உலகக் கோப்பை தொடருக்கு பின்னர், மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி ஒரு மாதகால போட்டி அட்டவணையில் விளையாட ஆயத்தமாகி உள்ளது. இந்த நீண்டகால சுற்றுப்பயணத்தில் 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு பிறகு, டெஸ்ட் தொடர் துவங்கி இருக்கின்றது. எனவே, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரு டெஸ்ட் போட்டிகளும் வரும் 22ம் மற்றும் 30 தேதிகளில் முறையே ஆன்டிகுவா மற்றும் ஜமைக்காவில் நடைபெற உள்ளன. இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணி எப்போதும் உள்ளது போலவே பலமிக்க அணியாக திகிழ கருத்திற்கொண்டு எந்த ஒரு அனுபவம் வீரருக்கும் ஓய்வு அளிக்கப்படவில்லை. பந்து வீச்சு மற்றும் மிடில் ஆர்டரில் சிறந்து விளங்கும் இந்திய அணி தொடக்க பேட்ஸ்மேன்கள் தரப்பில் சற்று வலுவிழந்து காணப்படுகிறது. ஏனெனில், பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் இந்த தொடரில் இடம் பெறவில்லை.
இவர்களுக்கு மாற்றாக மயங்க் அகர்வால் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர். கடந்த சில வருடங்களாக டெஸ்ட் போட்டிகளில் சிறந்து விளங்கும் கே.எல்.ராகுல் தொடக்க வீரர்களில் ஒருவராக நிச்சயம் களம் காண்பார் என எதிர்பார்க்கபடுகிறது. ஆஸ்திரேலிய தொடரில் அறிமுகம் கண்டு அனைவரது பார்வையையும் தன் பக்கம் இழுத்த மயங்க் அகர்வால் தொடக்க வீரராக தொடர்ந்து களம் இறக்கப்படும் வாய்ப்பும் உள்ளது.
இருப்பினும், பல்வேறு விதமான தொடக்க வீரர்கள் இந்திய அணியின் பரிசீலனையில் உள்ளது. எனவே, இந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் களமிறக்கப்பட வாய்ப்புள்ள மூன்று வீரர்களை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#1.அனுபவ தொடக்க வீரரான கே.எல்.ராகுலை களமிறக்கலாம்:
ஒட்டுமொத்த இந்திய அணி நிர்வாகம் கே.எல்.ராகுல் முக்கிய தொடக்க வீரராக கருதிக் கொண்டிருக்கும் நிலையில், இவருடன் மயங்க் அகர்வால் இரண்டாவது தொடக்க வீரராக களம் இறக்கப்படலாம். இருப்பினும், அருமையான பந்துவீச்சு கூட்டணியை திறம்பட சமாளிக்கும் திறன் இவரிடம் இல்லாதது மிகப் பெரும் ஏமாற்றத்தை அணி நிர்வாகத்திற்கு அளிக்கிறது. இவர் குறுகிய கால போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு இருந்தாலும் கடந்த இரு வருடங்களாக டெஸ்ட் போட்டிகளில் வழங்கப்பட்ட வாய்ப்பினை சற்று வீண் அளித்துள்ளார் என்றும் கூறலாம். அப்படி இருப்பினும், அணி நிர்வாகம் இவர்கள் மேல் வைத்த நம்பிக்கையை பூர்த்தி செய்யும் விதமாக செயல்படுவார் என எதிர்பார்க்கலாம். கடந்த மாதம் நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரிலும் கூட தொடக்க வீரராக களம் இறக்கப்பட்ட இவரது ஃபார்ம் சற்று உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
#2 அனுமன் விகாரி அல்லது புஜாராவை தொடக்கம் காண அழைக்கலாம்:
கடந்த கால டெஸ்ட் தொடர்களில் அணியின் பிரதான டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் காயம் அல்லது ஃபார்ம் இன்றி தவித்த போது சில மாற்று வீரர்களை களம் இறக்கி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவற்றில், சில வெற்றியும் கண்டுள்ளது இந்திய அணி. இனிவரும் காலங்களில் இளம் வீரரான பிரித்வி ஷா நிலையான தொடக்க வீரராக களம் இறங்குவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வேளையில், தற்போது ஊக்கமருந்து பிரச்சனையில் சிக்கி ஏமாற்றம் அளித்துள்ளார். இருப்பினும், இவ்வகையான மாற்று வீரர்களை களமிறக்கி சோதனைகள் மேற்கொள்வது எல்லாம் நிச்சயம் நீண்ட கால தீர்வாக அமையாது. இதனால், இந்திய அணி நிர்வாகம் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்டான புஜாரா அல்லது ஆல்ரவுண்டர் ஹனுமன் விகாரையை தொடக்க வீரராக களம் இருக்கலாம். அவர்களுக்கு பின்னர், மிடில் ஆர்டரில் ரோஹித் ஷர்மா உள்ளார். அணியில் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய இறுதிகட்ட பேட்ஸ்மேன்களாக உள்ளமையால் சிறிதும் தயக்கமின்றி மேற்கண்ட வீரர்களை தொடக்க வீரர்களாக களமிறக்கி சோதனையை மேற்கொள்ளலாம்.
#3.ரோகித் சர்மாவை தொடக்க வீரராக களம் இறக்கலாம்:
சர்வதேச டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் உலகின் தலைசிறந்த தொடக்க வீரராக களம் இறங்கும் ரோஹித் சர்மா, டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி தற்போது விளையாடி வருகிறார். லாவகமாக ஷாட்களை அடித்து ரன்களை குவிக்கும் திறன் பெற்ற இவர், தொடக்க வீரராக களம் இருப்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. மற்ற தரப்பு போட்டிகள் காட்டிலும் டெஸ்ட் போட்டிகளில் இவர் சிறப்பாக செயல்படாமல் இருக்கலாம். இருப்பினும், இவர்கள் மேற்கொண்டு வாய்ப்புகளை அளித்து அணியை பலப்படுத்த வேண்டும். இவருடன் மயங்க் அகர்வால் தொடக்கம் காண முற்படலாம். ஒருவேளை ரோகித் சர்மா தொடக்க வீரராக அதிக ரன்களைக் குவித்தால், இந்திய டெஸ்ட் அணிக்கு கூடுதல் உற்சாகத்தை அளிக்கும்.