உலககோப்பை தொடருக்கு பின்  இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் விவரம்..

Indian team
Indian team

இந்திய அணி தற்போது இங்கிலாந்து நாட்டில் நடைபெறும் உலககோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த உலககோப்பை தொடரானது மே 30-ல் துவங்கி ஜூலை 14 அன்று முடிவடைகிறது. இந்நிலையில் அதனைத் தொடர்ந்து இந்திய அணி விளையாடப்போகும் போட்டிகளின் அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி தென்னாப்ரிக்கா, வங்கதேசம், மேற்கிந்திய தீவுகள், ஜிம்பாப்வே மற்றும் ஆஸ்திரேலியா என ஐந்து நாடுகளை எதிர்கொள்ளும் போட்டிகளின் அட்டவணையை வெளியிட்டுள்ளது பிசிசிஐ. இந்தியாவில் நடக்கும் போட்டிகளுக்கான அட்டவணைகள் மட்டுமே இது. இந்திய அணி இதில் பெரும்பாலும் டி 20 போட்டிகளிலேயே பங்கேற்கிறது. இதில் 12 டி20 போட்டிகளும், 9 ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளும் அடங்கும். இந்தாண்டு முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் துவங்குவதால் இதில் நடைபெறும் 5 போட்டிகளும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அடங்கும். இந்தாண்டு செப்டம்பர் முதல் 2020 மார்ச் மாதம் வரை நடைபெறும் போட்டிகளுக்கான அட்டவணை இது. இந்திய அணி தனது சொந்த மண்ணில் இத்தனை போட்டிகளில் பங்கேற்பதால் இவை அனைத்தும் இந்திய அணிக்கே சாதகமாக அமையும்.

ப்ரீடம் ட்ராபி இந்தியா vs தென்னாப்ரிக்கா

15 செப்டம்பர் - முதல் டி20, தர்மசாலா

18 செப்டம்பர் - இரண்டாவது டி20 , மொகாலி

22 செப்டம்பர் - மூன்றாவது டி20, பெங்களூர்

அக்டோபர் 2-6 - முதல் டெஸ்ட், விசாகப்பட்டினம்

அக்டோபர் 10-14 - இரண்டாவது டெஸ்ட், ராஞ்சி

அக்டோபர் 19-23 - மூன்றாவது டெஸ்ட், புனே

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்கதேசம்

3 நவம்பர் - முதல் டி20, மொஹாலி

7 நவம்பர் - இரண்டாவது டி20, ராஜ்கோட்

10 நவம்பர் - மூன்றாவது டி20, நாக்பூர்

நவம்பர் 14-18 - முதலாவது டெஸ்ட், இந்தூர்

நவம்பர் 22-26 - இரண்டாவது டெஸ்ட், கொல்கத்தா

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மேற்கிந்திய தீவுகள்

6 டிசம்பர் - முதல் டி20, மும்பை

8 டிசம்பர் - இரண்டாவது டி20, திருவனந்தபுரம்

11 டிசம்பர் - மூன்றாவது டி20, ஹைதராபாத்

15 டிசம்பர் - முதல் ஒருநாள் போட்டி, சென்னை

18 டிசம்பர் - இரண்டாவது ஒருநாள் போட்டி, விசாகப்பட்டினம்

22 நவம்பர் - மூன்றாவது ஒருநாள் போட்டி, கட்டாக்

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஜிம்பாப்வே 2020

5 ஜனவரி - முதல் டி20, கவுகாத்தி

7 ஜனவரி - இரண்டாவது டி20, இந்தூர்

10 ஜனவரி - மூன்றாவது டி20, புனே

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலியா 2020

14 ஜனவரி - முதல் ஒருநாள் போட்டி, மும்பை

17 ஜனவரி - இரண்டாவது ஒருநாள் போட்டி, ராஜ்கோட்

19 ஜனவரி - மூன்றாவது ஒருநாள் போட்டி, பெங்களூர்

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தென்னாப்ரிக்கா 2020

12 மார்ச் - முதல் ஒருநாள் போட்டி, தர்மசாலா

15 மார்ச் - இரண்டாவது ஒருநாள் போட்டி, லக்னோ

18 மார்ச் - மூன்றாவது ஒருநாள் போட்டி, கொல்கத்தா

Quick Links

App download animated image Get the free App now