இங்கிலாந்து அணி இன்றைய போட்டியில் பலம் வாய்ந்த அணியான இந்திய அணியை எதிர்கொள்கிறது. இந்திய அணி நடப்பு உலகக்கோப்பையில் தோல்வி அடையாத அணியாக கம்பீரமாக இருக்கிறது. இங்கிலாந்து அணி ஆரம்பத்தில் வெற்றிகளை குவித்திருந்தாலும் கடைசி இரண்டு போட்டியில் தோல்வி அடைந்து அரையிறுதி போட்டிக்கு தற்போது போராடி வருகிறது. இன்றைய போட்டியில் இந்தியாவை வென்றால் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெறும். இங்கிலாந்து அணி புள்ளிபட்டியலில் 8 புள்ளிகள் பெற்று 4வது இடத்தில் இருக்கிறது. இந்திய அணியும் தங்களது மற்றொரு வெற்றியை பதிவு செய்து ஆஸ்திரேலியாவுக்கு பிறகு இரண்டாவது அணியாக தகுதி பெறவுள்ளது. எனவே, இன்று இந்த இரு அணிகளுக்கும் இடையே நடக்கும் முக்கிய போர்கள் பற்றி காண்போம்.
1) ஜேசன் ராய் Vs முகமது ஷமி
இன்றைய போட்டியில் நடக்கும் உலகக்கோப்பை தொடரில் முதலில் நடக்கும் போரில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரரான ஜேசன் ராய் மற்றும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி போட்டியிடுகின்றனர். ஜேசன் ராய் இந்தியாவுக்கு எதிராக மீண்டும் தனது அணிக்கு களமிறங்குகிறார். மேலும் அவர் இந்த போட்டியில் தொடர்ந்து இங்கிலாந்துக்கு நல்ல தொடக்கங்களை வழங்கியுள்ளார், மேலும் அவர் ஒரு நல்ல தொடக்கத்தைப் பெறுவதில் முக்கியமாக இருக்கிறார். ஜானி பேர்ஸ்டோவுடன் ஜோடி சேர்ந்து ஜேசன் ராய் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இதையடுத்து இந்திய அணியின் சிறந்த பந்துவீச்சாளரான புவனேஷ்வர் குமார் பதிலாக களமிறங்கிய வேப்பந்துவாளர் முகமது ஷமி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி 8 விக்கெட்களை வீழ்த்தியிருக்கிறார். தற்போது ஷமி தனது மூன்றாவது ஆட்டத்தை இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாட காத்துருக்கிறார். இன்றைய போட்டியில் இவர் மீண்டும் சிறப்பாக விளையாடி தனது அணிக்கு பலத்தை சேர்ப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
2) விராட் கோலி vs ஜோஃப்ரா ஆர்ச்சர்
இரண்டாவது போர் இந்திய அணியின் கேப்டன் மற்றும் ரன் மிசின் என்றழைக்கப்படும் விராட் கோலிக்கும் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கும் நடக்கும். இந்த உலகக்கோப்பையில் விராட் கோலி சிறப்பான நிலையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் இங்கிலாந்தில் ஜோஃப்ரா அர்ச்சரும் தீவிர நிலையில் இருக்திறார். எனவே, இந்த போர் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். விராட் கோலி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் 20,000 ரன்களை எட்டி சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்து அணியில் இருக்கும் பந்துவீச்சாளர்களில் இவரை போல் இவரும் இல்லை. எனவே, இன்றைய போட்டியில் விராட் கோலி ஜோஃப்ரா அர்ச்சரின் பந்தவீச்சை நிதானமாக தான் விளையாட வேண்டும். இந்த போட்டியை எதிர்பார்த்து இரு நாடுகளின் ரசிகர்கள் இங்கிலாந்திற்கு வந்தடைந்துள்ளனர்