இந்திய கிரிக்கெட் அணியின் சொந்த மண்ணில் நடைபெறவுள்ள இனிவரும் போட்டிகளுக்கான அட்டவனையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி இந்திய அணி தனது சொந்த மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகள், 9 ஒருநாள் போட்டிகள், 12 டி20 போட்டிகள் ஆகியவற்றில் பங்கேற்க உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணி அதிக சர்வதேச டி20 போட்டிகளில் பங்கேற்க உள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அறிவுறுத்தல்களின் படி தென்னாப்பிரிக்க, மேற்கிந்தியத் தீவுகள், ஜீம்பாப்வே, வங்கதேசம் ஆகிய கிரிக்கெட் அணிகள் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது.
சுதந்திர கோப்பை - 2019
இந்திய அணி சொந்த மண்ணில் விளையாட உள்ள முதல் தொடர் "சுதந்திர கோப்பை" ஆகும். தென்னாப்பிரிக்கா அணி 3 டி20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாட உள்ளது. 2000ஆம் ஆண்டுக்கு பிறகு தென்னாப்பிரிக்கா இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் கூட வென்றதில்லை.
செப்டம்பர் 15 - முதல் டி20, தர்மசாலா
செப்டம்பர் 18 - இரண்டாவது டி20, மொகாலி
செப்டம்பர் 22 - மூன்றாவது டி20, பெங்களூரு
அக்டோபர் 2-6 - முதல் டெஸ்ட், விஷாக்
அக்டோபர் 10-14 - இரண்டாவது டெஸ்ட், ராஞ்சி
அக்டோபர் 19-23 - மூன்றாவது டெஸ்ட், புனே
வங்கதேசத்தின் இந்திய சுற்றுப்பயணம் - 2019
தென்னாப்பிரிக்காவிற்கு பின்னர் வங்கதேசம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க உள்ளது. வங்கதேசம் இந்தியாவில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும். கடந்த சில ஆண்டுகளாக வங்கதேசத்தின் அற்புதமான ஆட்டத்திறனை ஒரு சோதனைக்கு உள்ளாக்கும் வகையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்த போட்டி அட்டவணையை தயார் செய்துள்ளது.
நவம்பர் 3 - முதல் டி20, டெல்லி
நவம்பர் 7 - இரண்டாவது டி20, ராஜ்கோட்
நவம்பர் 10 - மூன்றாவது டி20, நாக்பூர்
நவம்பர் 14-18 - முதல் டெஸ்ட், இந்தூர்
நவம்பர் 22-26 - இரண்டாவது டெஸ்ட், கொல்கத்தா
மேற்கிந்தியத் தீவுகளின் இந்திய சுற்றுப்பயணம் - 2019
டிசம்பரில் மேற்கிந்தியத் தீவுகள் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்திய அணி தனது சொந்த மண்ணில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கடைசி 5 ஒருநாள் போட்டிகளிலும் வென்றுள்ளது. அதிரடி மன்னர்களை கொண்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்திய அணியின் வெற்றிப் பாதையை இந்த சுற்றுப்பயணத்தில் நிறுத்த முயற்சி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிசம்பர் 6 - முதல் டி20, மும்பை
டிசம்பர் 8 - இரண்டாவது டி20, திருவனந்தபுரம்
டிசம்பர் 11 - மூன்றாவது டி20, ஹைதராபாத்
டிசம்பர் 15 - முதல் ஒருநாள் போட்டி, சென்னை
டிசம்பர் 18 - இரண்டாவது ஒருநாள் போட்டி, விஷாக்
டிசம்பர் 22 - மூன்றாவது ஒருநாள் போட்டி, கட்டாக்
ஜீம்பாப்வே-வின் இந்திய சுற்றுப்பயணம் - 2020
ஜீம்பாபவே அணி 17 வருடங்களுக்குப் பிறகு இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க உள்ளது. ஒரு ஆப்பிரிக்க நாடு இந்தியாவில் இருதரப்பு டி20 தொடரில் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.
ஜனவரி 5 - முதல் டி20, கௌகாத்தி
ஜனவரி 7 - இரண்டாவது டி20, இந்தூர்
ஜனவரி 10 - மூன்றாவது டி20, புனே
ஆஸ்திரேலியாவின் இந்திய சுற்றுப்பயணம் - 2020
ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட இருதரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது. ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தியது. எனவே பதிலடி கொடுக்க இந்திய அணி மிகவும் ஆவலாக காத்துக்கொண்டுள்ளது.
ஜனவரி 14 - முதல் ஒருநாள் போட்டி, மும்பை
ஜனவரி 17 - இரண்டாவது ஒருநாள் போட்டி, ராஜ்கோட்
ஜனவரி 19 - மூன்றாவது ஒருநாள் போட்டி, பெங்களூரு
தென்னாப்பிரிக்காவின் இந்திய சுற்றுப்பயணம் - 2020
இந்திய கிரிக்கெட் அணியின் நீண்ட கால சொந்த மண்ணில் நடக்கும் தொடர்கள், தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருடன் முடிவுக்கு வருகிறது.
மார்ச் 12 - முதல் ஒருநாள் போட்டி, தர்மசாலா
மார்ச் 15 - இரண்டாவது ஒருநாள் போட்டி, லக்னோ
மார்ச் 18 - மூன்றாவது ஒருநாள் போட்டி, கொல்கத்தா