#2 அஜீன்க்யா ரகானே
அஜீன்க்யா ரகானே இந்திய டெஸ்ட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மற்றும் துனைக்கேப்டன் ஆவார். ரகானே ஒரு டெக்னிக்கல் பேட்ஸ்மேன். நீண்ட நேரம் நிலைத்து விளையாடக்கூடியவர். இவர் அனைத்து வகையான மைதானங்களிலும் சிறப்பான ரன் குவிப்பில் ஈடுபட்டுள்ளார். ஆனால் சமீப காலமாக இவரது ஆட்டத்திறன் சிறப்பாக இல்லை.
ரகானே கடைசியாக டெஸ்ட் போட்டியில் 2017 ஆகஸ்ட் அன்று இலங்கைக்கு எதிராக சதமடித்தார். அப்போட்டியில் அணியின் வெற்றிக்கு காரணமான 132 ரன்களை ரகானே விளாசினார். அதற்கு பின் இரண்டு வருடங்களில் ரகானேவின் பேட்டிங் சிறப்பாக இல்லை. எனவே இனிவரும் காலங்களில் நன்றாக ரன் குவித்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார்.
இந்திய டாப் ஆர்டர், முக்கியமாக தொடக்க ஆட்டக்காரர்கள் மிகவும் மோசமான ஆட்டத்தை டெஸ்ட் கிரிக்கெட்டில் சமீப காலமாக வெளிபடுத்தி வருகின்றனர். எனவே விராட் கோலி, புஜாரா மற்றும் ரகானே மட்டுமே ஆட்டத்தை சிறப்பாக எடுத்துச் செல்ல வேண்டும். புஜாரா மற்றும் விராட் கோலி அனைத்து வகையான மைதானங்களிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால் ரகானே பெரிய இன்னிங்ஸை அமைத்து நிலைத்து விளையாட தவறுகிறார்.
ரகானே கடந்த சில டெஸ்ட் தொடர்களில் ஓரளவிற்கு சுமாரான பங்களிப்பை இந்திய அணிக்கு அளித்து வந்தாலும், ஒரு நம்பர் 5 பேட்ஸ்மேனிடமிருந்து வெளிபடும் பெரிய இன்னிங்ஸ் தென்படவில்லை. இவர் 70 மற்றும் 80 ரன்களை கடந்து விடுகிறார், ஆனால் அதற்கு மேல் தொடர ரகானே சமீப டெஸ்ட் தொடர்களில் தடுமாறுகிறார். ரோகித் சர்மா மற்றும் ஹனுமா விகாரி ஆகியோர் ரகானே இடத்திற்கு கடும் போட்டி போடுவதால் இந்திய துனைக்கேப்டன் சிறப்பான மேட்ச் வின்னிங் ஆட்டத்தை வெளிப்படுத்தியாக வேண்டும்.