2019 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோல்வியை தழுவி வெளியேறியது இந்திய அணி. இதனால் உலகின் கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களின் நம்பிக்கை முடிவுக்கு வந்தது. ஆச்சரியமூட்டும் வகையில் தற்போது அனைவரது கவணமும் இந்திய அணியின் எதிர்கால உலகக்கோப்பை தொடருக்கு சென்றுள்ளது.
எனவே இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்கள் தேர்வு போன்றவற்றில் இந்திய அணி நிர்வாகம் அதிக கவனம் செலுத்தியுள்ளது. உலகக்கோப்பை அரையிறுதியில் ஏற்பட்ட தோல்விக்கு பின்னர் அடுத்ததாக இந்திய மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது. இந்த அணியில் யார் யார் இடம் பெறுவார்கள் என அனைத்து ரசிகர்களின் இமைகளும் நோக்கியுள்ளன.
இதற்கிடையில் இந்திய தேர்வுக்குழு தலைவர்கள் இன்று மும்பையில் அலோனை கூட்டம் ஒன்றை நடத்தி நன்றாக கலந்தாலோசித்து மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடருக்கான டி20, ஓடிஐ, டெஸ்ட் என மூன்று வகையான அணியை தேர்வு செய்து வெளியிட்டுள்ளனர்.
இந்திய டி20 அணி
இந்திய ஒருநாள் அணி
இந்திய டெஸ்ட் அணி
விராட் கோலி மூன்று வகையான கிரிக்கெட்டிலும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மகேந்திர சிங் தோனி இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் இரு மாதங்கள் ஓய்வு கேட்டிருந்ததால் அவர் அணியில் இடம்பெறவில்லை. கூடுதலாக ஹர்திக் பாண்டியாவிற்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. ஜாஸ்பிரிட் பூம்ராவிற்கு டி20 மற்றும் ஓடிஐ தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் சில புதுமுக வீரர்கள் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் இடம்பெற்றுள்ளனர். நாம் இங்கு யாரும் எதிர்பாராத வகையில் இந்திய தேர்வுக்குழு தேர்வு செய்துள்ள 3 தேர்வுகளைப் பற்றி காண்போம்
#3 வாஷிங்டன் சுந்தர் - டி20 அணி
வாஷிங்டன் சுந்தர் சற்று நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திய டி20 அணியில் இடம்பெற்றுள்ளார். ஆஃப் ஸ்பின்னரான இவர் தற்போது மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய-ஏ அணியில் விளையாடி வருகிறார். கரேபியன் மண்ணில் இவரது ஆட்டத்திறன் மிகவும் சிறப்பாக உள்ள காரணத்தால் இந்திய தேர்வுக்குழு இம்முடிவை எடுத்துள்ளது எனத் தெரிகிறது.
வாஷிங்டன் சுந்தர் மேற்கிந்தியத் தீவுகள்-ஏ அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்திய அணி இவரை ஒரு ஆல்-ரவுண்டராக காணமல் ஒரு ஆஃப் ஸ்பின்னராகவே காண்கிறது.
வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றுள்ள இந்திய டி20 அணியில் ஏற்கனவே 3 சுழற்பந்து ஜாம்பவான்கள் இடம்பெற்றுள்ளனர். எனவே இவரை ஒரு மாற்று வீரர் கணக்கிலே இந்திய தேர்வுக்குழு அணியில் சேர்த்துள்ளது எனலாம்.
மேலும் வாஷிங்டன் சுந்தரிடமிருந்து சிறப்பான பேட்டிங் திறன் இதுவரை வெளிபட்டது இல்லை. க்ருநல் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா போன்ற சிறப்பான ஆல்-ரவுண்டர்கள் போல் வாஷிங்டன் சுந்தரின் ஆட்டத்திறன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக அக்சர் படேலை அணியில் சேர்த்திருக்கலாம். ஏனெனில் மேற்கிந்தியத் தீவுகள்-ஏ அணிக்கு எதிரான தொடரில் அற்புதமான பேட்டிங் மற்றும் பௌலிங்கை வெளிபடுத்தியுள்ளார். வாஷிங்டன் சுந்தர் ரசிகர்களின் நகைப்பிற்கு பதிலடி அளிக்கும் விதமாக இத்தொடரில் ஆட்டத்திறனை வெளிபடுத்துவாரா என்பதனை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
போதுமான ஆட்டத்திறனை வெளிபடுத்தும் அளவிற்கு சிறந்த வீரர்கள் இந்திய டி20 அணியில் இருப்பதால் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்புகள் கிடைப்பது சற்று அரிதான நிகழ்வாகும்.
#2 கேதார் ஜாதவ் - ஒருநாள் அணி
கேதார் ஜாதவின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை விளிம்பில் உள்ளது. உலகக்கோப்பை தொடரில் எதிர்பார்த்த அளவிற்கு அவரிடமிருந்து அதிரடி ஆட்டம் வெளிப்படவில்லை. அவருக்கு அளிக்கப்பட்ட பல சந்தர்ப்பங்களை அவர் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை.
உலகக்கோப்பை தொடரில் கடைநிலையில் இவரது நிதான பேட்டிங் காரணத்தால் இந்திய அணி சற்று வலுவிலந்தததுபோல் தெரிந்தது. உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் ஆரம்ப போட்டிகளில் இடம்பெற்றிருந்த இவர், கடைநிலைப் போட்டிகளிலிருந்து நீக்கப்பட்டார். ஏனெனில் இந்தியா அந்த சமயத்தில் அதிக பேட்டிங்கை எதிர்பார்த்தது.
அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டதையடுத்து கேதார் ஜாதவின் ஓடிஐ கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக அனைவரும் நினைத்தனர். ஆனால் இந்திய தேர்வுக்குழு தற்போது மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரின் ஓடிஐ அணியில் வாய்ப்பளித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக கேதார் ஜாதவின் இந்திய அணிக்கு குறிப்பிடும்படியான அற்புதமாக பங்களிப்பை அளித்துள்ளார். இந்திய அணியில் சுழற்பந்து வீச்சுடன் சேர்ந்து பேட்டிங்கையும் வெளிபடுத்தும் வகையில் ரவிந்திர ஜடேஜா மட்டுமே உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக பகுதிநேர பௌலராக கேதார் ஜாதவ் உள்ளார்.
இவருக்கு இடையிடயே ஏற்படும் காயங்கள் காரணமாக இந்திய அணியில் தொடர்ந்து சீராக விளையாட இயலவில்லை. மேலும் கேதார் ஜாதவிற்கு தற்போது 34 வயதாகிறது, 2023 வரை உலகக்கோப்பை தொடரில் இவர் இந்திய அணியில் இடம்பெற்றால் அவருக்கு வயது 38ஆக இருக்கும்.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கேதார் ஜாதவ் இடம்பெற்றிருப்பது உண்மையாகவே ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இவரது கிரிக்கெட் வாழ்வை தேர்வுக்குழு நீட்டத்துள்ளதை பார்க்கும் போது ஏதேனும் கிரிக்கெட் சூழ்ச்சியை தேர்வுக்குழு கையாளும் நோக்கத்தில் கூட இவ்வாறு செய்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.
#1 ரோகித் சர்மா - டெஸ்ட் அணி
மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் செய்ய உள்ள இந்திய அணியில் மிகப்பெரிய ஆச்சரியமூட்டும் தேர்வு என்னவென்றால் ரோகித் சர்மா-வை டெஸ்ட் அணியில் சேர்த்ததுதான். வலதுகை பேட்ஸ்மேனான இவர் ஓடிஐ மற்றும் டி20யில் மட்டுமே பங்கேற்று வந்தார். ஆனால் இவர் டெஸ்ட் அணியில் நீண்ட காலங்களுக்கு பின்னர் இடம்பெற்றுள்ளார்.
தற்போது ரோகித் சர்மா 39.62 பேட்டிங் சராசரியை டெஸ்டில் வைத்துள்ளார். தேர்வுக்குழு இதனை கணக்கில் எடுத்துக் கொள்ளமல் அவருடைய டெஸ்ட் சதங்களை கவணித்துள்ளது என்றே கூறலாம். ஏனெனில் ரோகித் சர்மா விளாசியுள்ள 3 டெஸ்ட் சதங்களில் 2 டெஸ்ட் சதங்கள் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மற்றொரு சதம் நாக்பூரில் நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் வந்தது. ஆனால் இந்திய ஓடிஐ துனைக்கேப்டன் ரோகித் சர்மா விளையாடியுள்ள 47 டெஸ்ட் இன்னிங்ஸில் ஆசிய கண்டத்திற்கு வெளியே 3 முறை மட்டுமே 50+ ரன்கள் வந்துள்ளது சற்று வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
சற்று கடினமான ஆடுகளத்தில் இவரது பேட்டிங் பெரும்பாலும் சற்று சுமாராகவே இருந்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா தன்னை தற்போது வரை முழுவதும் நிருபிக்கவில்லை என்றே கூற வேண்டும்.
இவர் கடைசியாக விளையாடிய டெஸ்ட் போட்டியில் அரைசதம் விளாசியுள்ளார். அதிக பேட்ஸ்மேன் வேண்டும் என அணி நிர்வாகம் விரும்பிய காரணத்தால் அப்போட்டியில் ரோகித் சேர்க்கப்பட்டார்.
இவ்வருட தொடக்கத்தில் இந்திய டெஸ்ட் அணி தங்களது அருமையான ஆட்டத்தை வெளிபடுத்தி தங்களை நிருபித்துள்ளனர்.
2019 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மாவின் அற்புதமான பேட்டிங்கிற்கு ஊக்கமளிக்கும் வகையில் அவரை இந்திய டெஸ்ட் அணியில் தேர்வுக்குழு தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டானது, ஓடிஐ/டி30 கிரிக்கெட்டை விட முற்றிலும் மாறுபட்டதாகும். இதனை ரோகித் எதிர்த்து விளையாடுவாரா என்பதை பொறுத்திருந்துதான் காண வேண்டும்.
ஆகஸ்டில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா களமிறக்கப்பட்டால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறங்குவார். ரோகித் சர்மா எத்தகைய மைதனமாக இருந்தாலும் சரி, எந்த வகை கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி தன்னை அதற்கேற்றவாறு மாற்றிக் கொள்ளும் திறமை கொண்டவர் என்பதனை நாம் மறந்துவிடக் கூடாது.