இந்திய அணியின் உலகக் கோப்பை ஜெர்சி மார்ச் 1 அன்று வெளியிடப்பட உள்ளது

2016 WT20 Jersey
2016 WT20 Jersey

நடந்தது என்ன?

இந்திய அணியின் வீரர்கள் 2019 உலகக்கோப்பை தொடரில் அணியவருக்கும் ஜெர்சியை மார்ச் 1 அன்று ஹைதராபாத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் ஸ்பான்சர் நைக் இனைந்து வெளியிட உள்ளது.

பிண்ணனி

உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் 2019 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது இங்கிலாந்தில் மே-30 அன்று தொடங்க உள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியம் உலகக் கோப்பை நடைபெறும் வருடத்தில் உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக புதிய ஜெர்சியை வெளியிடுவதை ஒவ்வொரு உலகக் கோப்பை தொடரிலும் வழக்கமாக கொண்டுள்ளது. 2015 உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சர் நைக் மிகவும் அருமையான ஜெர்சியை இந்திய அணிக்கு வடிமைத்து கொடுத்தது.

இந்த ஜெர்சி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நினைவுச் சின்னமாக வைக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் 2015 உலகக் கோப்பை ஜெர்சியானது இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் பங்குபெற்ற முத்தரப்பு தொடருக்கு முன்பு வெளியிடப்பட்டது.

முழுத்தகவல்

உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் உலகக் கோப்பை தொடர் ஆரம்பமாக ஒரு சில மாதங்களே உள்ளது. இந்திய அணியின் ஸ்பான்சர் நைக் மார்ச் 1ஆம் நாள் ஹாதரபாத்தில் புது ஜெர்சியை வெளியிட உள்ளது. இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவிற்கு இந்திய வீரர்களின் ஜெர்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 2ஆம் தேதி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதும் முதல் ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டியிலேயே ரசிகர்கள் இந்திய வீரர்களின் ஜெர்சியை காண வாய்ப்புள்ளது.

அடுத்தது என்ன?

இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரில் முதல் டி20யில் தோல்வியடைந்தது. இரண்டாவது டி20யில் வென்று தொடரை சமன் செய்ய இந்தியா போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. டி20 தொடர் முடிவடைந்த உடன் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியுடன் விளையாட உள்ளது. இந்த ஓடிஐ தொடர் மே 30ல் இங்கிலாந்தில் தொடங்க உள்ள 2019 உலகக் கோப்பை தொடருக்கு ஒரு பயிற்சி ஆட்டமாக இரு அணிகளுக்கும் அமையும்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி அணியின் சக வீரர்களிடம் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதாவது, ஐபிஎல் தொடரில் தற்போது இந்திய ஒருநாள் அணியில் விளையாடும் வீரர்கள் குறைவான போட்டிகளில் மட்டும் கலந்து கொள்ளுமாறும், தேவையான ஓய்வை எடுத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளார். அத்துடன் உலகக் கோப்பை அணியில் இடம்பெற ஃபிடனஸ் ரொம்ப அவசியம் என்பதால் அதனை கவனத்தில் கொள்ளுமாறும் கூறியுள்ளார்.

2019 உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் லண்டன் ஓவல் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றனர். உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியை தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக ஜீன் 5 அன்று சவுத்தாம்டனில் உள்ள தி ரோஸ் பவுல் மைதானத்தில் மோத உள்ளது.

ஐசிசி இதற்கான டிக்கெட் முன்பதிவை கடந்த வருடத்திலிருந்து செய்து வருகிறது. அதில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியின் டிக்கெட்டுகள் முழுவதும் விற்பனையாகி விட்டதாக தெரிவித்துள்ளது. ஐசிசி-யின் டாப்-10 அணிகள் மோதும் இந்த உலகக்கோப்பை தொடரில் டாப்-5 அணிகள் மோதும் போட்டிகளுக்கு அதிகபடியான டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளதாக ஐசிசி கூறியுள்ளது.

Quick Links

Edited by Fambeat Tamil