பெர்த் போட்டியை எதிர்நோக்கும் இந்திய அணி !

Australia v India - 1st Test: Day 5

இந்திய கிரிக்கெட் அணியின் தலை சிறந்த கேப்டன் யார் என்று கேட்டால் அனைவரும் ஒரு சேர மகேந்திர சிங் தோனி'யின் பக்கம் கை காட்டுவது வழக்கம்..

டி20 உலக கோப்பை, 50 ஓவர் உலக கோப்பை, ஐபிஎல் கோப்பை, சாம்பியன்ஸ் லீக், சாம்பியன்ஸ் ட்ரோபி என்று பலவற்றை வென்ற அவரது ராஜ்யத்தில் பெரும் வெற்றிடமாய் இருப்பது என்னவென்றால் அது ஆசிய கண்டத்திற்கு வெளியே டெஸ்ட் தொடர்களில் பெரிதாக சோபிக்காதது தான்.

தோனி ரசிகர்கள் உள்ளிட்ட பல இந்திய ரசிகர்களின் நிறைவேறாத ஆசையாகவும் அது இருந்தது.

என்னத்தான் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் அசைக்க முடியாத அணியாய் வலம் வந்தாலும் டெஸ்ட் தொடர்களில் ஜொலிக்க முடியாமல் போவது வருத்தம் தருவதாய் தான் இருந்தது..

நீண்ட நாட்களாக இந்திய ரசிகர்களின் ஆசைகள் ஏக்கங்கள் ஆகியவற்றை பூர்த்தி செய்யும் விதமாய் தற்போது நடந்து வரும் ஆஸ்திரேலியா சுற்றுபயணத்தில் முதல் டெஸ்ட் போட்டியை வென்று அசத்தியது கோஹ்லி தலைமையிலான இந்திய அணி.

இதன் மூலம் 1-0 என்று முன்னிலையில் இருக்கும் இந்திய அணி மிகப்பெரிய தன்னம்பிக்கையுடன் அடுத்து வரும் பெர்த் டெஸ்ட் போட்டியை அணுகும் என்று நம்பலாம்.

புஜாரா, ரஹானே வின் அசத்தல் ஆட்டம் கை கொடுக்க, அஸ்வினின் மந்திர சுழல் எடுபட, தரமான வெற்றி ஒன்றை பதிவு செய்தது இந்திய அணி. இரண்டாவது போட்டியை பொறுத்தவரையில், முதல் போட்டியில் சொதப்பியிருந்த முரளி விஜய் தனக்கு அதிகம் வாய்ப்பு கிடைக்காது என்பதை மனதில் வைத்து கொண்டு, கவனமாக ஆடி அணியில் தனது இடத்தினை உறுதி செய்து கொள்ள வேண்டும்..

முதுகின் கீழ் பகுதியில் ஏற்பட்ட சிரமம் காரணமாக ரோஹித் ஷர்மா விற்கு ஓய்வு கொடுக்க பட்டு ஹனும விஹாரிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தவானின் இடத்தை பிடித்துள்ள இளம் வீரர் கே.எல். ராகுல் தன் மீதுள்ள பொறுப்பை உணர்ந்து ஆடுவேண்டும்.

ஆஸ்திரேலியா வீரர்களுக்கே உரித்தான sledgingல் இளம் விக்கெட் கீப்பர் பண்ட் ஈடுபட்டது ஆச்சர்யமூட்டுகிறது. வேக பந்து வீச்சாளர்கள் கை கொடுத்தால் இந்திய அணி மறுபடியும் ஒரு அசத்தல் வெற்றியை பதிவு செய்ய முடியும்..

வரலாற்று சிறப்பு மிக்க பெர்த் மைதானத்தில் 18 வயது சச்சின் டெண்டுல்கர் 1992'ல் சதம் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது..

ஒரு கிரிக்கெட் அணி என்னதான் உள்ளூரில் அசைக்க முடியாத அணியாக வலம் வந்தாலும், அதன் தனித்துவம் வெளிநாட்டு சுற்றுபயணங்களின் வெற்றியை சார்ந்தே உள்ளது.

முந்தைய காலத்து ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மட்டுமே அந்த திறமையை வெளி படுத்தி கொண்டு இருந்தன. எந்த நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும் வெல்லும் வல்லமை பெற்றன.

ஆனால் தற்போது ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து முதலான அணிகள் இந்தியா வரும் போது திணருவதும், இந்தியா மேற்கூறிய நாடுகளுக்கு செல்லும் போது அல்லல் படுவதும் வாஸ்தவமான ஒன்று தான்.

2014ல் ஆஸ்திரேலியா பயணம் மேற்கொண்ட தோனி தலைமையிலான அணி, ஆஸ்திரேலியா அணியிடம் 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரினை இழந்தது. எப்போதும் தோனி வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் தற்காப்பு ஆட்டத்தை (defensive play) வெளிப்படுத்துவார். ஆனால் கோஹ்லியோ ஆக்ரோஷத்திற்கு பெயர் போனவர்.

தற்போதைய இந்திய அணி இளம் அணியாய் இருப்பினும் வெற்றி பெறும் வல்லமை படைத்த அணியாய் தான் உள்ளது. 2014 தொடரில் தனி நபராக அசத்திய கோஹ்லி தற்போது அணியின் தலைவனாய் இந்த விதிதனை மாற்றி எழுதி சரித்திரம் படைப்பார் என்று நம்புவோம்!

இழப்பதற்கு ஏதும் இல்லை..ஆனால் வீறு கொண்டு எழுந்தால் புதியதொரு வரலாறு படைக்கலாம்..

Quick Links

Edited by Fambeat Tamil