பெரும் எதிர்பார்ப்புக்கிடையே ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். பயிற்சி ஆட்டத்தில் நன்கு ஆடிய முரளி விஜய் மற்றும் கே.எல் ராகுல் களத்தில் இறங்கினர். கோலி டாஸ் வென்று வழக்கத்திற்கு மாறாக பேட்டிங்கை தேர்வு செய்ததால், இன்று இந்திய பேட்ஸ்மேன்கள் முழுவீச்சுடன் ஆட போகின்றனர் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் காத்திருந்தது அதிர்ச்சியே. பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் கோட்டுக்கு நீண்ட தூரம் வந்த பந்தை எதிர்கொண்டு அவுட் ஆகினர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல், வரும் பந்தை ஆடவே முயன்றனர் இந்திய பேட்ஸ்மேன்கள். இந்த பொறுப்பின்மையான ஆட்டத்தை கண்ட இந்திய ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, இங்கிலாந்து தொடரில் சொதப்பிய புஜாரா களம் இறங்கினார். அவர் ஒரு பக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தவே மறுமுனையில் இருந்த கோலி outside ஆப்-ல் வந்த பந்தை ஆட முற்பட்டு பேட் கம்மின்ஸ் பவுலிங்கில் அவுட்டானார். காற்றில் வேகமாக சென்ற பந்தை அசாதாரண முறையில் தாவிப்பிடித்தார் ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா.
அடுத்து களமிறங்கிய அணியின் துணை கேப்டனான ரஹானே கேப்டனை போலவே கோட்டுக்கு வெளியே சென்ற பந்தை ஆட முற்பட்டு ஹசல் வூடின் பந்துவீச்சில் அவுட்டானார். பின்பு களத்தில் இறங்கினார் ரோஹித் ஷர்மா, தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கு அடுத்ததாக இந்த போட்டியில் டெஸ்ட் போட்டியில் களம் கண்டார் ரோஹித்.
ரோஹித் நிதானமாக ஆடுவார் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், அவர் தனது வழக்கமான லிமிடட் ஓவர்ஸ் ஆட்டத்தை ஆட ஆரம்பித்தார். மளமளவென பவுண்டரிகளை விளாசித் தள்ளினார் ஷர்மா.
எதிர்பாராதவிதமாக ஆஸ்திரேலிய சுழல்பந்து வீச்சாளரான நாதன் லியொன் பந்துவீச்சில் சிக்ஸர் அடிக்க முற்பட்டு கேட்ச் ஆனார் ஷ்ரமா.
ஏற்கனவே இந்தியா விக்கெட்டுகளை இழந்து தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில், ஷர்மாவின் இந்த அதிரடி ஆட்டம் தேவையா என்று பலரும் வினவியுள்ளனர். டிவிட்டர் வலைத்தளத்தில் ஷர்மாவுக்கு எதிரான விமர்சனங்களை ரசிகர்கள் கடுமையாக பதிவிட்டு வருகின்றனர்.
ரசிகர்கள் மட்டுமல்லாது கிரிக்கெட் விமர்சகர்களும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
ரோஹித் ஷர்மாவின் கண்முடித்தனமான ஷாட்டை ட்விட்டரில் விமர்சித்த ரசிகர்கள் :
பிரபல கிரிக்கெட் விமர்சகரான ஹர்ஷா போக்லே ரோஹித் ஷர்மா அவுட் ஆவதிற்கு முன்பு சிக்ஸர் அடித்திருந்த நிலையில் ..அவுட் ஆன ரிப்ளை காண்பிக்கவேண்டாம் என்று ரோஹித் தயாரிப்பாளரை வேண்டிக்கொள்வார் என்று நகைச்சுவையாக பதிவிட்டிருந்தார்.
ரோஹித்தின் பொறுப்பின்மையான ஆட்டத்தை பற்றி பத்திரிக்கையாளர் அயாஸ் மேமோன்...
மேற்கிந்திய தீவுகளின் பவுலரான டினோ பெஸ்டின் பதிவு...
ரோஹித் ஷர்மா கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சஞ்சய் மஞ்ச்ரேகர் பதிவிட்டுள்ளார்.
ரோஹித் ஷர்மாவின் விக்கெட்டை வீழ்த்திய நாதன் லியோனை வெகுவாக பாராட்டி பதிவிட்டிருந்தார் தமிழக வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத்...
ரசிகர்களின் ஆதங்கம் :
புஜாராவின் சதத்தினால் இந்திய அணி மீண்டாலும், நாளைய ஆட்டத்தில் இந்திய பந்து வீச்சாளர்கள் விரைவில் விக்கெட்களை மாய்த்து எதிரணியை லீட் கொடுக்க விடாமல் தவிர்க்கவேண்டும் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர்.