#2 விராட் கோஹ்லியின் பேட்டிங்
ரன் மெசின்,சேசிங் மாஸ்டர்,கிங் கோஹ்லி என இவருடைய நிக்நேம் நீண்டுகொண்டே செல்கிறது. தற்போது உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக வலம் வந்துகொண்டிருக்கிறார் விராட் கோஹ்லி.
இவர் 50 ரன்களை கடந்து விட்டாலே சதம் அடிப்பாரென இரசிகர்களின் மனதில் சமீபகாலங்களில் முடிவாகிவிட்டது. இந்தியாவில் சச்சினுக்கு பிறகு கவர் ட்ரைவ், ஸ்ட்ரைட் ட்ரைவ் மிகச்சிறப்பாக ஆடுவது விராட்கோலி மட்டுமே. உள்நாடு, வெளிநாடு என தான் விளையாடிய எல்லா நாட்டிலும் சதத்தைப் பதிவு செய்திருக்கிறார். ஒரு பேட்ஸ்மேன் தன் இன்னிங்சை எப்படி கட்டமைக்க வேண்டும் என்பதற்கு இவரே உதாரணம். பந்தைத் தூக்கி அடிக்காமல் தரையுடன் அடிப்பதில் வல்லவர். கோஹ்லியின் தலைமையில் டெஸ்டில் உலகின் நம்பர் அணியாக இருக்கிறது. இந்தியா சமீபத்தில் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 10000 ரன்களை கடந்தார். இவரை வீழ்த்துவது எதிரணிக்கு கடினமாகவே உள்ளது.
ஒரு காலத்தில் இந்திய அணிக்கு 300 ரன்களை சேசிங் செய்யக் கடினமாக இருக்கும். ஆனால் விராட் கோஹ்லி அலட்சியமாகச் சேசிங் செய்கிறார். விராட் கோஹ்லியின் பேட்டிங் சராசரி 59.8 என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றி பெற முடியும் என்ற நிலையில் கூடத் தோற்றுவிடக் கூடாது என்பதற்க்காக டிரா செய்வது வழக்கம். ஆனால் அதனை உடைந்தெறிந்தார் கோஹ்லி. டெஸ்ட் கேப்டனாகப் பதவியேற்ற உடனேயே அதைச் செய்தும் காட்டினார். 2014-ம் ஆண்டு அடிலெய்டில் நடந்த டெஸ்ட் போட்டியில் 2வது இன்னிங்ஸில் இந்திய அணிக்கான வெற்றி இலக்கு 364. இந்திய அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு குறைவு என்றே கருதப்பட்டது.கடைசி நாள் ஆட்டம் என்பதால் டிரா செய்ய முயலும் எனக் கருதப்பட்டது. ஆனால் கோஹ்லியும் மற்ற வீரர்களும் வெற்றிக்காகவே விளையாடினர். ஆனால் அந்தப் போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அந்தப் போட்டியில் 175 பந்துகளில் 141 ரன்கள் குவித்து வெற்றியின் அருகாமைக்கு கொண்டு வந்தார் விராட் கோஹ்லி.
#1 இந்தியாவின் புதுமுகங்கள் சாதிப்பார்களா?
இந்திய அணியில் தொடர்ந்து ஏகப்பட்ட மாற்றங்கள் அரங்கேறி வருகிறது. தற்போது அணிக்குள் கடுமையான போட்டி நிலவி வருகிறது. நீண்ட நாளாகவே இந்தியாவின் மிடில் ஆர்டர் கேள்விக்குறியாகவே இருக்கிறது. பல ஆட்டங்களில் டாப் ஆர்டரில் ரோகித், தவான் மற்றும் கோஹ்லி சொதப்பினால் ஒட்டுமொத்த அணியும் சீட்டுகட்டு போல் சரிந்துவிடுகிறது. சமீபத்தில் விராட் கோஹ்லி 4வது இடத்தில் ஆட அம்பத்தி ராயுடு தான் சரியான வீரர் எனப் பேட்டியளித்திருந்தார். அம்பத்தி ராயுடுவும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்தார். ஆனாலும் ஆஸ்திரேலியா தொடரில் அம்பத்தி ராயுடு சேர்க்கப்படாதது விசித்திரமாக உள்ளது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய அணியில் இடது கை பந்துவீச்சாளர் கிடைத்துள்ளார். கைல் அகமது மிகச்சிறப்பாக பந்து வீசிவருகிறார். ஆனால் புவனேஷ் குமார் இன்னும் தன் பழைய பார்ம்க்கு திரும்பவில்லை என்றே கூறவேண்டும். இதற்கிடையில் ப்ரித்வி ஷா மற்றும் ரிசப் பண்ட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் தன்னுடைய இடத்தை பிடிக்க நீண்டகாலமாக போராடி வருகிறார். திறமையான பேட்ஸ்மேன்கள் இருக்கும் நிலையில் மணிஷ் பாண்டே இந்திய அணியில் தொடர்ந்து சொதப்பும் நிலையிலும் ஏன் அவரை அணி தொடர்ந்து தேர்வுசெய்கிறது என்ற குழப்பம் நீடிக்கிறது.
மேலும் ப்ரித்வி ஷா மற்றும் ரிசப் பண்ட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அனுமா விஹாரி, மயன்க் அகர்வால்,வாஷிங்டன் சுந்தர் வாய்ப்புகளுக்காக காத்திருக்கின்றனர்.
நாதன் குல்டர்நைல்,நேதன் லயன் போன்ற வீரர்களின் பந்துவீச்சு இந்திய வீரர்களுக்கு சவாலானதாகும். மேக்ஸ்வெல், ஆரோன் பின்ச் அதிரடியாக ஆடக்கூடியவர்கள்.ரோகித் சர்மாவை பொறுத்தவரை நிலைத்து நின்று ஆடினால் மிகப்பெரிய இலக்கை எட்டக்கூடியவர். கடந்தமுறை பெர்த்தில் நடைபெற்ற ஓருநாள் போட்டியில் 171 ரன்களை குவித்தார். இம்முறை ஆஸ்திரேலியாவுக்கு ரிஷப் பண்ட்,குணால் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், கைல் அகமது, குல்தீப் யாதவ் போன்றோர் சென்றுள்ளனர் அவர்களுக்கு அங்குள்ள ஆடுகளத்தின் தன்மை மற்றும் சீதோஷ்ண நிலை புதியதாக இருக்கும்.