இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் XIஐ இன்று அறிவித்துள்ளது. முதல் டெஸ்டிற்குப் பிறகு வயிற்று திரிபினால் அவதிப்பட்டு வந்த ரவிச்சந்திரன் அஸ்வினின் பெயர் மூன்றாவது டெஸ்டிலும் இடம்பெறவில்லை. இரண்டாவது டெஸ்டில் 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கிய இந்திய அணி மோசமான தோல்வியை தழுவியது. முதுகு வலியினால் இரண்டாது டெஸ்ட் விளையாடத ரோகித் சர்மா மூன்றாவது டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார்.
பின்னனி
அடிலெய்டு டெஸ்ட்டில் அதிரடியாக வென்ற இந்திய அணி பெர்த் டெஸ்டில் 146 ரன்கள் வித்தியாசத்தில் மிக மோசமான தோல்வியை தழுவியது. இதனால் இந்திய அணி மெல்போர்ன் டெஸ்டிற்கு மிகுந்த கவனத்துடன் தேர்வு செய்யப்பட்டது. இந்திய தொடக்க ஆட்டக்காரர்களான முரளி விஜய் மற்றும் லோகேஷ் ராகுல் இரண்டு டெஸ்டிலும் மோசமான தொடக்கத்தை அளித்து வந்தனர்.
இரண்டு டெஸ்டிலும் சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டுகளை இழந்து முரளி விஜய் & லோகேஷ் ராகுல் வெளியேறி வந்தனர் . பயிற்சி ஆட்டத்தில் ஏற்பட்ட காயத்தினால் பிரித்வி ஷா ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பங்கேற்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். எனவே இவருக்கு பதிலாக உள்ளுர் போட்டிகளில் கலக்கிய மயான்க் அகர்வால் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்றார். அத்துடன் ஹர்திக் பாண்டியா-வும் அணியில் சேர்க்கப்பட்டார்.
கதைக்கரு
வயிற்று திரிபினால் அஸ்வினுக்கு மெல்போர்ன் டெஸ்ட்டில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தொடர்ச்சியாக இரு டெஸ்டிலும் சொதப்பி வந்த முரளி விஜய் மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோரும் இந்திய ஆடும் XIலிருந்து கழட்டவிடப்பட்டு உள்ளனர். இது யாருக்கும் அதிர்ச்சியை தரும் விதத்தில் இருக்காது.
மயான்க் அகர்வால் , லோகேஷ் ராகுலிற்கு பதிலாக தொடக்க ஆட்டக்காரராக மூன்றாவது டெஸ்டில் சேர்க்கப்பட்டுள்ளார். முரளி விஜய்க்கு பதிலாக புதிய தொடக்க ஆட்டக்காரர் களமிறங்க உள்ளார். ஹனுமா விகாரி அல்லது ரோஹித் சர்மா 3வது டெஸ்ட்டில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வாய்ப்புள்ளது.
ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா இந்திய ஆடும் XIல் இடம் பிடித்துள்ளார். இன்று காலை அஸ்வினுக்கு உடற்தகுதி சோதனை செய்யப்பட்டது. ஆனால் அவர் தற்போது விளையாடும் அளவிற்கு வாயிற்று திரிபிலிருந்தே மீளவில்லை. அத்துடன் உமேஷ் யாதவிற்கும் 3வது டெஸ்ட்டில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் 1 சுழற்பந்து வீச்சாளருடன் மெல்போர்ன் டெஸ்ட்டில் களமிறங்கவுள்ளது.
ஆஸ்திரேலியா அணி சார்பில் பீட்டர் ஹான்ட்ஸ் கோம்-ற்கு பதிலாக மிட்செல் மார்ஷ் மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ளார்.
இந்திய அணி விவரம்: விராட் கோலி ( கேப்டன் ) , மயான்க் அகர்வால் , ரோகித்சர்மா, புஜாரா , அஜின்க்யா ரகானே , ஹனுமா விஹாரி , ரிஷப் ஃபன்ட் ( விக்கெட் கீப்பர் ) , ரவீந்திரன் ஜடேஜா , இஷாந்த் ஷர்மா , ஜாஸ்பிரிட் பூம்ரா , முகமது ஷமி
ஆஸ்திரேலியா அணி விவரம்: மார்கஸ் ஹாரிஸ் , ஆரோன் ஃபின்ச் , டிம் பெய்ன் , கவாஜா, ஷான் மார்ஸ் , மிட்செல் மார்ஷ் , டிராவிஸ் ஹெட் , பேட் கமின்ஸ் , ஸ்ட்ராக் , ஹசில்வுட், நாதன் லயான்.