சர்வதேச கிரிக்கெட் என்றாலே இந்தியாவிற்கு தனி மரியாதை உண்டு. அதற்கு காரணம் இந்தியா கிரிக்கெட் விளையாட்டில் அடைந்துள்ள வளர்ச்சி தான். ஒரு அணியின் வெற்றியில் பாதி பங்கு அந்த அணியின் வீரர்களின் செயல்பாட்டிலும் மீதி பங்கு அந்த அணியின் கேப்டன் வழி நடத்தும் விதத்தில் தான் உள்ளது. இவ்வாறு ஒரு அணியின் வெற்றிக்கு கேப்டனின் செயல்பாடு மிக முக்கியமானதாக இருக்கிறது.
இதுவரை இந்திய கிரிக்கெட் அணியை 24 கேப்டன்கள் வழி நடத்தி உள்ளனர். அதில் அதிக போட்டிகளில் கேப்டனாக இருந்தவர் தோனி தான். அவர் இந்தியாவிற்கு 200 போட்டிகளுக்கும் மேலாக கேப்டனாக இருந்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்திய அந்த 24 கேப்டன்களில் 3 கேப்டன்கள் இதுவரை தோல்வியை சந்தித்தது இல்லை. அந்த மூன்று கேப்டன்களை பற்றி இங்கு விரிவாக காண்போம்.
#1) அணில் கும்ப்ளே

இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் இந்திய அணியின் ஜாம்பவான் என்று அழைக்கப்படும் அனில் கும்ப்ளே தான். இவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார். இவர் 2002 ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு எதிராக நடைபெற்ற ஒரு நாள் தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டும் கேப்டனாக செயல்பட்டார். அந்த ஒரு போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. எனவே இவர் தோல்வியை சந்திக்காத கேப்டன்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
#2) ரகானே

இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் நமது டெஸ்ட் இந்திய அணியின் துணை கேப்டன் ரகானே. இவர் இதுவரை இந்தியாவிற்கு 3 ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார். அந்த 3 ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தோல்வியை சந்திக்காத கேப்டன்களின் பட்டியலில் இவர் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
#3) கௌதம் கம்பீர்

இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் நமது இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரான கவுதம் கம்பீர். இந்திய அணியின் பல வெற்றிகளில் இவரது பங்கு அதிகம் இருந்திருக்கிறது. அதற்கு காரணம் இவரது சிறப்பான பேட்டிங் செய்யும் விதம் தான். 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் இந்திய அணி உலக கோப்பையை வென்றது. அந்த உலக கோப்பையை இந்திய அணி வந்ததற்கு முக்கிய காரணம் இவர்தான். இவர்தான் இறுதிப்போட்டியில் 96 ரன்களை விளாசி இந்திய அணி வெற்றி பெறுவதற்கு பெரிதும் உதவினார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு இவருக்கு இந்திய அரசால் அர்ஜூனா விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது. அதன் பின்பு சில வருடங்களாக இவரால் சிறப்பாக விளையாட முடியவில்லை. எனவே இந்திய அணியில் இவர் தேர்வு செய்யப்படவில்லை. இந்நிலையில் கடந்த 2018 ஆம் வருடத்தின் டிசம்பர் மாதத்தில் தனது ஓய்வை அறிவித்தார்.
இவர் இதுவரை இந்திய அணிக்கு 6 ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார். அந்த ஆறு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. எனவே இதுவரை தோல்வியே கண்டிராத கேப்டன்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார் கவுதம் கம்பீர்.