கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச்சாளர்கள் தாங்கள் களமிறக்கும் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்ற நினைத்து பந்து வீசுவார்கள் . ஆனால் அனைவருக்கும் அவர்கள் நினைத்தது போல் விக்கெட்டுகள் விழுவதில்லை. கிரிக்கெட் போட்டிகளில் பந்து வீச்சாளர் 4 விக்கெட்டுகளை வீழ்த்துவது என்பது மிகவும் அரிது. ஆனால் இந்திய அணியின் சுழல் பந்து வீச்சாளர்கள் பல முறை இதனை நிகழ்த்தியுள்ளனர். இவ்வாறு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிகமுறை 4 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய சுழல் பந்து வீச்சாளர்களின் தொகுப்பை இங்கு காணலாம்.
#) ஹர்பஜன் சிங் – 5 முறை
இந்திய அணியில் கங்குலி தலைமையிலான இந்திய அணியில் முக்கிய சுழல் பந்துவீச்சாளராக வலம் வந்தவர் ஹர்பஜன் சிங். இவர் அறிமுகமான காலகட்டங்களில் இந்திய அணிக்காக பல விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி வந்தார். அதுமட்டுமின்றி ஹாட்ரிக் விக்கெட் , இவரது பேட்டிங் தன்மை மூலம் இந்திய அணியில் நிரந்தர இடத்தினை பிடித்தார். இவர் இந்த வரிசையில் 5 வது இடம் வகிக்கிறார். இவர் ஒருநாள் போட்டிகளில் 5 முறை 4 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இப்படிப்பட்ட இவர் இன்னும் ஓய்வு பெறாத நிலையில் இவருக்கு அணியில் இடமின்றி தவிக்கிறார்.
#) குல்தீப் யாதவ் – 5 முறை
தற்போதைய இந்திய அணியின் சைனோ மேன் என அழைக்கப்படுபவர் குல்தீப் யாதவ். இவரது அசாத்திய சுழல் பந்து வீச்சால் எதிரணியை கலங்கச் செய்பவர் இவர். இதற்கு காரணம் இவரது வித்தியாசமான பந்து வீச்சே. இழர் கூக்ளி, கேரம் பால், லெக் பிரேக் என அனைத்து விதமான பந்துகளையும் வீசுவதால் எதிரணி வீரர்கள் எளிதில் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுக்கின்றனர். தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இவர் தொடர்ந்து இரண்டு போட்டிகளிலும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இந்த வரிசையில் 4 வது இடம் வகிக்கிறார். குறைந்த ஆட்டங்களே விளையாடி உள்ள இவர் கூடிய விரைவில் இந்த வரிசையில் முதலிடத்தை பிடிப்பார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
#) சச்சின் டெண்டுல்கர் - 6 முறை
இதைப் படித்தவுடன் உங்களுக்கு சச்சின் டெண்டுல்கர் இந்த வரிசையில் இருக்கிறாரா என ஆச்சரியமூட்டும். இன்னும் சில பேருக்கு சச்சின் டெண்டுல்கர் ஆல் ரவுண்டர் என்பதே தெரியாது. ஆம் இந்த வரிசையில் மூன்றாம் இடம் வகிப்பவர் கிரிக்கெட் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் தான். முந்தைய காலகட்டத்தில் சச்சின் டெண்டுல்கர் சுழல் பந்து வீசக்கூடியவராக இருந்தார். அவர் மட்டுமல்லாமல் அணியில் இருக்கும் பெரும்பாலான பேட்ஸ்மேன்களும் பந்து வீசினார்கள். விரேந்திர சேவாக், சவுரவ் கங்குலி, யுவராஜ் சிங் போன்ற அணியின் முக்கிய பேட்ஸ்மேன்களும் பந்து வீசினார்கள். ஆனால் இதில் சிறந்து விளங்கியவர் சச்சின் டெண்டுல்கர். இவர் மொத்தம் ஆறு முறை 4 விக்கெட்டுகளை வீழ்த்திதால் இந்த வரிசையில் இவருக்கு மூன்றாம் இடம் கிடைக்கிறது. சச்சின் டெண்டுல்கர் ஒரு முறை கடைசி ஓவரில் எதிரணி 6 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறும் என்ற நிலையில் கடைசி ஓவரில் பந்து வீசி இந்திய அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். அதுகுறித்து தனித் தொகுப்பில் காணலாம்.
முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் வீரர்களைப் பற்றி அடுத்த தொகுப்பில் காண்போம். அதில் முதலிடம் வகிப்பவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் இரண்டாமிடம் வகிப்பவர் தற்போதைய இந்திய அணியில் நிலையான இடம் இல்லாமல் தவிப்பவர்.