இந்திய அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்க்கொண்டு 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று பை ஓவல் மைதானத்தில் துவங்கியது டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது இந்திய அணி. இதன்படி துவக்க வீரர்களான ரோகித் மற்றும் தவான் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடி அரை சதம் விளாசினர். பின்னர் களமிறங்கிய கேப்டன் கோலி 43 ரன்களும், ராயுடு 47 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய தோனி அதிரடியாக ஆடி 48 ரன்கள் குவித்து ஆட்டத்தை பினிஷ் செய்தார். இதன் மூலம் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 324 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பில் களமிறங்கிய அனைத்து பேட்ஸ்மேன்களும் சிறப்பாக ஆடியதால் இன்று பல சாதனைகள் படைக்கப்பட்டன.
#1) இந்திய அணியின் டாப்-5 வீரர்கள் 40+ ரன் குவிப்பது இதுவே முதல் முறை
இந்திய அணியில் இன்றைய போட்டியில் இந்திய டாப் – 5 வீரர்களான ரோகித் சர்மா, தவான், விராத் கோலி, அம்பத்தி ராயுடு மற்றும் தோனி ஆகியோர் இன்றைய போட்டியில் 40க்கும் மேற்ப்பட்ட ரன்களை குவித்தனர். இந்திய வீரர்கள் 5 பேர் 40+ ரன் குவிப்பது வரலாற்றில் இதுவே முதல்முறை. இந்த போட்டியில் இவர்கள் குவித்த ரன்கள் முறையே 87, 66, 43, 47 மற்றும் 48* ஆகும்.
#2) இந்த வருடத்தில் அதிக சராசரி வைத்திருக்கும் வீரர் தோனி
இந்திய அணியின் விக்கெட் கீப்ரான தோனி கடந்த வருடம் ஒருநாள் போட்டிகளில் சரியாக ஆடாததால். அனைவராலும் பெரிதும் விமர்சிக்கப்பட்டார். இதற்கு பதிலடி தரும்படி இந்த வருடத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரின் 3 போட்டிகளிலும் அரைசதம் விளாசி அந்த தொடரின் தொடர் நாயகன் விருதையும் பெற்றார். அதுமட்டுமின்றி இன்று நடைபெற்ற போட்டியில் கடைசி கட்டத்தில் களமிறங்கிய தோனி அதிரடியாக விளையாடி 33 பந்துகளில் 48 ரன்கள் குவிதது ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் இந்த வருடத்தில் அவரது சராசரி 241 வைத்திருப்பது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
தோனியின் இந்த வருட ரன்கள் 51, 55*, 87*, 48*.
#3) ப்ரைன் லாராவை முந்திய தோனி
தோனி இன்றைய போட்டியில் 48* ரன்கள் குவித்ததின் மூலம் மற்றுமொரு சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார். அது என்னவெனில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ப்ரைன் லாரா- வின் 10405 ரன்களை முறியடித்து 10414 ரன்கள் குவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ப்ரைன் லாரா-வை விட குறைந்த இன்னிங்ஸ்ல் அதிக சராசரியுடன் இந்த சாதனையை படைத்துள்ளார் தோனி.
#4) அசாருதின்-ஐ முந்திய தோனி
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் முன்னாள் வீரரான அசாருதின் 334 போட்டிகள் விளையாடி உள்ளார். இந்த சாதனையை தோனி இன்றைய போட்டியில் முறியடித்தார்