இந்திய அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து ஒரு நாள் கொண்ட தொடர் மற்றும் மூன்று டி-20போட்டிகளில் விளையாட உள்ளது. விராட் கோலி தலைமையில் இந்திய அணி முதன் முதலில் நியூசிலாந்தில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடதக்கது . கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி சொந்த மண்ணில் தோற்கடிப்பது என்பது சற்று கடினம் தான் என்றாலும் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வென்ற உற்சாகத்தில் உள்ளது . விராட் கோலி தலைமையிலான இந்திய அணி பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பாக உள்ளதால் நியூசிலாந்தை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி 23ம் தேதி தொடங்குகிறது . இதற்கு முன்னர் இந்திய அணியில் நட்சத்திர வீரர்கள் பலர் இருந்துள்ளனர். ஆனால் நியூசிலாந்தில் வெற்றி பெறுவது சற்று கடினமாகவே உள்ளது. இந்த முறை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை உடன் இந்திய அணி களம் இறங்குகிறது. இதற்கு முன்னர் இந்திய வீரர்களில் நியூசிலாந்து மண்ணில் அதிக ரன்களை எடுத்துள்ளவர்களை இப்போது காண்போம்.
#சச்சின் டெண்டுல்கர்
இந்திய அணி பல நட்சத்திர வீரர்களை உருவாக்கி உள்ளது. இதில் முக்கயமானவர் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் . இவர் நியூசிலாந்து அணிக்கு எதிராக 1994 ஆண்டு நடைபெற்ற தொடரில் களம் இறங்கினார் அந்த தொடரில் இரண்டாவது போட்டியில் 82 ரன்கள் எடுத்து இந்திய அணி வெற்றி பெற செய்தார். அந்த தொடரில் இந்திய அணி 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. அதன் பின்னர் 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் சச்சின் டெண்டுல்கர் அனைத்து போட்டிகளையும் சேர்த்து 73 ரன்கள் எடுத்தார் அந்த தொடரில் டெண்டுல்கரின் ஆட்டம் குறைவாக இருந்தாலும் இந்திய அணி 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது. அதன் பின்னர் 2008-09 நடைபெற்ற தொடரில் 244 ரன்களை அடித்தார். மூன்றாவது போட்டியில் 163 ரன்களை அடித்து இந்திய அணி வெற்றி பெற செய்தார் . சச்சின் இதுவரை நியூசிலாந்தில் 18 போட்டிகளில் 652 ரன்களை அடித்துள்ளார் இதுவே நியூசிலாந்தில் இந்திய வீரர்களின் அதிக ரன்கள் ஆகும்.
#வீரேந்திர சேவாக்
இந்திய நட்சத்திர வீரர்களில் ஒருவர் வீரேந்திர சேவாக் . இவர் அதிரடியாக விளையாடும் வீரர் என்பது அனைவரும் அறிந்தது. இவர் நியூசிலாந்திற்கு ஏதிராக நியூசிலாந்து மண்ணில் இரண்டு தொடர்கள் மட்டுமே விளையாடி உள்ளார் . 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் அதிக ரன்களை அடித்தவர் இவர் தான் 299 ரன்களை அடித்தார் . இந்த தொடரில் இரண்டு சதங்களும் அடித்தார். பின்னர் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் இவர் தான் அதிக ரன்களை அடித்தவர் அந்த தொடரில் 259 ரன்களை அடித்தார் . வீரேந்திர சேவாக் இதுவரை 12 போட்டிகளில் 598 ரன்களை அடித்துள்ளார் .
#மகேந்திர சிங் தோனி
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி . இந்திய அணியின் நட்சத்திர வீரர். இவர் நியூசிலாந்திற்கு எதிராக நியூசிலாந்து மண்ணில் 2009ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் விளையாடினார். அந்த தொடரில் முதல் போட்டியில் 84 ரன்கள் அடித்து வெற்றி பெற செய்தார் அந்த தொடரில் தோனி 184 அடித்தார். பின்னர் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் 272 ரன்களை அடித்து அசத்தினார் தோனி . இதுவரை தோனி 10 போட்டிகளில் விளையாடி 456 ரன்களை சேர்த்துள்ளார். இனி நடைபெற உள்ள தொடரில் தோனி 197 ரன்களை எடுத்தால் நியூசிலாந்தில் அதிக ரன்களை அடித்தவர் என்ற சாதனையை முறியடிக்க முடியும். தோனி ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நியூசிலாந்தில் சாதனை படைப்பார தல தோனி.