சறுக்கும் ஆஸ்திரேலியா..!சாதிக்குமா இந்தியா..? ஒரு அலசல்..!

Indian squad has completely young players comprised of well talented strong batting and bowling line up
Indian squad has completely young players comprised of well talented strong batting and bowling line up

கிரிக்கெட்டில் மாபெரும் பலம் வாய்ந்த அணியாக வலம் வந்தது ஆஸ்திரேலியா. உலகின் எந்த அணியாக இருந்தாலும், அந்த அணியை அவர்கள் சொந்த மண்ணிலேயே வைத்துத் தோற்கடிப்பது ஆஸ்திரேலியாவின் வழக்கம். கில்கிறிஸ்ட், பாண்டிங், ஹைடன், சைமண்ட்ஸ், பெவன், பிரட் லீ, மெக்ராத், வார்னே என்று முன்னாள் வீரர்கள் கொண்ட ஆஸ்திரேலியா அணி களம் இறங்கினாலே, எதிரணியின் தோல்வி பாதி உறுதி செய்யப்பட்டுவிடும். அப்படிப்பட்ட ஆஸ்திரேலிய அணியின் செயல்பாடு சமீப ஆண்டுகளில் பின்னடைவை சந்தித்து வருகிறது.

பொதுவாகவே இந்திய வீரர்களைக் காட்டிலும் ஆஸ்திரேலியா வீரர்கள் விளையாட்டில் மட்டுமல்ல ஸ்லெட்ஜிங் செய்வதிலும் வல்லவர்கள்.

வார்னர் vs ரோகித், ஜேம்ஸ் பல்க்னர் vs விராட் கோஹ்லி எனப் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

கிரிக்கெட்டில் ஸ்லெட்ஜிங் சகஜமான ஒன்று. களத்தில் ஆடும்போது வெறுப்படைய செய்து சீண்டி பார்ப்பது தான் சிலெட்ஜிங். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்கள் பெரும்பாலும் இது மாதிரியான செயல்களில் ஈடுபடுவார்கள்.

இந்த நிலையில் சச்சின் டெண்டுல்கர் தன்னை கேலி செய்ததாக ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீரர் கிளேன் மெக்ராத் கூறி இருந்தார். 2000 ஆம் ஆண்டு ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் தன்னை சச்சின் கேலி செய்ததாகவும், ஆனால் இது ஆட்டத்தில் ஒரு பகுதியே என்றும் அவர் கூறிஇருந்தார்.

ரிக்கி பாண்டிங் தலைமையில் ஆஸ்திரேலியா தொடர்ந்து இரண்டு உலகக் கோப்பையைக் கைப்பற்றியது. மிகவும் நுட்பமாக விளையாடக்கூடிய பேட்ஸ்மேன் இவர். அனைத்து வகை கிரிக்கெட்டிலும் சேர்த்து மொத்தம் 27,000 ரன்கள் குவித்துள்ளார்.

மேலும் ஆடம் கில்கிறிஸ்ட், மெக்ராத், பிரட் லீ, ரிக்கி பாண்டிங் என ஒரு காலத்தில் கிரிக்கெட் என்றாலே ஆஸ்திரேலியா தான் ஆஸ்திரேலியா என்றாலே கிரிக்கெட் தான் என்று இருந்தது. உலககோப்பையை அதிகமுறை வென்ற அணி, ஒருநாள் போட்டிகளில் அதிக வெற்றிகளைக் குவித்த அணி, இப்படி கம்பீரமாக வீருநடை போட்ட ஆஸ்திரேலியா தற்போது கத்துக்குட்டி அணியாக இருக்கிறது.

இந்த ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா அனைத்து போட்டிகளிலும் தோல்வி அடைந்து ஒருநாள் போட்டிகளில் முதல் முறையாக ஒயிட்வாஷ் ஆனது. சமீபத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் தோல்வியைத் தழுவியது ஆஸ்திரேலியா அணி. இந்தத் தோல்வியின் மூலம் கடந்த 30ஆண்டுகளில் இல்லாத அளவிற்க்கு ஒருநாள் போட்டிகளின் தரவரிசை பட்டியலிலும் சரிவைச் சந்தித்து வருகிறது ஆஸ்திரேலியா. தற்போது ஐசிசி ஒருநாள் தரவரிசை பட்டியலில் 100 புள்ளிகளுடன் 6வது இடத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது.

மாறாக இந்திய அணி நல்ல பலத்துடன் ஐசிசி தரவரிசைப் பட்டியலில் 2வது இடத்தில் நீடிக்கிறது. தற்போதைய நிலையில் ஆஸ்திரேலியாயை காட்டிலும் இந்தியா பலம்வாய்ந்த அணியாகவே இருக்கிறது. சமீபத்தில் கங்குலி ஆஸ்திரேலியா அணியில் ஸ்மித், வார்னர் இல்லாதது ரோகித் சர்மா விராட் கோஹ்லி இல்லாதது போன்றது எனக் கூறி இருந்தார்.ஆனால் என்ன தான் கூறினாலும் ஆஸ்திரேலியா அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது சற்று கடினமான காரியமே.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கான டாப் 5 விஷயங்களைப் பார்க்கலாம்.

#5 ஆஸ்திரேலியாயின் தற்போதைய நிலை

Australian squad has not a strong one
Australian squad has not a strong one

அசைக்க முடியாத அணியாக வலம் வந்த ஆஸ்திரேலியாவின் சறுக்களுக்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. அதில் குறிப்பாக அணியின் முன்னனி வீரர்கள் அடுத்தடுத்து ஓய்வு பெற்றது மற்றும் மற்ற அணிகள்போல் அதிக வயதான வீரர்களை ஆஸ்திரேலியாவில் பார்ப்பது கடினம். குறிப்பிட்ட வயதை அடைந்தாலோ அல்லது இதற்கு மேல் தம்மால் செயல்பட முடியாது என்று நினைத்தாலோ அந்த வீரர் அணியிலிருந்து விலகிவிடுவார். அப்படித்தான் கில்கிறிஸ்ட் மற்றும் கிளார்க் ஓய்வு பெற்றவர்களாகும்.

கடந்த காலத்தில் ஆஸ்திரேலியா தொடக்க வீரர்கள் சொதப்பினாலும் அதனை மிடில் ஆர்டரில் களமிறங்கும் வீரர்கள் அதனைச் சரிசெய்வர். ஆனால் தற்போது அது போன்ற பேட்ஸ்மேன்கள் இப்போது இல்லை. ஒட்டுமொத்த பேட்டிங்கும் சொதப்பினால் கூடச் சிறந்த பந்து வீச்சால் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற போட்டிகள் ஏராளம். மெக்ராத், வார்னே, ஜான்சன்,பிரட் லீ போன்ற வீரர்களைக் கொண்ட ஆஸ்திரேலிய அணி தற்போது குறிப்பிட்டு சொல்லும் அளவிற்க்கு பவுலர்கள் இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் அடிக்கடி காயத்தால் அவதிப்பட்டு வருவது மேலும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.

தற்போதுள்ள நிலையில் ஆரோன் பின்ச்,நாதன் லியான், மார்ஷ் போன்ற வீரர்கள் ஓரளவு நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தி வருகின்றனர்.

#4 இந்திய அணியின் தற்போதைய நிலை

இந்திய அணி டெஸ்ட், டி20, ஒருநாள் என மூன்று வடிவிலான போட்டிகளிலும் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரை இந்திய அணி தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸ் அணிகளுக்கு எதிரான தொடர்களைக் கைப்பற்றி உள்ளது. மேலும் ஆசியக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையில் தோல்வியே தழுவாமல் கோப்பையைத் தன்வசப்படுத்தியது.

பந்து வீச்சில் பும்ரா,புவனேஷ் குமார்,குல்தீப்,சாஹல்,கைல் அகமது என நட்சத்திர பட்டாளத்தையே வைத்திருக்கிறது இந்தியா. இது மட்டுமின்றி டாப் ஆர்டரில் ரோகித்,தவான்,கோஹ்லியென மூவரும் தன் நிலையான பங்களிப்பை அளித்துவருகிறது குறிப்பிடத்தக்கது.மேலும் இதே ஆண்டில் தென்னாப்பிரிக்கா மண்ணில் முதல்முறையாக ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது. ரிஷப் பண்ட், கைல் அகமது எனப் புதுமுக வீரர்களைக் களமிறக்கி கொண்டிருக்கிறது பிசிசிஐ. என்ன தான் கூறினாலும் இந்தியாவின் மிடில் ஆர்டர் பிரச்சனை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அடுத்த ஆண்டு உலக்கோப்பை தொடர் நடைபெறும் நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

#3 உலக கோப்பையில் ஸ்மித் மற்றும் வார்னர்

Warner and Smith will return to  worldcup
Warner and Smith will return to worldcup

ஆஸ்திரேலியா அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில் கேப்டவுனில் நடந்த டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்தியதற்க்காக அப்போது கேப்டனாக இருந்த ஸ்டீவ் ஸ்மித் மற்றும் துணை கேப்டனாக இருந்த டேவிட் வார்னர் இருவரையும் சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதித்திருந்தது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம். இந்த தடை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முடிவடைகிறது. இதனால் ஆண்டு மே மாதம் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடரில் இருவரும் ஓராண்டு பிறகு மீண்டும் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் போட்டியை பொறுத்தவரை உலகக் கோப்பைக்காக ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றால் அணியில் இருந்து ஸ்மித் விடுவிக்கப்படுவார். இல்லாத பட்சத்தில் ஆஸ்திரேலியா நிர்வாகத்திடம் அனுமதி பெற்று குறிப்பிட்ட சில போட்டிகளில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டீவன் ஸ்மித் ஒரு கேப்டனாகவும், ஒரு வீரராகவும் மிகச் சிறப்பாக செயல்படக்கூடியவர். டெஸ்ட் போட்டியில் 117 இன்னிங்ஸில் 6199 ரன்களை குவித்து 23சதங்களுடன் டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 வீரராக இருந்தார். ஆனால் தற்போது 910 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். வார்னர் ஆஸ்திரேலியாவின் ஆக்ரோஷமான அதிரடி ஓபனிங் பேட்ஸ்மேன். ஐபிஎல் தொடரில் இவருடைய பங்களிப்பு மிகவும் அபாரமானது.

#2 விராட் கோஹ்லியின் பேட்டிங்

Kohli is looking aggresively while batting
Kohli is looking aggresively while batting

ரன் மெசின்,சேசிங் மாஸ்டர்,கிங் கோஹ்லி என இவருடைய நிக்நேம் நீண்டுகொண்டே செல்கிறது. தற்போது உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக வலம் வந்துகொண்டிருக்கிறார் விராட் கோஹ்லி.

இவர் 50 ரன்களை கடந்து விட்டாலே சதம் அடிப்பாரென இரசிகர்களின் மனதில் சமீபகாலங்களில் முடிவாகிவிட்டது. இந்தியாவில் சச்சினுக்கு பிறகு கவர் ட்ரைவ், ஸ்ட்ரைட் ட்ரைவ் மிகச்சிறப்பாக ஆடுவது விராட்கோலி மட்டுமே. உள்நாடு, வெளிநாடு என தான் விளையாடிய எல்லா நாட்டிலும் சதத்தைப் பதிவு செய்திருக்கிறார். ஒரு பேட்ஸ்மேன் தன் இன்னிங்சை எப்படி கட்டமைக்க வேண்டும் என்பதற்கு இவரே உதாரணம். பந்தைத் தூக்கி அடிக்காமல் தரையுடன் அடிப்பதில் வல்லவர். கோஹ்லியின் தலைமையில் டெஸ்டில் உலகின் நம்பர் அணியாக இருக்கிறது. இந்தியா சமீபத்தில் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 10000 ரன்களை கடந்தார். இவரை வீழ்த்துவது எதிரணிக்கு கடினமாகவே உள்ளது.

ஒரு காலத்தில் இந்திய அணிக்கு 300 ரன்களை சேசிங் செய்யக் கடினமாக இருக்கும். ஆனால் விராட் கோஹ்லி அலட்சியமாகச் சேசிங் செய்கிறார். விராட் கோஹ்லியின் பேட்டிங் சராசரி 59.8 என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றி பெற முடியும் என்ற நிலையில் கூடத் தோற்றுவிடக் கூடாது என்பதற்க்காக டிரா செய்வது வழக்கம். ஆனால் அதனை உடைந்தெறிந்தார் கோஹ்லி. டெஸ்ட் கேப்டனாகப் பதவியேற்ற உடனேயே அதைச் செய்தும் காட்டினார். 2014-ம் ஆண்டு அடிலெய்டில் நடந்த டெஸ்ட் போட்டியில் 2வது இன்னிங்ஸில் இந்திய அணிக்கான வெற்றி இலக்கு 364. இந்திய அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு குறைவு என்றே கருதப்பட்டது.கடைசி நாள் ஆட்டம் என்பதால் டிரா செய்ய முயலும் எனக் கருதப்பட்டது. ஆனால் கோஹ்லியும் மற்ற வீரர்களும் வெற்றிக்காகவே விளையாடினர். ஆனால் அந்தப் போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அந்தப் போட்டியில் 175 பந்துகளில் 141 ரன்கள் குவித்து வெற்றியின் அருகாமைக்கு கொண்டு வந்தார் விராட் கோஹ்லி.

#1 இந்தியாவின் புதுமுகங்கள் சாதிப்பார்களா?

Young khaleel ahmed doing a wonderful job
Young khaleel ahmed doing a wonderful job

இந்திய அணியில் தொடர்ந்து ஏகப்பட்ட மாற்றங்கள் அரங்கேறி வருகிறது. தற்போது அணிக்குள் கடுமையான போட்டி நிலவி வருகிறது. நீண்ட நாளாகவே இந்தியாவின் மிடில் ஆர்டர் கேள்விக்குறியாகவே இருக்கிறது. பல ஆட்டங்களில் டாப் ஆர்டரில் ரோகித், தவான் மற்றும் கோஹ்லி சொதப்பினால் ஒட்டுமொத்த அணியும் சீட்டுகட்டு போல் சரிந்துவிடுகிறது. சமீபத்தில் விராட் கோஹ்லி 4வது இடத்தில் ஆட அம்பத்தி ராயுடு தான் சரியான வீரர் எனப் பேட்டியளித்திருந்தார். அம்பத்தி ராயுடுவும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்தார். ஆனாலும் ஆஸ்திரேலியா தொடரில் அம்பத்தி ராயுடு சேர்க்கப்படாதது விசித்திரமாக உள்ளது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய அணியில் இடது கை பந்துவீச்சாளர் கிடைத்துள்ளார். கைல் அகமது மிகச்சிறப்பாக பந்து வீசிவருகிறார். ஆனால் புவனேஷ் குமார் இன்னும் தன் பழைய பார்ம்க்கு திரும்பவில்லை என்றே கூறவேண்டும். இதற்கிடையில் ப்ரித்வி ஷா மற்றும் ரிசப் பண்ட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் தன்னுடைய இடத்தை பிடிக்க நீண்டகாலமாக போராடி வருகிறார். திறமையான பேட்ஸ்மேன்கள் இருக்கும் நிலையில் மணிஷ் பாண்டே இந்திய அணியில் தொடர்ந்து சொதப்பும் நிலையிலும் ஏன் அவரை அணி தொடர்ந்து தேர்வுசெய்கிறது என்ற குழப்பம் நீடிக்கிறது.

மேலும் ப்ரித்வி ஷா மற்றும் ரிசப் பண்ட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அனுமா விஹாரி, மயன்க் அகர்வால்,வாஷிங்டன் சுந்தர் வாய்ப்புகளுக்காக காத்திருக்கின்றனர்.

நாதன் குல்டர்நைல்,நேதன் லயன் போன்ற வீரர்களின் பந்துவீச்சு இந்திய வீரர்களுக்கு சவாலானதாகும். மேக்ஸ்வெல், ஆரோன் பின்ச் அதிரடியாக ஆடக்கூடியவர்கள்.ரோகித் சர்மாவை பொறுத்தவரை நிலைத்து நின்று ஆடினால் மிகப்பெரிய இலக்கை எட்டக்கூடியவர். கடந்தமுறை பெர்த்தில் நடைபெற்ற ஓருநாள் போட்டியில் 171 ரன்களை குவித்தார். இம்முறை ஆஸ்திரேலியாவுக்கு ரிஷப் பண்ட்,குணால் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், கைல் அகமது, குல்தீப் யாதவ் போன்றோர் சென்றுள்ளனர் அவர்களுக்கு அங்குள்ள ஆடுகளத்தின் தன்மை மற்றும் சீதோஷ்ண நிலை புதியதாக இருக்கும்.

Quick Links