இந்திய அணி ஆஸ்திரேலியாவுடனான முதல் டி20 போட்டியில் நூலிழையில் தோல்வியை தழுவியது. இந்த தோல்வியின் மூலம் சர்வதேச டி20 போட்டியில் கடைசி பந்தில் இந்திய அணி 4வது முறையாக தோல்வியை தழுவியுள்ளது. ஜஸ்பிரிட் பூம்ரா 19வது ஓவரை சிறப்பாக வீசினார். இதனால் இந்திய அணி 1-0 என வென்று முன்னிலை வகிக்கும் என கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் கடைசி ஓவரை வீச வந்த அனுபவ வீரர் உமேஷ் யாதவ் கடைசி ஓவரில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை கட்டுபடுத்த முடியாமல் ரன்களை வாரி வழங்கினார். இதன் மூலம் கடைசி 6 பந்துகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற தேவையான 14 ரன்களும் வந்தது. இந்திய அணியின் பேட்டிங் மிகவும் சுமாரகவே இருந்தது.கே.எல்.ராகுலின் பேட்டிங் மட்டுமே சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக இருந்தது.மற்ற பேட்ஸ்மேன்கள் மோசமாக சொதப்பினர்.
முதலில் பேட் செய்த இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 127 என்ற சுமாரன ரன்களை அடித்தது.இந்த இலக்கை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களால் நெருங்க முடியாத அளவிற்கு இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு மிகவும் அருமையாக இருந்தது.ஆனால் கடைசி ஓவரில் உமேஷ் யாதவின் சொதப்பலால் இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்நிலையில் இரண்டாவது டி20 போட்டி பெங்களூரில் பிப்ரவரி 27 அன்று நடைபெறவுள்ளது.முதல் டி20யில் ஏற்பட்ட தோல்வியால் இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியில் மாற்றங்கள் நிகழ வாய்ப்பு உள்ளது.
நாம் இங்கு இரண்டாவது டி20 போட்டியில் இந்திய ஆடும்XIல் ஏற்டவுள்ள மாற்றங்கள் பற்றி காண்போம்.
#1 தொடக்க ஆட்டக்காரர்கள்: ஷிகார்தவான்,கே.எல்.ராகுல்,விராட் கோலி
கே.எல்.ராகுல் தமக்கு தொடக்க வரிசையில் அளிக்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு சிறப்பான அரைசதத்தை முதல் டி20யில் அடித்தார். கே.எல்.ராகுல் சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். இந்திய அணி தற்போது மாற்று தொடக்க வீரரை தேடிக் கொண்டிருப்பதால் இந்த ஆஸ்திரேலிய தொடரில் அனைத்து போட்டிகளிலும் இவருக்கு வாயப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கே.எல்.ராகுலுடன் மற்றொரு தொடக்க வீரராக ரோகித் சர்மா மற்றும் தவான் சுழற்சி முறையில் களமிறக்கப்படுவர்.முதல் டி20யில் தவானுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால் இரண்டாவது டி20 போட்டியில் அவர் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இனிவரும் போட்டிகளில் ரோகித் ஷர்மாவிற்கு ஓய்வளிக்கப்படும். இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ஏற்கனவே போதுமான ஓய்வு அளிக்கப்பட்டுவிட்டதால் இனிவரும் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார். ஆனால் நம்பர்-3 பேட்ஸ்மேனாக களமிறங்குவாரா அல்லது நம்பர்-4 பேட்ஸ்மேனாக களமிறங்குவார என்பதுதான் தற்போது கேள்விக்குறியாக உள்ளது. விஜய் சங்கர் இந்திய ஆடும் XI-ல் இடம்பெற்றால் விராட் கோலியின் பேட்டிங் வரிசையான நம்பர்-3ல் களமிறக்கப்படுவார்.
விஜய் சங்கர் தற்போது இந்திய மிடில் ஆர்டரில் தேவையான ஒரு பேட்ஸ்மேன் ஆவார். ஹர்திக் பாண்டியா தற்போது இந்திய அணியில் இல்லாத நிலையில் விஜய் சங்கருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது இந்திய ரசிகர்களின் வேண்டுகோளாகும். எனவே கேப்டன் விராட் கோலி , விஜய் சங்கரின் இடத்தை 2வது டி20 போட்டியில் உறுதி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
#2 மிடில் ஆர்டர்: விஜய் சங்கர்,ரிஷப் பண்ட் மற்றும் எம்.எஸ்.தோனி
இந்திய அணி முதல் டி20யில் 6 விக்கெட்டுகளை இழந்திருந்த சமயத்தில் தோனி மட்டுமே கடைசி வரை ஆட்டமிழக்காமல் பொறுமையாக விளையாடினார். ஹர்திக் பாண்டியா தற்போது இந்திய அணியில் இல்லாததால் இந்திய அணியை சமநிலை படுத்த இயலவில்லை. முதல் டி20யில் சொதப்பிய தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக விஜய் சங்கர் களமிறக்கப்படலாம். தினேஷ் கார்த்திக் முதல் டி20யில் 1 ரன் மட்டுமே எடுத்து போல்ட் ஆனார். விஜய் சங்கர் சமீபத்தில் விளையாடிய சில போட்டிகளில் பந்துவீச்சை மேற்கொள்ளவில்லை.ஆனால் மிடில் ஆர்டரில் சிறந்த அதிரடி பேட்ஸ்மேனாக நியூசிலாந்து தொடரில் விளையாடியது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவை தவிர வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்கள் என யாரும் இல்லை.எனவே 2019 உலகக் கோப்பையை கருத்ததில் கொண்டு இவருக்கு பந்துவீச்சு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பது கிரிக்கெட் ரசிகர்களின் வேண்டுகோளாகும். இவர் எந்த பேட்டிங் வரிசையில் இறங்கினாலும் சிறப்பான ஆட்டத்திறனை வெளிபடுத்தும் திறமை உடையவர். இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் நம்பர்-5வது வரிசையில் களமிறக்கப்படுவார். இவர் ஓடிஐ/டி20 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த வேண்டும் என இந்திய கிரிக்கெட் வாரியம் எதிர்பார்க்கப்படுகிறது. இவரது பேட்டிங் ஆரம்பத்தில் அதிரடியாக ஆரமித்தாலும் அதிக ரன்களை குவிக்காமல் ஆட்டமிழந்துவிடுகிறார். தோனி நம்பர்-6 பேட்டிங் வரிசையில் களமிறக்கப்படுவார். இந்திய அணி வேறொரு ஃபினிஷரை நம்பர்-6 வரிசையில் களமிறக்க விரும்பினால் தோனியை நம்பர்-5 பேட்டிங் வரிசையிலும், ரிஷப் பண்டை நம்பர்-6 வரிசையிலும் களமிறக்கலாம். இதன்மூலம் ரிஷப் பண்ட் இந்திய அணியின் ஃபினிஷராக திகழ்வார்.
#3 ஆல்-ரவுண்டர்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள்:குருனால் பாண்டியா, சித்தார்த் கவுல்,ஜாஸ்பிரிட் பூம்ரா,மயான்க் மார்கன்டே,யுஜ்வேந்திர சஹால்
குருனால் பாண்டியா இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் இடத்தை பூர்த்தி செய்வார். ஜடேஜா இவரது இடத்திற்கு வர வாய்ப்புள்ளது .ஆனால் அவ்வாறு நடக்க மிகக்குறைந்த வாய்ப்புகளே உள்ளது. முதல் டி20யில் சொதப்பிய உமேஷ் யாதவிற்கு பதிலாக மாற்று வீரர் களமிறக்கப்படலாம். இவரது சொதப்பலான பவிலிங்கால் முதல் டி20 யில் இந்திய அணியின் வெற்றி வாயப்பு பறிபோனது. தற்போது இந்திய டி20 அணியில் மாற்று வேகப்பந்து வீச்சாளராக சித்தார்த் கவுல் மட்டுமே இருப்பதால் இவரை இரண்டாவது டி20யில் களமிறக்கப்படலாம். இந்திய அணி 2019 உலகக் கோப்பைக்கு மாற்று வேகப்பந்து வீச்சாளர்களை தேடிவருகிறது. இந்த நிலையில் உமேஷ் யாதவிற்கு அளிக்கப்பட்ட வாய்பை அவர் சரியாக பயன்படுத்தி கொள்ளாமல் இக்கட்டான சூழ்நிலையில் ரன்களை வாரி வழங்கியுள்ளார். இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான ஜாஸ்பிரிட் பூம்ரா இந்த தொடரின் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார்.
ஏனெனில் இந்த தொடர் தொடங்கும் முன்பே போதுமான ஓய்வு அவருக்கு அளிக்கப்பட்டு விட்டது.முதல் டி20யில் இவரது அதிரடி பந்துவீச்சால் எதிரணி பேட்ஸ்மேன்களை நிலைகுலையடையச் செய்தார். இவரது பந்துவீச்சு இந்திய அணியின் வெற்றி நம்பிக்கையை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியது. இந்திய கிரிக்கெட் வாரியம் சிறப்பான பந்துவீச்சாளார் குல்தீப் யாதவிற்கு அதிகம் வாய்ப்பளிக்கப்படாமல் டி20 போட்டிகளில் நிராகரித்து வருகிறது. ஆனால் சஹாலிற்கு தான் இந்திய அணியில் அதிகம் வாய்ப்பு வழங்கப்படுகிறது. முதல் டி20யில் சிறப்பாக பந்துவீசிய மயான்க் மார்கன்டே இரண்டாவது டி20 போட்டியிலும் இடம்பெறுவார்.