இந்தியா vs மேற்கிந்தியத் தீவுகள் டி20 தொடர்: சுவாரஸ்யமான உண்மைகள் மற்றும் புள்ளிவிவரங்கள்

Champion's team India
Champion's team India

டி20 ஜாம்பவான்கள் என்றால் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் முதலில் ஞாபகம் வருவது மேற்கிந்தியத் தீவுகள் அணிதான்.ஆனால் தற்போது அது முற்றிலும் மாறுபட்டுள்ளது.2016 டி20 உலகச் சேம்பியன் அணி இந்திய அணியிடன் டி20 தொடரில் 3-0 வைட்வாஷ் ஆகியுள்ளது.அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரையும் இழந்துள்ளது.2 மாத கால இந்திய தொடரில் ஒரு வெற்றியை தவிர்த்து வெறுங்கையுடன் மேற்கிந்தியத் தீவுகள் அணி அவர்களுடைய நாட்டிற்கு திரும்பியுள்ளது.

இந்திய அணியின் வழக்கமான கேப்டன் கோலிக்கு டி20 தொடரில் ஓய்வளிக்கப்பட்டது .ரோகித் சர்மா டி20 போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தினார்.இந்திய பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சாளும் , தினேஷ் கார்த்திக்கின் பொறுப்பான ஆட்டத்தாலும் கல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெற்ற மேற்கிந்தியத்தீவுகளுக்கெதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி தனது வெற்றியை பதிவு செய்தது. அதைத்தொடர்ந்து இரண்டாவது டி20 போட்டியில் கேப்டன் ரோகித்தின் அதிரடி சதத்தினால் எளிதாக வென்று தொடரை கைப்பற்றியது.முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 195 ரன்களை சேர்த்தது.அடுத்து களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி பேட்டிங்கில் சொதப்பியதால் 71 என்ற மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

கடைசி டி20போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி பேட்டிங் செய்து 181 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.ஆனால் அப்போட்டியும் இந்திய அணிக்கு சாதகமாகவே அமைந்தது.தவான-ரிஷப் ஃபண்ட் ஜோடியின் அற்புதமான பார்ட்னர் ஷிப்பினால் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஆறுதல்வெற்றி கனவு கனவாகவே போனது.ஆனால் ஆட்டத்தின் இறுதி பந்துவரை மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆறுதல் வெற்றிக்காக போராடிங்கொண்டுதான் இருந்தது.

நாம் இங்கு இந்த தொடரின் புள்ளிவிவரங்களை நாம் இங்கு காண்போம்.

901- இந்த தொடரில் அடித்த மொத்த ரன்கள்

82- இந்த தொடரில் அடித்த மொத்த பவுண்டரிகள்,ஷிகர் தவான் அதிக பவுண்டரிகளை இந்த தொடரில் விளாசியுள்ளார்(13)

1- ரோகித் சர்மா மட்டுமே இந்தத் தொடரில் சதத்தினை விளாசியுள்ளார்.

28-இந்த தொடரில் அடித்த மொத்த சிக்சர்கள்.ரோகித்சர்மா அதிக சிக்சர்களை இந்த தொடரில் விளாசியுள்ளார் (7)இந்த தொடரில் அடித்த மொத்த பவுண்டரிகள்,ஷிகர் தவான் அதிக பவுண்டரிகளை இந்த தொடரில் விளாசியுள்ளார்(13)

3- இந்தத் தொடரில் அடித்த மொத்த அரைசதங்கள்.(தவான்,ரிஷப் ஃபண்ட், நிக்கோலஸ் பூரான்)

111* ரோகித் சர்மா 2வது டி20 போட்டியில் தனிநபராக விளாசிய ரன்கள்,இதுவே இத்தொடரில் தனிநபர் ஒருவரின் அதிக ரன்கள் ஆகும்

138-ஷிகர் தவான் இந்தத் தொடரில் அடித்த மொத்த ரன்கள்.இதுவே இந்தத் தொடரில் ஒரு வீரரின் மொத்த அதிக ரன்கள் ஆகும்.

60.50-இந்தத்தொடரில் ரோகித் சர்மாவின் பேட்டிங் சராசரி ஆகும்.இதுவே இந்தத் தொடரில் ஒருவீரரின் அதிகபட்ச பேட்டிங் சராசரி ஆகும்.

233.33 இந்தத் தொடரில் குறுனால் பாண்டியாவின் பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட்டாகும்.இதுவே இந்தத் தொடரில் ஒருவீரரின் அதிகபட்ச பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட்டாகும்.

195/2- இந்திய அணி தனது இரண்டாவது டி20 போட்டியில் அடித்த ரன்கள் ஆகும்.இதுவே இந்தத்தொடரில் ஒரு அணியின் அதிகபட்ச ரன்னாகும்.

109/8-மேற்கிந்தியத் தீவுகள் அணி தனது முதல் டி20 போட்டியில் அடித்த ரன்னாகும்.இதவே இந்தியாவிற்கெதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி அடித்த குறைவான ரன்னாகும்.

130- மூன்றாவது டி20 போட்டியில் தவான்- ரிஷப்பண்ட் பார்ட்னர் ஷிப் ரன்கள் ஆகும்.இதுவே இந்த தொடரில் அதிகபட்ச பார்ட்னர் ஷிப் ரன்னாகும்.

31- இந்தத் தொடரில் வீழ்த்தப்பட்ட மொத்த விக்கெட்டுகள்

5-குல்திப் யாதவ் எடுத்த மொத்த விக்கெட்டுகள்.இதுவே இந்ததொடரில் தனிநபர் ஒருவரின் அதிக விக்கெட்டுகளாகும்

3/13- முதல் டி20 போட்டியில் குல்திப்யாதவின் பந்து வீச்சு.இதுவே இந்தத்தொடரில் மிகச்சிறந்த பந்துவீச்சாகும்

9.0- இந்த தொடரில் குல்திப்யாதவின் பௌலிங் சராசரி ஆகும்.இதுவே இந்த தொடரில் ஒரு வீரரின் மிகக்குறைந்த பந்துவீச்சின் சராசரி ஆகும்.

5.62-இந்த தொடரில் குல்திப்யாதவின் பௌலிங் எகனாமிஆகும்.இதுவே இந்த தொடரில் ஒரு வீரரின் மிகக்குறைந்த பந்துவீச்சின் எகானமி ஆகும்.

9.6- இந்த தொடரில் குல்திப்யாதவின் பௌலிங் ஸ்ட்ரைக் ரேட்டாகும்.இதுவே டி20 போட்டிகளில் இவரது அதிகபட்ச பௌலிங் ஸ்ட்ரைக் ரேட்டாகும்

தனிப்பட்ட சாதனைகள்:

RoHIT
RoHIT

ரோகித் சர்மா 111* ரன்கள் விளாசிய போது சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணியில் அதிக ரன்களை குவித்த கோலியின் சாதனை முறியடித்து முதல் இடத்திற்கு முன்னேறினார்.

ரோகித் சர்மாவின் 111* சர்வதேச டி20 போட்டிகளில் அவரது நான்காவது சதமாகும். இதுவே சர்வதேச டி20 போட்டிகளில் தனிநபரின் அதிகபட்ச சதங்களாகும்.

ரோகித் சர்மா 2வது டி20 போட்டியில் 111* ரன்களை விளாசினார்.அத்துடன் அதே போட்டியில் 3 கேட்சுகளை பிடித்து அசத்தினார்.உலகில் சர்வதேச டி20 போட்டியில் ரோகித் சர்மா மட்டுமே ஒரே போட்டியில் 111* மற்றும் மூன்று கேட்சுகளையும் பிடித்த ஒரே வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

எழுத்து : நிஷாந்த் கண்ணன்

மொழியாக்கம்: சதீஸ்குமார்

Quick Links

Edited by Fambeat Tamil
Sportskeeda logo
Close menu
WWE
WWE
NBA
NBA
NFL
NFL
MMA
MMA
Tennis
Tennis
NHL
NHL
Golf
Golf
MLB
MLB
Soccer
Soccer
F1
F1
WNBA
WNBA
More
More
bell-icon Manage notifications