இந்திய அணி ஜூன் 30 ஆம் தேதி இங்கிலாந்து அணியுடன் தனது 7 போட்டியை எதிர்கொள்கிறது. தற்போது இந்திய அணி புள்ளிபட்டியலில் 2 வது இடத்தில் உள்ளது. நடப்பு உலகக்கோப்பையின் அசைக்க முடியாத அணியாக இந்தியா திகழ்கிறது. மறுபுறத்தில், இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடர்ச்சியாக இரண்டு தோல்விகள் பெற்று இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற கடினமான இடத்தில் உள்ளது.
கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மொத்தம் 99 போட்டிகளில் மோதியுள்ளது. இதில் இந்திய அணி 53 போட்டியில் மற்றும் இங்கிலாந்து 41 போட்டியில் வெற்றிகளை பெற்றுள்ளனர். இதில் 2 போட்டிகளில் சமம் மற்றும் 3 போட்டிகள் முடிவு இல்லாமல் இருக்கிறது. உலகக்கோப்பையில் இந்த இரு அணிகளும் 7 முறை மோதியுள்ளது. இதில் இரண்டு அணிகளும் 3 போட்டியில் வெற்றியை பெற்றுள்ளனர். ஒரு போட்டி சமமாக முடிந்தது.
எனவே தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளின் புள்ளிவிவரங்கள் பற்றி காண்போம்.
புள்ளிவிரங்கள் :
# பேட்டிங்:
387/5 - 2008 ஆம் ஆண்டில் இந்த இரு அணிகளுக்கும் இடையிலான போட்டிகளில் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோர்.
1523 - யுவராஜ் சிங் அடித்த ரன்கள் இந்த இரு அணிகளுக்கும் இடையிலான போட்டிகளில் ஒரு வீரர் அடித்த அதிக ரன்கள்.
158 - 2011 இல் இங்கிலாந்து வீரர் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸின் அதிகபட்ச ரன்கள்
43 - இந்த இரு அணிகளுக்கும் இடையே உள்ள மொத்த சதங்களின் எண்ணிக்கை ஆகும்.
4 - யுவராஜ் சிங் அடித்த சதங்களின் எண்ணிக்கை. இதுவே இந்த இரு அணிகளுக்கும் இடையே தனிநபர் அடித்த அதிகபட்ச சதம்.
11 - ராகுல் டிராவிட் மற்றும் சுரேஷ் ரைய்னா அடித்த அரைசதத்தின் எண்ணிக்கை. இதுவே தனிநபரின் அதிகபட்ச அரைசதமாகும்.
33 - இந்த இரு அணிகளுக்கும் இடையிலான போட்டிகளில் ஒரு வீரர் அடித்த அதிக சிக்ஸர்களில் எம்.எஸ். தோனி அடித்த சிக்ஸர்கள்.
#பவுலிங்
40 - இந்த இரு அணிகளுக்கும் இடையிலான போட்டிகளில் ஒரு வீரர் எடுத்த அதிக விக்கெட்டுகள் ஜேம்ஸ் ஆண்டர்சன் எடுத்த விக்கெட்டுகள்.
6/23 - 2003 ஆம் ஆண்டில் ஆஷிஷ் நெஹ்ரா ஒரு வீரரின் சிறந்த பந்துவீச்சு செயல்திறன் ஆகும்.
12 - இந்த இரு அணிகளுக்கும் இடையிலான போட்டிகளில் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுள்ள எண்ணிக்கையாகும்.
2 - ஹர்பஜன் சிங் எடுத்த ஐந்து விக்கெட்டுகள் எண்ணிக்கை. இது ஒரு வீரர் எடுத்த ஐந்து விக்கெட்டுகளில் அதிக எண்ணிக்கையாகும்.
#விக்கெட் கீப்பிங்
55 - எம்.எஸ். தோனியின் ஆட்டமிழப்பின் கணக்கீடு. இது ஒரு விக்கெட் கீப்பரால் அதிகபட்சமாக ஆட்டமிழந்த எண்ணிக்கையாகும்.
6 - 2007 ஆம் ஆண்டில் எம்.எஸ். தோனி ஆட்டமிழக்கச் செய்த எண்ணிக்கை.
#பீல்டிங்
24 - பால் கோலிங்வுட் எடுத்த கேட்சுகள். இது ஒரு வீரர் எடுத்த அதிக கேட்சுகளாகும்.