இன்று நடைபெற்ற டி-20 போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி தனது மோசமான சாதனைக்கு ஒரு முடிவு கட்டியது. இந்த வெற்றியை பற்றியும் அந்த மோசமான சாதனையை பற்றியும் இங்கு காண்போம்.
இந்திய அணி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த அணியாக விளங்கி வருகிறது. இந்திய அணி தனது சொந்த மண்ணிலும், அயல்நாட்டு மண்ணிலும் பல தொடர்களை கைப்பற்றி மிகச் சிறந்த அணியாக திகழ்ந்து வருகிறது. அது மட்டுமின்றி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பல ஜாம்பவான்கள், இந்த ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பை தொடரில் இந்திய அணி தான் வெற்றி பெறும் என்று கூறி வருகின்றனர். இவ்வாறு பலரும் கூறும் அளவிற்கு இந்திய அணி கிரிக்கெட்டில் நம்பர் – 1 அணியாக திகழ்ந்து வருகிறது. ஆனால் இந்திய அணி மோசமான சாதனை ஒன்றையும் வைத்துள்ளது. அது என்னவென்றால் நியூசிலாந்து மண்ணில் ஒருமுறை கூட டி-20 போட்டியில் நியூசிலாந்து அணியை வென்றது இல்லை. ஆனால் அந்த மோசமான சாதனையை தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது இந்தியா.
இந்திய அணி தற்போது நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடி வருகிறது. இந்த ஒருநாள் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்பு இந்த டி-20 தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி படு தோல்வி அடைந்தது. இந்நிலையில் இரண்டாவது போட்டி இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்ய ஆரம்பித்த நியூசிலாந்து அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அதிரடி தொடக்க ஆட்டக்காரரான முன்ரோ, மற்றும் கேப்டன் கேன் வில்லியம்சன் விரைவிலேயே தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறினர். கிராண்ட் ஹோம் மற்றும் ராஸ் டெய்லர் சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 158 ரன்களை அடித்து நியூசிலாந்து அணி. 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி.
நமது இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான தவான் மற்றும் ரோகித் சர்மா தொடக்கத்திலேயே அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர். அதிரடியாக 4 சிக்சர்களை விளாசிய ரோகித் சர்மா 29 பந்துகளில் அரை சதம் விளாசி அவுட் ஆகி வெளியேறினார். அதன் அதன்பின்பு ரிஷப் பண்ட் நிலைத்து நின்று விளையாடி 40 ரன்களை அடித்து அணியை வெற்றி பெற செய்தார். இந்த இலக்கை 19 ஓவர்களில் இந்திய அணி அடித்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மிக சிறப்பாக பந்துவீசிய குருணால் பாண்டியாவிர்க்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து மண்ணில், இந்திய அணி வைத்திருந்த தனது மோசமான சாதனைக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது.