#5 ஆஸ்திரேலியாயின் தற்போதைய நிலை
அசைக்க முடியாத அணியாக வலம் வந்த ஆஸ்திரேலியாவின் சறுக்களுக்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. அதில் குறிப்பாக அணியின் முன்னனி வீரர்கள் அடுத்தடுத்து ஓய்வு பெற்றது மற்றும் மற்ற அணிகள்போல் அதிக வயதான வீரர்களை ஆஸ்திரேலியாவில் பார்ப்பது கடினம். குறிப்பிட்ட வயதை அடைந்தாலோ அல்லது இதற்கு மேல் தம்மால் செயல்பட முடியாது என்று நினைத்தாலோ அந்த வீரர் அணியிலிருந்து விலகிவிடுவார். அப்படித்தான் கில்கிறிஸ்ட் மற்றும் கிளார்க் ஓய்வு பெற்றவர்களாகும்.
கடந்த காலத்தில் ஆஸ்திரேலியா தொடக்க வீரர்கள் சொதப்பினாலும் அதனை மிடில் ஆர்டரில் களமிறங்கும் வீரர்கள் அதனைச் சரிசெய்வர். ஆனால் தற்போது அது போன்ற பேட்ஸ்மேன்கள் இப்போது இல்லை. ஒட்டுமொத்த பேட்டிங்கும் சொதப்பினால் கூடச் சிறந்த பந்து வீச்சால் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற போட்டிகள் ஏராளம். மெக்ராத், வார்னே, ஜான்சன்,பிரட் லீ போன்ற வீரர்களைக் கொண்ட ஆஸ்திரேலிய அணி தற்போது குறிப்பிட்டு சொல்லும் அளவிற்க்கு பவுலர்கள் இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் அடிக்கடி காயத்தால் அவதிப்பட்டு வருவது மேலும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.
தற்போதுள்ள நிலையில் ஆரோன் பின்ச்,நாதன் லியான், மார்ஷ் போன்ற வீரர்கள் ஓரளவு நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தி வருகின்றனர்.
#4 இந்திய அணியின் தற்போதைய நிலை
இந்திய அணி டெஸ்ட், டி20, ஒருநாள் என மூன்று வடிவிலான போட்டிகளிலும் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரை இந்திய அணி தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸ் அணிகளுக்கு எதிரான தொடர்களைக் கைப்பற்றி உள்ளது. மேலும் ஆசியக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையில் தோல்வியே தழுவாமல் கோப்பையைத் தன்வசப்படுத்தியது.
பந்து வீச்சில் பும்ரா,புவனேஷ் குமார்,குல்தீப்,சாஹல்,கைல் அகமது என நட்சத்திர பட்டாளத்தையே வைத்திருக்கிறது இந்தியா. இது மட்டுமின்றி டாப் ஆர்டரில் ரோகித்,தவான்,கோஹ்லியென மூவரும் தன் நிலையான பங்களிப்பை அளித்துவருகிறது குறிப்பிடத்தக்கது.மேலும் இதே ஆண்டில் தென்னாப்பிரிக்கா மண்ணில் முதல்முறையாக ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது. ரிஷப் பண்ட், கைல் அகமது எனப் புதுமுக வீரர்களைக் களமிறக்கி கொண்டிருக்கிறது பிசிசிஐ. என்ன தான் கூறினாலும் இந்தியாவின் மிடில் ஆர்டர் பிரச்சனை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அடுத்த ஆண்டு உலக்கோப்பை தொடர் நடைபெறும் நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
#3 உலக கோப்பையில் ஸ்மித் மற்றும் வார்னர்
ஆஸ்திரேலியா அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில் கேப்டவுனில் நடந்த டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்தியதற்க்காக அப்போது கேப்டனாக இருந்த ஸ்டீவ் ஸ்மித் மற்றும் துணை கேப்டனாக இருந்த டேவிட் வார்னர் இருவரையும் சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதித்திருந்தது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம். இந்த தடை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முடிவடைகிறது. இதனால் ஆண்டு மே மாதம் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடரில் இருவரும் ஓராண்டு பிறகு மீண்டும் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் போட்டியை பொறுத்தவரை உலகக் கோப்பைக்காக ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றால் அணியில் இருந்து ஸ்மித் விடுவிக்கப்படுவார். இல்லாத பட்சத்தில் ஆஸ்திரேலியா நிர்வாகத்திடம் அனுமதி பெற்று குறிப்பிட்ட சில போட்டிகளில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டீவன் ஸ்மித் ஒரு கேப்டனாகவும், ஒரு வீரராகவும் மிகச் சிறப்பாக செயல்படக்கூடியவர். டெஸ்ட் போட்டியில் 117 இன்னிங்ஸில் 6199 ரன்களை குவித்து 23சதங்களுடன் டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 வீரராக இருந்தார். ஆனால் தற்போது 910 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். வார்னர் ஆஸ்திரேலியாவின் ஆக்ரோஷமான அதிரடி ஓபனிங் பேட்ஸ்மேன். ஐபிஎல் தொடரில் இவருடைய பங்களிப்பு மிகவும் அபாரமானது.