ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு !

எம்.எஸ் தோனி மற்றும் விராட் கோலி
எம்.எஸ் தோனி மற்றும் விராட் கோலி

சில காலமாக கிரிக்கெட்டில் இருந்து சற்று விலகி இருந்த எம்.எஸ் தோனி அணிக்கு திரும்ப உள்ளார். இன்று பிசிசிஐ, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் மட்டும் டி 20 (நியூஸிலாந்து ) தொடர்களுக்கான அணிகள் அறிவிக்க உள்ளது. எனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரிலும் அதற்கு முன்பு நடந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரிலும் அணியில் இடம்பெறாத தோனி நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெறுவார் என்று கூறப்படுகிறது.

பின்னணி...

தற்பொழுது இந்திய அணிக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளனர். மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 26ம் தேதி நடைபெற உள்ளது. எனவே டெஸ்ட் தொடர் முடிந்தவுடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகளில் களம் காண உள்ளது இந்திய அணி. சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் அடுத்த மாதம் ஜனவரி 12-ஆம் தேதி முதல் ஒருநாள் போட்டி தொடங்க உள்ளது. அதன்பின்பு இந்திய அணி நியூசிலாந்து செல்லவிருக்கிறது. அங்கு 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் என்று முறையே களம் காண உள்ளது இந்திய அணி. நியூசிலாந்து சுற்றுப்பயணமானது அடுத்த மாதம் 23ஆம் தேதி நேப்பியரில் நடக்கவிருக்கும் ஒருநாள் போட்டியின் மூலம் ஆரம்பமாகிறது.

இவ்வருடத்தில் நடந்த பல ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் வீரர்களை சுழற்றிக் கொண்டு இருந்த பிசிசிஐ, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திலாந்திற்கு எதிரான தொடர்களில் பலம்வாய்ந்த அணியுடன் களம் காண உள்ளது. அடுத்த ஆண்டு உலகக் கோப்பை நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணி தன் குறைகளை நீக்கி ஏற்ற வீரர்களுடன் களம் காண ஆயத்தமாகி வருகிறது. அதன் காரணமாக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடரில் இந்திய அணி பல வீரர்களை அணியில் வைத்து முயற்சி செய்யும் என்பதை எதிர்பார்க்கலாம்.

மையக்கரு

பிசிசிஐ எதிர்வரும் தொடர்களுக்கான அணிகளைத் தேர்வு செய்ய இன்று கூடுகிறது என்று மும்பை மிரர் பத்திரிகை தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கான ஒருநாள் அணி மற்றும் நியூசிலாந்திற்கான ஒருநாள் மற்றும் டி20 அணி தேர்வு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தோனியின் இடமானது விவாதப்பொருளாக இக்கூட்டத்தில் இடம்பெறாது என கூறப்படுகிறது. நீண்டகால ஓய்வுக்குப் பின் அவர் அணியில் சேர்க்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த நாளிதழில், தோனி அணியில் இடம் பெற்றாலும் ரிஷப் பண்ட் பெரும்பாலும் அணியில் தொடர்ந்து நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது டெஸ்ட் அணியில் சொதப்பி வரும் கேஎல் ராகுல் மற்றும் டி20 தொடரின் ஸ்பெஷலிஸ்டாக இருக்கும் தினேஷ் கார்த்திக் அணியிலிருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது என்று அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. மேலும் இவ்விரு வீரர்களுள் யாரேனும் ஒருவர் அணிக்கு தேர்வாகளாம், ஏற்கனவே அணியில் விளையாடி வரும் ஒருநாள் போட்டிகளுக்கான வீரர்கள் எந்தவித மாற்றமும் இல்லாமல் அணியில் நீடிப்பர் என்று கூறப்பட்டுள்ளது.

அடுத்தது என்ன ?

இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், மெல்போர்னில் நடக்கவிருக்கும் அடுத்த போட்டியில் வெற்றி பெற பல யுத்திகளை கையாண்டு முயற்சிகளை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொடரின் முக்கியமான போட்டியாக அடுத்த போட்டி அமையும்.

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now