#2 மிடில் ஆர்டர்: விஜய் சங்கர்,ரிஷப் பண்ட் மற்றும் எம்.எஸ்.தோனி
இந்திய அணி முதல் டி20யில் 6 விக்கெட்டுகளை இழந்திருந்த சமயத்தில் தோனி மட்டுமே கடைசி வரை ஆட்டமிழக்காமல் பொறுமையாக விளையாடினார். ஹர்திக் பாண்டியா தற்போது இந்திய அணியில் இல்லாததால் இந்திய அணியை சமநிலை படுத்த இயலவில்லை. முதல் டி20யில் சொதப்பிய தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக விஜய் சங்கர் களமிறக்கப்படலாம். தினேஷ் கார்த்திக் முதல் டி20யில் 1 ரன் மட்டுமே எடுத்து போல்ட் ஆனார். விஜய் சங்கர் சமீபத்தில் விளையாடிய சில போட்டிகளில் பந்துவீச்சை மேற்கொள்ளவில்லை.ஆனால் மிடில் ஆர்டரில் சிறந்த அதிரடி பேட்ஸ்மேனாக நியூசிலாந்து தொடரில் விளையாடியது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவை தவிர வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்கள் என யாரும் இல்லை.எனவே 2019 உலகக் கோப்பையை கருத்ததில் கொண்டு இவருக்கு பந்துவீச்சு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பது கிரிக்கெட் ரசிகர்களின் வேண்டுகோளாகும். இவர் எந்த பேட்டிங் வரிசையில் இறங்கினாலும் சிறப்பான ஆட்டத்திறனை வெளிபடுத்தும் திறமை உடையவர். இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் நம்பர்-5வது வரிசையில் களமிறக்கப்படுவார். இவர் ஓடிஐ/டி20 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த வேண்டும் என இந்திய கிரிக்கெட் வாரியம் எதிர்பார்க்கப்படுகிறது. இவரது பேட்டிங் ஆரம்பத்தில் அதிரடியாக ஆரமித்தாலும் அதிக ரன்களை குவிக்காமல் ஆட்டமிழந்துவிடுகிறார். தோனி நம்பர்-6 பேட்டிங் வரிசையில் களமிறக்கப்படுவார். இந்திய அணி வேறொரு ஃபினிஷரை நம்பர்-6 வரிசையில் களமிறக்க விரும்பினால் தோனியை நம்பர்-5 பேட்டிங் வரிசையிலும், ரிஷப் பண்டை நம்பர்-6 வரிசையிலும் களமிறக்கலாம். இதன்மூலம் ரிஷப் பண்ட் இந்திய அணியின் ஃபினிஷராக திகழ்வார்.