் வீசிய முதல் 4ஓவர்களில் வெறும் 6 ரன்கள் மட்டுமே தனது பௌலிங்கில் குடுத்தார். அத்துடன் இரண்டு முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். 28 வயதான முகமது ஷமி இந்திய கிரிக்கெட் அணியில் சரியான உடற்தகுதியுடன் உள்ளார். அத்துடன் இந்திய கேப்டன் விராட் கோலியின் பிடித்த பௌலராக திகழ்கிறார்.
ஒருநாள் போட்டியின் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஜாஸ்பிரிட் பூம்ரா, தான் வீசிய முதல் ஓவரிலேயே ஆரோன் ஃபின்சின் விக்கெட்டை வீழ்த்தினார். அதன்பின் அவரது பௌலிங்கில் சற்று அதிகமாவே ரன்கள் சென்றது. இவ்வாறு நடப்பது மிகவும் அரிதான செயலாகும். இந்திய அணியின் சிறந்த பௌலராகவும், உலகக் கோப்பையில் பந்துவீச்சில் துருப்பு சீட்டாகவும் பூம்ரா திகழ்கிறார்.
குல்தீப் யாதவ், யுஜ்வேந்திர சகாலிற்கு பதிலாக முதல் ஒருநாள் போட்டியில் விளையாடினார். முதல் ஒருநாள் போட்டியின் மேட்ச் வின்னர் குல்தீப் யாதவ், கடந்த சில தொடர்களில் போதுமான அளவு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. எனவே இனி வரும் போட்டிகளில் இவருக்கு ஓய்வளிக்க வாய்ப்பில்லை. இரண்டாவது ஒருநாள் போட்டி நாக்பூரில் மார்ச்-5 ஆம் தேதி நடைபெறவுள்ளது.