ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் ஆடும் இந்திய அணி இன்று அறிவிப்பு

Kholi return as captain
Kholi return as captain

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ள ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியோடு இரண்டு டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டியில் விளையாட இருக்கிறது. இவ்விரண்டு அணிகளுக்கான டி20 போட்டி வருகிற பிப்ரவரி மாதம் 24 மற்றும் 27 ஆம் தேதி நடைபெறுகிறது. ஒருநாள் போட்டித் தொடர் மார்ச் மாதம் முதல் வாரத்தில் தொடங்க இருக்கிறது.

இந்த நிலையில் பிசிசிஐ தேர்வு குழு ஆஸ்திரேலிய தொடருக்கான அணியை இன்று மும்பையில் அறிவித்தது. ஓய்வில் இருந்த இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் பும்ரா அணிக்கு மீண்டும் திரும்பினார். இந்திய அணி கேப்டன் விராட் கோலி மீண்டும் அணியை வழிநடத்த அணிக்குத் திரும்பினார். தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் மற்றும் இடக்கை பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. நியூசிலாந்து தொடரில் சிறப்பாக செயல்படாத வேகப்பந்து வீச்சாளர் கலீல் அஹமது அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் சொதப்பிய கேஎல் ராகுல் நியூசிலாந்து தொடரில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடியதால் ராகுல் மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளார்.

கார்த்திக் நீக்கப்பட்டுள்ளார். ராகுல் அணிக்கு திரும்பியுள்ளார்
கார்த்திக் நீக்கப்பட்டுள்ளார். ராகுல் அணிக்கு திரும்பியுள்ளார்

உலக கோப்பைக்கு முன்பு இந்திய அணி ஆடும் கடைசி தொடர் இதுவென்பதால் இந்திய அணி முழு பலத்துடன் களம் இறங்குகிறது. முதல் இரண்டு ஒருநாள் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்ட புவனேஸ்வர் குமார் கடைசி 3 ஒருநாள் போட்டியில் அணிக்கு திரும்புகிறார். கடைசி 3 ஒருநாள் போட்டிகளில் ஆடும் இந்திய அணியே ஏறக்குறைய உலக கோப்பையில் ஆடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2019 ஆம் ஆண்டுக்கான உலக கோப்பை இங்கிலாந்தில் மே மாதம் தொடங்க உள்ளது. எனவே ஓய்வு அளிக்கப்பட்ட அனைத்து வீரர்களும் அணிக்கு திரும்பியுள்ளனர். உலகக் கோப்பைக்கு முன்பு இந்திய அணி வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவார்கள். அந்த தொடரில் உலகக் கோப்பைக்கு ஆயத்தமாகும் வீரர்கள் காயம் ஏதும் ஏற்படாமல் இருந்தால் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஆடும் அதே இந்திய அணியை உலக கோப்பை அணியிலும் எதிர் பார்க்கலாம. அப்படி ஏதேனும் காயம் ஏற்பட்டால் மட்டுமே இந்திய அணியில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

டி-20 தொடருக்கான இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணைக் கேப்டன்), கே.எல்.ராகுல், ஷிகர் தவான், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், எம்.எஸ். தோனி, ஹர்திக் பாண்டியா, க்ருனல் பாண்டியா, விஜய் சங்கர், சாஹல், பும்ரா , உமேஷ் யாதவ், சித்தார்த் கவுல், மாயங்க் மார்கண்டே.

ஒரு நாள் தொடரில் முதலிரண்டு போட்டிக்கான இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணைக் கேப்டன்), ஷிகர் தவான், அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ், எம்.எஸ்.தோனி, ஹர்திக் பாண்டியா, பும்ரா, முகமது ஷமி, சாஹல், குல்தீப் யாதவ், விஜய் சங்கர், ரிஷப் பண்ட், சித்தார்த் கவுல், கே.எல்.ராகுல்

கடைசி 3 ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணைக் கேப்டன்), ஷிகர் தவான், அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ், எம்.எஸ்.தோனி, ஹர்திக் பாண்டியா, பும்ரா, புவனேஸ்வர் குமார், சாஹல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, விஜய் சங்கர், கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட்.

Quick Links

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now