இந்தியா vs ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி தொடர் முன்னோட்டம்

2016 - ஆம் ஆண்டு நடந்த ஒருநாள் தொடர் .
2016 - ஆம் ஆண்டு நடந்த ஒருநாள் தொடர் .

மெல்போர்னில் நடைபெற்ற பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி டெஸ்ட் தொடரில் 2-1 முன்னிலை வகிக்கிறது. சிட்னியில் இந்திய அணி ஆடும் விதத்தைப் பார்க்கும் பொழுது இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்வது ஏறக்குறைய உறுதி ஆகிவிட்டது. ஆஸ்திரேலிய மண்ணில் ஆசிய அணி டெஸ்ட் தொடரை வெல்வது இதுவே முதல்முறையாகும். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையான ஒருநாள் போட்டி தொடர் ஜனவரி 12-ம் தேதி சிட்னியில் தொடங்குகிறது. இந்தத் தொடரை இந்திய அணி வெல்வதற்கு வாய்ப்புகள் அதிகம். மறுபுறம் டெஸ்ட் தொடரில் அடைந்த தோல்வியைச் சரி செய்ய ஆஸ்திரேலியா முனைப்பாக ஆடும். எனவே, இந்தத் தொடர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும்.

இந்திய அணி நிலவாரம் :

இந்தத் தொடர் உலகக் கோப்பை போட்டிகளுக்கு முன்பு அமைந்திருப்பதால், மிக முக்கியமான தொடராக இந்த தொடர் பார்க்கப்படுகிறது. உலக கோப்பைக்கு முன்பாக ஏற்ற பேட்டிங் வரிசையை அமைக்க இத்தொடரில் கேப்டன் கோஹ்லி முற்படுவார் என்று தெரிகிறது. ஒருநாள் சர்வதேச போட்டி ரேங்கிங் அட்டவணையில் இந்திய அணி 121 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. தொடரை 3-0 என வென்றாலும் இந்திய அணி முதலிடத்தை பிடிக்க முடியாது. இங்கிலாந்து அணி 126 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

உமேஷ் யாதவ், ரிஷப் பண்ட் மற்றும் மணிஷ் பாண்டே ஒருநாள் போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணி:

விராட் கோஹ்லி , ரோகித் சர்மா, ஷிகார் தவான், லோகேஷ் ராகுல், அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக், எம்.எஸ் தோனி, கேதார் ஜாதவ், ஹார்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யூஸ்வேந்திர சாஹல், புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரிட் பும்ரா, முகமது ஷமி மற்றும் கலீல் அகமது.

ஆஸ்திரேலிய அணி நிலவரம் :

ஆஸ்திரேலிய அணி தனது கிரிக்கெட் வரலாற்றிலேயே கடினமான ஒரு சூழ்நிலையைக் கடந்து வருகிறது. இந்தத் தொடரை 3-0 என வெற்றி பெற்றால் ஆறாம் இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானை பின்னுக்குத்தள்ளி ஐந்தாம் இடத்திற்கு முன்னேறும்.

உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு அவர்களின் முன்னணி பந்து வீச்சாளர்களான மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் மற்றும் ஜோஷ் ஹேல்வெல்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அணி

ஷான் மார்ஷ், பீட்டர் ஹென்ட்ஸ்காம், க்ளென் மாக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் கேரி , மிட்செல் மார்ஷ், பீட்டர் சிடில், பில்லி ஸ்டான்லேக், ஜெய் ரிச்சர்ட்சன், ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப் மற்றும் ஆடம் சாம்பா.

அட்டவணை:

முதல் ஒரு நாள் போட்டி : 12 ஜனவரி 2019, 7:50 AM IST, சிட்னி கிரிக்கெட் மைதானம் (SCG), சிட்னி.

இரண்டாவது ஒருநாள் போட்டி : ஜனவரி 15, 2019, அடிலெய்டு ஓவல், அடிலெய்டு.

மூன்றாவது ஒருநாள் போட்டி : 18 ஜனவரி 2019, 7:50 AM IST, மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் (MCG), மெல்போர்ன்.

நேரடி ஒளிபரப்பு:

சோனி சிக்ஸ் (ஆங்கிலம்), சோனி டென் 3 (ஹிந்தி)

Quick Links