இந்திய அணியின் தற்போதைய சிறந்த ஆஃப் ஸ்பின்னராக உள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் டிசம்பர் 26ஆம் தேதி நடக்கவுள்ள 3வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பது சந்தேகம் தான் என இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். அத்துடன் இடது கை ஆஃப் ஸ்பின்னர் மற்றும் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா-வும் சிறு தோல்பட்டை வலியினால் அவதிபட்டு வருகிறார்.
ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வயிற்று பகுதியில் ஏற்பட்ட திரிபினால் பெர்த்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்தது.
இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இன்று கூறியதாவது : டெஸ்ட் போட்டிகளில் 342 விக்கெட்டுகள் மற்றும் 4 சதங்களை விளாசியுள்ள சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினின் உடல்நிலை அடுத்த 48 மணி நேரங்களுக்கு முழுவதுமாக கண்காணிக்கப் படும்.
அஸ்வினுக்கு பதிலாக இடதுகை சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா ஒரு சரியான மாற்று வீரராக இருப்பார். மெல்போர்ன் மைதானம் பொதுவாக பேட்ஸ்மேன்-களுக்கு உகந்ததாக இருக்காது.
ரவீந்திர ஜடேஜா ஆஸ்திரேலியா வந்த பிறகு அவரது தோல்பட்டையில் ஏற்பட்ட வலியினால் ஊசி போடப்பட்டது . அதனால்தான் அவரை அணியின் நிர்வாகம் பெர்த் டெஸ்டில் விளையாட அனுமதியளிக்கவில்லை.
பெர்த் டெஸ்டில் இந்திய அணியில் நான்கு வேகப்பந்து வீச்சாளர்களை விளையாட வைத்ததை பலரும் விமர்சித்தனர். ஆஸ்திரேலிய ஆஃப் ஸ்பின்னர் நாதன் லயான் பெர்த் டெஸ்டில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதினை வென்றது குறிப்பிடத்தக்கது.
பெர்த் டெஸ்டில் ஜடேஜா -வின் உடல்நிலை 70-80 சதவீதம் மட்டுமே சரியாக இருந்தது. அதனால் நாங்கள் அவரை பெர்த் டெஸ்டில் எடுத்து மேலும் ஆபத்து ஏற்பட நாங்கள் விரும்பவில்லை. எனவே அவரை பெர்த் டெஸ்டில் வெளியே உட்கார வைக்கப்பட்டார் என ரவீ சாஸ்திரி கூறினார். ஜடேஜா தற்போது வரையிலும் சிறிது தோல் பட்டையில் சிறிது வலியை உணர்ந்து வருவதாக கூறுகிறார். அவருக்கு மீண்டும் ஊசி உட்செலுத்தப்பட்டால் அவர் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு சற்று நேரம் ஆகிறது.
ஹார்திக் பாண்டியா தற்போது காயத்திலிருந்து மீண்டு தனது உடல்தகுதியை ரஞ்சிக்கோப்பையில் நிரூபித்துள்ளார். அடிலெய்டு மற்றும் பெர்த் ஆகிய இரு டெஸ்டிலும் விளையாடத இவர் ஹனுமா விகாரிக்கு பதிலாக பேட்டிங் வரிசை 6ல் களமிறக்கப்பட வாய்ப்புள்ளது. அதிகம் மதிப்பிடப்பட்டுள்ள வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான இவர் செப்டம்பரிலிருந்து ஒரேயொரு முதல் தர கிரிக்கெட் போட்டியில் மட்டுமே பங்கேற்றுள்ளார்.
மற்றொரு மாற்று வீரராக ரோகித் சர்மா தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது. இவர் ஏற்கனவே அடிலெய்டு டெஸ்ட்டில் பங்கேற்று முதல் இன்னிங்சில் 36 ரன்களை விளாசியுள்ளார். அத்துடன் அப்போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது. அப்போட்டியில் ஃபீல்டிங் செய்யும் போது ஏற்பட்ட முதுகுவலியினால் பெர்த் டெஸ்டில் அவருக்கு ஓய்வளிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியா அணி முதல் இரண்டு டெஸ்ட்டில் விளையாடிய அதே அணியுடன் அடுத்து நடைபெறவுள்ள இரு டெஸ்ட் போட்டியிலும் பங்கேற்க உள்ளது. வரும் டிசம்பர் 25ஆம் தேதி ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் ஆடும் XIஐ தெரிவிப்பார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரோன் ஃபின்ச் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது இஷாந்த் ஷர்மா வீசிய பந்து நேரடியாக அவரது விரலை தாக்கியதால் ரிட்டயர்டு - ஹார்ட் ஆனார். தற்போது அவர் சரியாகி விட்டதாகவும் மெல்போர்ன் டெஸ்ட்டில் அவர் ஒரு நட்சத்திர தொடக்க வீரராக அசத்துவார் எனவும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.
எழுத்து : அசோஸியேட் பிரஸ்
மொழியாக்கம் : சதீஸ்குமார்