கிரிக்கெட் போட்டியைப் பொருத்தவரை கேப்டனின் வழிநடத்துதல் மிகமுக்கியமானது. வெற்றியைக் காட்டிலும் தோல்வி அவர்களின் மனநிலையை பெரிதும் பாதிக்கும் இது அவர்களின் ஆட்டத்திறனிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தியாவைப் பொருத்தவரை வெங்கட் ராகவனில் துவங்கி தற்போது விராத் கோலி வரையிலான சிறந்த வீரர்கள் கேப்டன் பொறுப்பில் தங்களின் பங்களிப்பை அணிக்காக சிறப்பாக ஆற்றி வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவின் சிறந்த கேப்டன் என நாம் கருதும் வீரர்கள் நிகழ்த்தியுள்ள மோசமான சாதனைகளை இங்கு காணலாம்.
#1) கபில் தேவ்
கபில்தேவ் இந்திய அணிக்காக முதல் உலககோப்பை தொடரை கைப்பற்றிய கேப்டன் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் நமக்கு தெரியாத மோசமான சாதனை ஒன்றையும் படைத்துள்ளார் அவர். இந்திய மண்ணில் ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் ஆன ஒரே கேப்டனும் இவர் தான். இதுவரை இந்திய அணி தன் சொந்த மண்ணில் 54 ஒருநாள் தொடர்களில் பங்கேற்றுள்ளது. அதில் ஒரே ஒரு முறை மட்டுமே ஒயிட்வாஷ் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதுவும் 1983 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை 5-0 என இழந்தது இந்தியா.
#2) சச்சின் டெண்டுல்கர்
சச்சின் டெண்டுல்கர் இடைக்காலத்தில் ஒருசில ஆண்டுகள் இந்தியாவிற்கு கேப்டனாக இருந்தார். அவர் ஒரு பேட்ஸ்மேனாக பல சாதனைகளை படைத்துள்ளார். ஆனால் கேப்டனாக இவர் பங்களிப்பு இந்தியாவிற்கு அந்த அளவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இந்திய அணி இந்திய மண்ணில் 71 டெஸ்ட் தொடர் விளையாடியுள்ளது. அதில் ஒரே ஒரு முறை மட்டுமே தன் மண்ணில் டெஸ்ட் தொடரை ஒயிட்வாஷ் ஆக இழந்துள்ளது. அது இவர் கேப்டனான இருக்கும் போது தான். 2000 ஆம் ஆண்டு தென்னாப்ரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என இழந்தது இந்திய அணி. இது சச்சின் டெண்டுல்கரின் வாழக்கையில் மறக்கமுடியாத டெஸ்ட் தொடராகவும் அமைந்தது.
#3) ராகுல் டிராவிட்
ராகுல் டிராவிட் என்றவுடன் நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது அவரின் நிலையான டெஸ்ட் ஆட்டம் தான். ராகுல் டிராவிட் 2007 ஆம் ஆண்டு இந்திய அணியின் ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்தார். அப்போதைய உலககோப்பை தொடரில் இந்திய அணி முதல் சுற்றிலேயே வெளியேறியது குறிப்பிடத்தக்கது. இது இவரின் கேப்படன்ஷிப் பறிபோனதிற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
#4) மகேந்திர சிங் தோணி
மகேந்திர சிங் தோணியின் பெயர் இந்த வரிசையில் இருப்பது உங்களுக்கு ஆச்சர்யமளிக்கலாம். அவர் இந்தியாவின் சிறந்த கேப்டன் மற்றும் அனைத்து வகையான ஐசிசி கோப்பைகளையும் இந்தியாவிற்கு பெற்றுத்தந்த ஒரே கேப்டன்ஆக இருந்தாலும் அவரும் ஒரு முறை கேப்டன்ஷியில் சௌதப்பியுள்ளார். அதுமட்டுமின்றி அந்த ஆட்டத்திற்கு பின் டெஸ்ட் போட்டிகளிலிருந்தே ஓய்வை அறிவித்து விட்டார் அவர். இந்திய அணி வரலாறு காணாத அளவிற்கு தொடர்ந்து ஏழு வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் தோல்வியடைந்தது தோணி தலைமையில் தான். அதுமட்டுமின்றி தொடர்ந்து இரண்டு வெளிநாட்டு டெஸ்ட் தொடரில் தோணி தலைமையில் இந்திய அணி ஒயிட்வாஷ் ஆனது. அதுவும் 2011/2012 காலகட்டங்களில் இந்திய அணி உலககோப்பை தொடரைக் கைப்பற்றினாலும் டெஸ்ட் தொடர்களில் இப்படி மேசமான சாதனைகளை நிகழ்த்தியது தோணி கேப்டனாக இருக்கும் போது தான்.