#3 ஆல்-ரவுண்டர்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள்:குருனால் பாண்டியா, சித்தார்த் கவுல்,ஜாஸ்பிரிட் பூம்ரா,மயான்க் மார்கன்டே,யுஜ்வேந்திர சஹால்
குருனால் பாண்டியா இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் இடத்தை பூர்த்தி செய்வார். ஜடேஜா இவரது இடத்திற்கு வர வாய்ப்புள்ளது .ஆனால் அவ்வாறு நடக்க மிகக்குறைந்த வாய்ப்புகளே உள்ளது. முதல் டி20யில் சொதப்பிய உமேஷ் யாதவிற்கு பதிலாக மாற்று வீரர் களமிறக்கப்படலாம். இவரது சொதப்பலான பவிலிங்கால் முதல் டி20 யில் இந்திய அணியின் வெற்றி வாயப்பு பறிபோனது. தற்போது இந்திய டி20 அணியில் மாற்று வேகப்பந்து வீச்சாளராக சித்தார்த் கவுல் மட்டுமே இருப்பதால் இவரை இரண்டாவது டி20யில் களமிறக்கப்படலாம். இந்திய அணி 2019 உலகக் கோப்பைக்கு மாற்று வேகப்பந்து வீச்சாளர்களை தேடிவருகிறது. இந்த நிலையில் உமேஷ் யாதவிற்கு அளிக்கப்பட்ட வாய்பை அவர் சரியாக பயன்படுத்தி கொள்ளாமல் இக்கட்டான சூழ்நிலையில் ரன்களை வாரி வழங்கியுள்ளார். இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான ஜாஸ்பிரிட் பூம்ரா இந்த தொடரின் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார்.
ஏனெனில் இந்த தொடர் தொடங்கும் முன்பே போதுமான ஓய்வு அவருக்கு அளிக்கப்பட்டு விட்டது.முதல் டி20யில் இவரது அதிரடி பந்துவீச்சால் எதிரணி பேட்ஸ்மேன்களை நிலைகுலையடையச் செய்தார். இவரது பந்துவீச்சு இந்திய அணியின் வெற்றி நம்பிக்கையை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியது. இந்திய கிரிக்கெட் வாரியம் சிறப்பான பந்துவீச்சாளார் குல்தீப் யாதவிற்கு அதிகம் வாய்ப்பளிக்கப்படாமல் டி20 போட்டிகளில் நிராகரித்து வருகிறது. ஆனால் சஹாலிற்கு தான் இந்திய அணியில் அதிகம் வாய்ப்பு வழங்கப்படுகிறது. முதல் டி20யில் சிறப்பாக பந்துவீசிய மயான்க் மார்கன்டே இரண்டாவது டி20 போட்டியிலும் இடம்பெறுவார்.