டெஸ்ட் போட்டிகளில் ஒரு பேட்ஸ்மேன் சதம் அடிப்பது அணிக்கு மிகவும் தேவையான ஒன்றாகும். அதுவே 4 பேட்ஸ்மேன்கள் ஒரே இன்னிங்ஸ்ல் தங்களது அணிக்காக சதம் விளாசுவது என்பது மிகவும் அரிது. இதுவரை இந்த நிகழ்வு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 22 முறை மட்டுமே நிகழ்ந்துள்ளது. இதில் இரு முறை 5 சதங்களும் விளாசப்பட்டன ( ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ). இவ்வாறு இந்திய அணி முதல் முறையாக 4 சதங்கள் ஒரே இன்னிங்ஸ்ல் அடிக்கப்பட்டது தொடர்பான கட்டுரை இது. அணியின் முதல் 4 வீரர்கள் சதமடிப்பது வரலாற்றில் இதுவே முதல்முறை.
தினேஷ் கார்த்திக், வாசிம் ஜாபர், ராகுல் டிராவிட் மற்றும் சச்சின் டெண்டுல்கர் :
2007 ம் ஆண்டு இந்திய அணி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த போட்டியில் விரேந்திர சேவாக் காயம் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதில் தினேஷ் கார்த்திக் அணியின் துவக்க வீரராக தேர்வு செய்யப்பட்டார். முதல் டெஸ்ட் போட்டி சிட்டகாங்-ல் துவங்கியது. இதில் முதல் இன்னிங்ஸ்-ல் இந்திய அணி 387 ரன்கள் குவித்தது. சச்சின் டெண்டுல்கர் மற்றும் கங்குலி சதமும், கேப்டன் டிராவிட் மற்றும் தினேஷ் கார்த்திக் அரைசதம் அடித்தனர். இருப்பினும் இந்திய அணியால் அந்த போட்டியை வெல்ல முடியவில்லை டிரா மட்டுமே செய்ய முடிந்தது.
இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி மிர்பூரில் துவங்கியது. இதில் முதல் இன்னிங்ஸ்ல் பேட்டிங் செய்த தினேஷ் கார்த்திக் மற்றும் வாசிம் ஜாபர் இருவரும் மிகச்சிறப்பாக விளையாடினர். ஸ்கோர் 175 ஆக உள்ளபோது தினேஷ் கார்த்திக் 82 ரன்களிள் ரிடெயர்டு அர்ட் ஆனர். பின்பு களம் இறங்கிய கேப்டன் ராகுல் டிராவிட் வாசிம் ஜாபருடன் இணைந்து ஆடினார். சிறப்பாக ஆடிய ஜாபர் சதம் விளாசினார். அவர் 138 ரன்கள் எடுத்திருந்த போது காயம் காரணமாக வெளியேறினார். இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் எதுவும் இழக்காமல் 326 ரன்கள் எடுத்திருந்தது. சச்சின் மற்றும் டிராவிட் களத்தில் இருந்தனர்.
இரண்டாம் நாள் களமிறங்கிய இந்திய வீரர் டிராவிட் 129 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் மீண்டும் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் சச்சின் டெண்டுல்கருடன் இணைந்து ஆடினார். சிறப்பாக ஆடிய தினேஷ் கார்த்திக் சர்வதேச போட்டியில் தனது முதல் சதத்தினை பதிவு செய்தார். பின்னர் சச்சின் டெண்டுல்கரும் சதமடித்தார். சர்வதேச டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரே இன்னிங்ஸ்ல் முதல் 4 வீரர்கள் சதமடித்தது வரலாற்றில் இதுவே முதல்முறை ஆகும். பின்னர் களமிறங்கிய மகேந்திர சிங் தோணி தனது அதிரடியால் அரைசதம் விளாசினார். இறுதியில் இந்திய அணி 610 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து டிக்ளர் செய்தது. பின்னர் களமிறங்கிய வங்கதேச வீரர்களால் களத்தில் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்ஸ்ல் 118 மற்றும் இரண்டாவது இன்னிங்ஸ்ல் 253 ரன்களும் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. போட்டியை இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பறிறியது. இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் அடித்த 129 ரன்னே சர்வதேச போட்டியில் இவரது அதிகபட்ச ரன் ஆகும். இந்திய அணிக்கு டெஸ்ட் போட்டிகளில் ஒரே இன்னிங்ஸ்ல் 4 வீரர்கள் சதமடிப்பது இதுவே முதல்முறை. பின்னர் 2010-ல் தென்னாப்ரிக்கா அணிக்கு எதிராகவும், 2017 ஆம் ஆண்டில் இலங்கை அணிக்கு எதிராகவும் இந்திய அணி வீரர்கள் ஒரே இன்னிங்ஸ்ல் 4 சதம் விளாசினர். இருந்த போதிலும் வங்கதேசத்தில் இந்திய வீரர்கள் அடித்த சதமே வரலாற்றில் நினைவுக்குரியது.