நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் 2018/19ற்கான போட்டி அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதில் 2019 நவம்பர் முதல் 2020 ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் நடக்கும் தொடர்கள் இடம்பெற்றுள்ளன. நியூசிலாந்து அணிக்கு இனிவரும் சில மாதங்கள் முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் உலகக் கிரிக்கெட்டின் தலைசிறந்த அணிகளாக திகழும் இங்கிலாந்து, இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் நியூசிலாந்து மண்ணில் விளையாட உள்ளது.
கேரி ஸ்டேட்ஸை பயிற்சியாளாராக கொண்ட நியூசிலாந்து அணி இந்தியாவிற்கு எதிராக 5 டி20, 3 ஓடிஐ, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்க உள்ளது. நியூசிலாந்து அணி தனது சொந்த மண்ணில் மிகவும் வலிமை வாய்ந்த அணியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. தற்போது சர்வதேச டி20 தரவரிசையில் 5வதாகவும், ஓடிஐ தரவரிசையில் 2வதாகவும், டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தையும் வகிக்கும் இந்திய அணியுடன் நியூசிலாந்து மோத உள்ள காரணத்தால் ஆரவாரத்திற்கு சிறதும் குறைவில்லாமல் இத்தொடர் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி இவ்வருட தொடக்கத்தில் நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 4-1 என வென்றது. 3 போட்டிகள் டி20 தொடரை 2-1 என நியூசிலாந்து வென்றது.
நியூசிலாந்து கிரிக்கெட் வாரிய செயல் தலைவர் டேவிட் வைட் இந்தியா உடனான தொடர் மிகவும் ஆர்வத்துடன் இருக்கும் எனவும், நியூசிலாந்து அணி எவ்வாறு இத்தொடரை கையாளும் என்பதைக் காண ஆர்வத்துடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
"இந்தியா உடனான தொடர் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும் விதமாக உள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட் அணி வலிமையான இந்திய அணியுடன் எவ்வாறு விளையாடப் போகிறது என்பதைக் காண மிகவும் ஆர்வமாக உள்ளேன்"
இந்திய அணி 2018ல் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் தொடரை கைப்பற்றி டி20 தொடரை இழந்தது. இந்த சமயம் 5 டி20 போட்டிகள் நடைபெற உள்ளது. இது 2020ல் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்த அட்டவணையை தயார் செய்திருக்கும் என நம்பப்படுகிறது.
இந்தியாவின் நியூசிலாந்து சுற்றுப்பயணம் - 2020
ஜனவரி 24: முதல் டி20, ஈடன் பார்க், அக்லாந்து, 8PM
ஜனவரி 26: இரண்டாவது டி20, ஈடன் பார்க், அக்லாந்து, 8PM
ஜனவரி 29: மூன்றாவது டி20, செடன் பார்க், ஹாமில்டன், 8PM
ஜனவரி 31: நான்காவது டி20, வெஸ்ட்பாக் மைதானம், வெல்லிங்டன், 8PM
பிப்ரவரி 2: ஐந்தாவது டி20, பே ஓவல், எம்டி மஹாய், 8PM
பிப்ரவரி 5: முதல் ஒருநாள் போட்டி, செடன் பார்க், ஹாமில்டன், 3PM
பிப்ரவரி 8: இரண்டாவது ஒருநாள் போட்டி, ஈடன் பார்க், அக்லாந்து,3PM
பிப்ரவரி 11: மூன்றாவது ஒருநாள் போட்டி, பே ஓவல், தரூங்கா, 3PM
பிப்ரவரி 21-25: முதல் டெஸ்ட், பேஸின் ரிசர்வ், வெல்லிங்டன், 11:30AM
பிப்ரவரி 29-மார்ச் 4: இரண்டாவது டெஸ்ட், ஹாக்லே ஓவல், கிறிஸ்ட் சர்ச், 11:30AM