#3 லோகேஷ் ராகுல்
கே எல் ராகுல் தற்போது அதிக விவாதத்திற்கு உட்பட்ட கிரிக்கெட் வீரர் ஆவார். தற்போது இவர் மூன்று வகையான இந்திய கிரிக்கெட் அணியிலும் இயல்பான வீரராக வலம் வருகிறார். ஆனால் சமீப காலமாக கே எல் ராகுலின் ஆட்டத்திறனை உற்று நோக்கினால் மோசமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகவைச் சேர்ந்த வலதுகை பேட்ஸ்மேனான இவர் கடந்த 3 தொடரிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியும் இந்திய அணியில் தொடர்ந்து நீடிக்கிறார் என்றால் அது ஆச்சரியப்பட வேண்டிய நிகழ்வாகும். கடந்த மூன்று டெஸ்ட் தொடர்களான இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியா கே.எல்.ராகுலின் பேட்டிங் சராசரி முறையே 29.90, 18.50 மற்றும் 11.40 ஆகும். ராகுலின் கடந்த வருட புள்ளிவிவரப்படி இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் சரியான தொடக்க வீரரை கண்டெடுப்பதில் மிகுந்த நெருக்கடியை சந்தித்துள்ளது என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
லோகேஷ் ராகுல் ஒரு சிறந்த ஆட்டத்திறனை கொண்ட அற்புதமான பேட்ஸ்மேன். சர்வதேச கிரிக்கெட்டில் இவர் அறிமுகமானபோது தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்தார். ஆனால் சமீப காலமாக அந்த சீரான ஆட்டதத்தை இழந்துள்ளார். கே.எல்.ராகுலுக்கு மீண்டும் மீண்டும் அதிக வாய்ப்புகளை அணி நிர்வாகம் அளித்தாலும் அதனை பயன்படுத்தி கொள்ள தவறுகிறார். 2018ல் நடந்த இங்கிலாந்து தொடரில் ஒரு போட்டியில் மட்டும் 149 ரன்கள் அடித்தார். அதன்பின் பெரிய இன்னிங்ஸ் எதுவும் இவரிடமிருந்து வெளிப்படவில்லை.
பிரத்வி ஷா காயம் காரணமாக இத்தொடரில் பங்கேற்கவில்லை. எனவே இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தன்னை நிறுபிக்க வேண்டும். இந்த வாய்ப்பு ராகுலுக்கு இறுதி வாய்ப்பாக கூட இருக்கலாம். ஏனெனில் பிரித்வி ஷா மற்றும் ஷீகார் தவான் போன்ற வீரர்கள் வாய்ப்பிற்காக காத்துக்கொண்டுள்ளனர்.