ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுடனான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

MSD Back In T20 & ODI
MSD Back In T20 & ODI

இந்திய கிரிக்கெட் வாரியம், ஆஸ்திரேலியாவிற்கெதிராக ஒருநாள் போட்டியில் விளையாடும் முழு வலிமை கொண்ட இந்திய அணியை இன்று அறிவித்துள்ளது. அத்துடன் நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான ஒருநாள் மற்றும் டி20 இந்திய அணியையும் பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஓடிஐ அணியில் கேதர் ஜாதவ் காயத்திலிருந்து மீண்டு அணிக்கு திரும்பியுள்ளார். அத்துடன் ஐக்கிய அரபு நாட்டில் நடந்த ஆசிய கோப்பையில் காயமடைந்த ஹர்திக் பாண்டியா-வும் மீண்டும் ஓடிஐ அணியில் இடம்பெற்றுள்ளார். ஆஸ்திரேலியாகு எதிரான ஒருநாள் தொடர் அடுத்தாண்டு ஜனவரி 12ல் தொடங்கி ஜனவரி 18ல் முடிவடைகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் பேக்-அப் விக்கெட் கீப்பராக ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ரிஷப் ஃபன்ட் - டின் மோசமான ஆட்டத்தால் அவரை ஒருநாள் போட்டிகளிலிருந்து கழட்டிவிடப்பட்டுள்ளார். விராட் கோலி அணியை வழிநடத்துவார். ரோஹித் சர்மா, ஷிகர் தகவான், கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக், மகேந்திரசிங் தோனி ஆகிய பேட்ஸ்மேன்கள் ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா ஆல்ரவுண்டர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். வேகப்பந்து வீச்சாளர்களாக புவனேஸ்வர் குமார், ஜாஸ்பிரிட் பூம்ரா, கலீல் அகமது, முகமது ஷமி ஆகியோர் ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ளனர். குல்தீப் யாதவ் மற்றும் யுஜ்வேந்திர சகால் சுழற்பந்து வீச்சாளராக தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளனர்.

நியூசிலாந்திற்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 23 ல் தொடங்கி பிப்ரவரி 3ல் முடிவடைகிறது.

நியுசிலாந்திற்கு எதிரான 5 ஒருநாள் போட்டித் தொடருடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாட உள்ளது. டி20 தொடர் பிப்ரவரி 6ல் தொடங்குகிறது.

கடந்த மாதங்களில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான டி20 அணியிலிருந்து கழட்டிவிடப்பட்ட மகேந்திர சிங் தோனி மீண்டும் டி20 அணியில் இடம்பிடித்துள்ளார். டி20 அணியில் தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் ஃபன்ட் ஆகிய இருவரும் பேக் அப் விக்கெட் கீப்பர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த இரு ஒருநாள் தொடரும் 2019 உலகக் கோப்பைக்கு இந்திய அணியை தயார் செய்ய சரியான தொடராக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் மிக வலிமையான இந்திய ஆடும் XIஐ தேர்ந்தெடுக்கவும் இத்தொடர் மிகவும் உதவியாக அமையும்.

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுடனான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி : விராட் கோலி (கேப்டன்) , ரோகித் சர்மா (துணை கேப்டன்) , ஷிகர் தவான் , கே.எல்.ராகுல் , அம்பாதி ராயுடு , தினேஷ் கார்த்திக் , கேதார் ஜாதவ் , எம்.எஸ்.தோனி , ஹர்திக் பாண்டியா ,யுஜ்வேந்திர சகால், குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார்,ஜாஸ்பிரிட் பூம்ரா , முகமது ஷமி, கலீல் அகமது.

நியூசிலாந்திற்கெதிரான இந்திய டி20 அணி :

விராட் கோலி (கேப்டன்) , ரோகித் சர்மா (துணை கேப்டன்) , ஷிகார் தவான், கே.எல்.ராகுல், ரிஷப் ஃபன்ட், எம்.எஸ்.தோனி , தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், ஹர்திக் பாண்டியா ,க்ருநால் பாண்டியா, குல்தீப் யாதவ், யுஜ்வேந்திர சகால் , புவனேஸ்வர் குமார், ஜாஸ்பிரிட் பூம்ரா, கலீல் அகமது.

Quick Links