இங்கிலாந்து அணி இன்றைய போட்டியில் பலம் வாய்ந்த அணியான இந்திய அணியை எதிர்கொள்கிறது. இந்திய அணி நடப்பு உலகக்கோப்பையில் தோல்வி அடையாத அணியாக கம்பீரமாக இருக்கிறது. இங்கிலாந்து அணி ஆரம்பத்தில் வெற்றிகளை குவித்திருந்தாலும் கடைசி இரண்டு போட்டியில் தோல்வி அடைந்து அரையிறுதி போட்டிக்கு தற்போது போராடி வருகிறது. இன்றைய போட்டியில் இந்தியாவை வென்றால் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெறும். இங்கிலாந்து அணி புள்ளிபட்டியலில் 8 புள்ளிகள் பெற்று 4வது இடத்தில் இருக்கிறது. இந்திய அணியும் தங்களது மற்றொரு வெற்றியை பதிவு செய்து ஆஸ்திரேலியாவுக்கு பிறகு இரண்டாவது அணியாக தகுதி பெறவுள்ளது. எனவே, இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதிக்கொள்ளும் போட்டியை பற்றியும் இரு அணியின் நிலைமையையும் பற்றியும் காண்போம்.
போட்டி விவரங்கள்
தேதி: ஞாயிற்றுக்கிழமை, 30 ஜூன் 2019
நேரம்: 3:00 PM ( இந்திய நேரப்படி )
இடம்: எட்க்பாஸ்டன், பர்மிங்காம்
லீக்: 38வது லீக், ஐசிசி உலகக் கோப்பை 2019
நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் நெட்வொர்க்
ஆன்லைன் ஸ்ட்ரீமிங்: ஹாட்ஸ்டார்
இடம் புள்ளிவிவரங்கள்
சராசரி 1 வது இன்னிங்ஸ் ஸ்கோர்: 227
சராசரி 2 வது இன்னிங்ஸ் ஸ்கோர்: 181 அதிகபட்ச மொத்தம்: 408/9 (50 ஓவர்) ENG vs NZ
குறைந்தபட்ச மொத்தம்: 70/10 (25.2 ஓவர்) AUS vs ENG
Highest Chased: 280/4 (53.3 ஓவர்) AUS vs ENG
Lowest Defended: 129/7 (20 ஓவர்) IND vs ENG
நேருக்கு நேர் மோதிய கணக்கீடு
மொத்தம்: 99
இங்கிலாந்து: 41
இந்தியா: 53
சமம்: 2
முடிவற்ற: 3
உலகக்கோப்பையில் மோதிய எண்ணிக்கை
மொத்தம்: 7
இங்கிலாந்து: 3
இந்தியா: 3
சமம்: 1
அணி விவரங்கள்
இங்கிலாந்து அணி:
- ஜேசன் ராய் திரும்பி வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதாவது ஜேம்ஸ் வின்ஸ் வெளியேறுவார்.
- ஆதில் ரஷீத் அல்லது மார்க் வூட் ஆகியோருக்கு பதிலாக லியாம் பிளங்கெட் மீண்டும் வரலாம்
- புள்ளிபட்டியலில் 4வது இடத்தில் உள்ளனர்.
இந்திய அணி
- விஜய் சங்கர் பதிலாக ரிஷப் பண்ட் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- புள்ளிபட்டியலில் 2வது இடத்தில் உள்ளனர்.
முக்கிய வீரர்கள்
இந்திய அணி:
- ரோகித் சர்மா
- விராட் கோலி
- பும்ரா
இங்கிலாந்து
- ஜோ ரூட்
- ஜோஸ் பட்லர்
- ஜோஃப்ரா ஆர்ச்சர்
விளையாடப்படும் 11 வீரர்கள்
இந்திய அணி - ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, ரிஷாப் பண்ட் / விஜய் சங்கர், கேதார் ஜாதவ், எம்.எஸ்.தோனி, ஹார்டிக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா
இங்கிலாந்து அணி - ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், ஈயன் மோர்கன், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் , மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட் / லியாம் பிளங்கெட், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷீத்