கதை என்ன?
இந்திய அணியின் பேட்ஸ்மன் மற்றும் பவுலருமான விஜய் சங்கர் தனது முதல் உலகக் கோப்பை பந்தில் விக்கெட் எடுத்த முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார். விஜய் சங்கர் உயரடுக்கு பட்டியலில் மூன்றாவது பந்து வீச்சாளர் எனும் இடத்தை பிடித்துள்ளார்.
உங்களுக்கு தெரியாவிட்டால் …
இந்திய அணியின் தொடக்க வீரரான ஷிகர் தவான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக சில போட்டிகளுக்கு ஓய்வு பெற்றிருந்தார். இவரின் இடத்தை பூர்த்தி செய்வதற்கு இந்திய அணி கேப்டன் விராட் கோலி விஜய் சங்கரை தேர்ந்தெடுத்தார். விஜய் சங்கர் தனது முதல் உலகக் கோப்பை தொடரை பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையிடினார். இவர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மிடில் அர்டரில் களமிறங்கிய விஜய் சங்கர் 15 பந்துகளுக்கு 15 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக 50 ஓவரில் 5 விக்கெட்களை இழந்து 336 ரன்கள் அடித்தது இந்திய அணி. இதன் பிறகு பவுலிங்கில் களமிறங்கிய விஜய் சங்கர் தனது உலகக் கோப்பை பந்தில் இமாம்-உல்-அக் விக்கெட்டை எடுத்தார். டக்வொர்த் லூயிஸ் முறை மூலம் பாகிஸ்தானை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி.
கதைக்கரு
இந்திய அணியின் தொடக்க பந்து வீச்சாளர்களான ஜஸ்ட்ரித் பும்ரா மற்றும் புவனேஷ்வர் குமார் ஓல்ட் டிராஃபோர்டில் மேகமூட்டமான சூழ்நிலையில் இந்தியாவுக்கான பந்துவீச்சைத் தொடங்கினர். புவனேஷ்வர் குமார் தனது மூன்றாவது ஓவரை வீசும்போது, அவரது காலில் காயம் ஏற்பட்டதை உணர்ந்தார். இதன் பிறகு புவனேஷ்வர் குமார் களத்தை விட்டு வெளியேறினார். அப்போது குமார் தனது மூன்றாவது ஓவரில் நான்கு பந்துகள் மட்டும் வீசியிருந்தார்.
மீதமுள்ள ஓவரை முடிக்க இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்தை விஜய் சங்கரிடம் வீசினார். அப்போது விஜய் சங்கர் தனது முதல் பந்திலே இமாம்-உல்-அக் விக்கெட்டை எடுத்தார். இதனால், தனது முதல் உலகக் கோப்பை பந்தில் விக்கெட் எடுத்த முதல் இந்திய பந்துவீச்சாளர் மற்றும் மூன்றாவது ஒட்டுமொத்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இந்த சாதனையை நிகழ்த்திய மற்ற இரண்டு வீரர்கள் மலாச்சி ஜோன்ஸ் மற்றும் இயன் ஹார்வி ஆவார்கள்.
விஜய் சங்கர் சிறப்பாக பந்துவீசி பாகிஸ்தான் அணி கேப்டனின் சர்பராஸ் அகமது விக்கெட்டையும் பெற்றார். விஜய் சங்கர் தனது முதல் உலகக்கோப்பை தொடரிலே இரண்டு விக்கெட்களை பெற்று சிறப்பாக விளையாடினார். எனவே, அடுத்த போட்டியிலும் விஜய் சங்கர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்து என்ன ?
இந்திய அணி விளையாடிய 4 போட்டிகளில் 3 போட்டியில் வெற்றி பெற்றது. ஒரு போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது இருப்பினும் இந்திய அணி 7 புள்ளிகளை பெற்று 3ம் இடத்தில் உள்ளது. இந்திய அணி அடுத்து ஆப்கானிஸ்தான் அணியிடம் ரோஸ் பவுல் மைதானத்தில் மோதுகிறது.