இந்திய கிரிக்கெட் அணி மகேந்திர சிங் தோனி மற்றும் விராத் கோஹ்லி ஆகியோரின் தலைமையின் கீழ் விரைவாகவும் மிகச்சிறப்பாகவும் வளர்ந்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா தற்போது முதலிடம் வகிக்கிறது, ஒருநாள் சர்வதேச போட்டி மற்றும் டி 20 போட்டிகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் விராட் கோஹ்லி, ரோஹித் ஷர்மா மற்றும் மகேந்திர சிங் தோனி ஆகியோர் அவர்களது திறமையை நிருபித்து அணியில் நிரந்தர இடம் பிடித்தனர். சில முன்னனி கிரிக்கெட் வீரர்கள் அணியில் தங்கள் இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை.
குறிப்பு: 2006 க்குப் பிறகு இந்தியாவில் விளையாடிய கிரிக்கெட் வீரர்கள் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளனர்.
# 1 அபினவ் முகுந்த்
2011 ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது, இந்திய கிரிக்கெட்டில் தனது முதல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார் அபினவ் முகுந்த். இந்திய மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகளிலும் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
இருப்பினும், முகுந்த் தனது திறமையை சரியாக பயன்படுத்த தவறினார். தொடரின் பின்னர் அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டார். மீண்டும் டெஸ்ட் அணிக்கு வருவதற்கு 6 வருடங்கள் தேவைப்பட்டது
2017 ல் ஸ்ரீலங்காவுக்கு எதிராகவும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த அவர் தவறிவிட்டார். கே.எல். ராகுல் மற்றும் பிருத்வி ஷா ஆகியோர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவுக்கு விளையாடும் முகுந்தின் கனவு, ஒரு கனவாகவே போவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
# 2 ராபின் உத்தப்பா
2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் தோற்ற கதாநாயகர்களில் ஒருவரான ராபின் உத்தப்பா, 2006 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகமானார். அவர் தனது தேர்வுக்கு நியாயப்படுத்தவில்லை. இந்தியா அணி வெற்றி பெற்ற போதிலும், சுமாரான பார்ம் காரணமாக அவர் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
2007 இல் இந்தியாவில் நடைபெற்ற மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இடம் கிடைக்காத பொதும், 2008 இல் இங்கிலாந்து எதிராக நாட்வெஸ்ட் தொடர் மற்றும் 2014 ல் ஆசியா கோப்பை அணியில் ஒரு முக்கிய வீரராக தன்னை நிறுவ முடிந்தது.
2019 ம் ஆண்டு உலக கோப்பையைக் கைப்பற்றி தோனி ஓய்வு அளிக்க முடிவு செய்துள்ள நிலையில், அணியில் இடம் கிடைக்க கார்த்திக் & ரிஷாப் பன்ட் ஆகியோருக்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. ஏறத்தாழ உத்தப்பா ஏற்கனவே இந்தியாவுக்கு கடைசி போட்டியில் விளையாடிவிட்டார்.
# 3 சௌரப் திவாரி
ஜார்கண்ட் அணியின் நடுநிலை வீரரான சௌரப் திவாரி, இந்தியாவின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக தன்னை நிலைநாட்டியிருக்க முடியும். அவர் தனது பேட்டிங் ஸ்டைல் மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றை மறுசீரமைத்தார்.
2010 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரு நாள் தொடரில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு அணியில் இடம் பிடித்தார். 3 போட்டிகளில் அவர் இந்தியாவுக்கு விளையாடினார். அதிகபட்ச ஸ்கோராக 49 ரன்கள் எடுத்தார்.
உள்ளூர் (Domestic) போட்டிகளில் பங்கேற்று தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர், தன் ஆட்ட ஸ்டைலில் சில மாற்றங்களுடன் மிகக் கவனமாக விளையாடியிருந்தால், இந்திய அணியில் நிச்சயம் நிரந்தர இடம் கிடைத்து இருக்கும்.
# 4 மனோஜ் திவாரி
மனோஜ் திவாரி, உள்ளூர் (Domestic) போட்டிகளில் வங்காளத்தின் கேப்டன். அவரது காயம் காரணமாக தேர்ந்தெடுக்கப்பட்ட தொடர் முழுவதையும் விட்டுவிட்டார். மனோஜ் திவாரி, இந்தியா அணியின் பேட்டிங் வரிசைக்கு நிலைப்புத்தன்மையை வழங்க முடியும், ஏனெனில் அவர் பல முதல் தரப் போட்டியில் கேப்டனாகவும், நல்ல மிடில் ஆர்டர் ஆட்டக்காரராகவும் இருந்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்துள்ளார்.
யுவராஜ் சிங்கிற்கு மாற்றாக 2011 ல் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் அறிமுகமானார். இந்தியாவுக்கு 12 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அவர், 26.09 என்ற சராசரியில் 287 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் வலது கைச்சுழற் பந்து வீச்சாளரான இவர் சில விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.
முழங்கால் காயம் காரணமாக 2013 ஆண்டு நடைபெற்ற ஜிம்பாப்வேவிற்கு எதிரான தொடரிலிருந்து வெளியேறினார். பின்பு அணியில் இடம் பெற முயற்சித்தும் அம்படி ராயுடு சிறப்பாக செயல் பட்டதால் இவரது வாய்ப்பு பறிபோனது.
# 5 குர்கீரத் சிங் மன்
இந்திய A கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் குர்கீரத் சிங், உள்ளூர் (Domestic) போட்டிகளில் ஒரு முக்கிய நபராக இருந்தார். குர்கீரத், 2016 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான Quadrangular ஒருநாள் தொடரில் இந்திய அணியில் இடம் பிடித்தார்.
அவர் 3 போட்டிகளில் இந்தியாவுக்கு விளையாடி 13 ரன்களை எடுத்தார். கிடைத்த வாய்ப்பைச் சரிவரப் பயன்படுத்தாமல், அணியிலிருந்து நீக்கப்பட்டார்.
ஹர்தீக் பாண்டியா மற்றும் கேதர் ஜாதவ் ஆகியோருடன் இந்தியா முழுமையான ஆல்-ரவுண்டர் பலத்துடன் இருப்பதால், குர்கீரத் சிங் மேன் தேர்வாளர்களால் கூடக் கருதப்படமாட்டார்.
# 6 பவன் நேகி
பவன் நேகி, டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக 8.5 கோடி ரூபாய்க்கு வாங்கியபோது டெல்லி அணியில் இருந்த அனைத்து ஆல்-ரவுண்டர்களையும் வென்றார். இருப்பினும், அவர் விலை குறிப்பிற்கு எந்தவொரு நீதியும் செய்யவில்லை. அடுத்த சீசனில் அணியால் வெளியேற்றப்பட்டார்.
அதற்கு முன்னதாக நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடிய இவர், 2016 ஆசியா கோப்பையில் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். அவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கெதிராக தனது முதல் வாய்ப்பைப் பெற்றார். அவரால் ஒரே ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்த முடிந்தது.
ஒரு நல்ல திறமை மிக்க ஆல்-ரவுண்டர் என அழைக்கப்பட்ட போதிலும், அவரால் பேட்டிங் மற்றும் பந்துவீச்சுகளில் சிறப்பாக செயல்பட முடியவில்லை.
# 7 ரிஷி தவான்
குறுகிய காலத்தில் நல்ல ஆல் ரவுண்டர் என்ற பெயர் எடுத்த ரிஷி தவான், இந்தியாவின் மிடில் ஆர்டருக்கான தீர்வு என பலரால் கருதப்பட்ட வீரர். சுமாரான பார்ம் காரணமாக தேசிய அணியில் இடம் கிடைக்காத போதும், IPL போட்டியில் கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கு விளையாடும் வாய்ப்பை பெற்றார்.
மூன்று சர்வதேச ஒரு நாள் மற்றும் ஒரு டி-20 போட்டிக்காக இந்திய அணியில் விளையாடினார், அந்தத் தொடரில் வெறும் 13 ரன்கள் மட்டுமே எடுத்தார். பந்து வீச்சில் 8.50 என்று அதிக எகானமி ரேட் (Economy Rate) மற்றும் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே எடுத்தார். அவர் கடைசியாக ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 2016 ல் இந்தியாவுக்கு விளையாடினார்.
அச்சமயத்தில் கேதார் ஜாதவ் நல்ல ஆல் ரவுண்டராக சிறப்பாக செயல் பட்டதால் இவரது வாய்ப்பு பறி போனது. பல IPL போட்டியில் விளையாடிய அனுபவம் இருந்தும் இவரால் தனது சிறந்த ஆட்டத்தை இந்திய அணிக்காக விளையாட முடியவில்லை.
# 8 பங்கஜ் சிங்
உள்ளூர் போட்டிகளில் மிகவும் அனுபவம் வாய்ந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் பங்கஜ் சிங் ஆவார். அவர் 2010 ல் இலங்கைக்கு எதிராக இந்தியாவுக்கு அறிமுகமானார். அவர் அந்தப் போட்டியில் 1 விக்கெட் வீழ்த்தி 7 ஓவர்களில் 45 ரன்கள் எடுத்துக் கொண்டார்.
2014 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக அறிவித்த டெஸ்ட் அணியில் இடம் பிடித்து, ஒரு ஆட்டம் விளையாடும் வாய்ப்பும் பெற்றார். கிடைத்த வாய்ப்பைத் தவறவிட்ட பங்கஜ் சிங், தனது திறனை வெளிக்காட்டாமல் சோபிக்க தவறினார். அதோடு இந்திய அணியும் அந்தப் போட்டியில் தோல்வியைச் சந்தித்தது.
நல்ல திறமை கொண்ட பங்கஜ் சிங், புவனேஸ்வர், பும்ராஹ், ஷமி, உமேஷ் யாதவ் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களை மீறி அணியில் இவர் இடம் பிடிப்பது சற்றே கடினமான ஒன்றுதான்.
# 9 தீபக் சாஹார்
கடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி, தனது வேகப்பந்து வீச்சால் பல பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தவர் தீபக் சாஹர். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ராஹ் இடம் பெறாததால் இவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.
பிளாட் பிட்ச் போன்ற மைதானத்தில் பல ஆட்டங்கள் நடைபெற்றதால், இவரது திறமைக்குச் சரியான தீனி கிடைக்காமல் போனது மற்றும் இவரது ஸ்விங் பௌலிங் அணிக்கு எந்த வகையிலும் உதவவில்லை. சமீபத்தில் நடைபெற்ற ஆசியா கோப்பையில், அவர் ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மன்களால் ரன்கள் விலாசப்பட்டார். மேலும் அவர் 9.25 என்ற எகானமி ரேட் (Economy Rate) இல் 4 ஓவர்களில் 37 ரன்களை வாரி வழங்கினார்.
தீபக் சாஹர் ஒரு திறமையான ஸ்விங் பௌலர் என்ற போதும், இவரைப் போல் சந்தீப் சர்மாவும் நன்றாக பந்தை ஸ்விங் செய்யக் கூடியவர். வாய்ப்பு கிடைத்தால் பயன் படுத்திக்கொள்ளும் முனைப்பில் இருவரும் உள்ளனர்.
# 10 பர்வேஸ் ரஸூல்
ஜம்மு காஷ்மீரிலிருந்து இந்தியாவிற்காக விளையாடிய ஒரே ஒரு கிரிக்கெட் வீரர் என்று பரவலாக அறியப்பட்ட இவர், 2014 ல் வங்கதேசத்திற்கு எதிராக இந்திய அணியில் அறிமுகமானார். உள்ளூர் போட்டிகளில் தனது திறமையைச் சரியாக வெளிப்படுத்தினார்.
ரஸூல் ஒரு பேட்டிங் ஆல்-ரவுண்டராகவும், மிடில் ஆர்டர் ஓவர்களில் தனது பந்து வீச்சால் பேட்ஸ்மேன்களை திறணறடிக்கக்கூடிய திறமை கொண்டவர். இந்த திறமையான திறன்களை வைத்திருந்தபோதிலும், அவர் பந்துவீச்சில் வேறுபாடுகள் இல்லாததால் எதிர்பார்ப்புகளுக்கு விளையாட முடியவில்லை.
அவர் கடைசியாக 2016 ல் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடியுள்ளார். அதில் அவர் 5 ரன்கள் எடுத்தார், மேலும் 4 ஓவர்களில் 32 ரன்கள் விட்டுக் கொடுத்தார். யுசுவெந்திர சஹால் மற்றும் குல்தீப் யாதவ் மணிக்கட்டு ஸ்பின்(Wrist Spin) முன்னிலையில், பர்வீஸ் ரஸூல் தனது திறமையை நிருபித்து அணியில் இடம் பிடிப்பது கடினம்
# 11 ஸ்ரீநாத் அரவிந்த்
.விஜய் ஹசாரே கோப்பையை இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கர்நாடகா பெற்றிருந்த அணியில் இடம் பெற்று இருந்தார். அரவிந்த் தனது வரிசையையும் நீளத்தையும் தொடர்ந்து கிள்ளி எறிவார்.
ஜாகீர் கான் ஓய்வு பெற்ற பின்னர் இடது கைப்பந்து வீச்சாளர் ஒருவர் அணிக்குத் தேவைப்பட்டார். 2015 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக டி- 20 தொடரில் தேசிய அரங்கில் நுழைவதற்கு வழிவகுத்தது. இருப்பினும், ஸ்ரீநாத் அரவிந்த் தனது முதல் ஆட்டத்திற்கு பிறகு அணியிலிருந்து வெளியேறினார். 3.4 ஓவர்களில் 44 ரன்களையும் விட்டுக்கொடுத்தார்.
அரவிந்த், பேட்ஸ்மேன்களை பெரும்பாலும் தனது வேகத்தால் திணறச்செய்ய தவறினார். அதே நேரத்தில் பரிந்தர் ஸ்ரான் மற்றும் ஜெய்தேவ் உனாட்கட் போன்ற மற்ற இடது சாரி வீரர்கள் அதை அடைவதில் நிபுணர்களாக உள்ளனர். தற்போது கலீல் அஹ்மத் தனது இடது கை பந்து வீச்சால் அனைவரையும் கவர்ந்து உள்ளார். கிடைத்த வாய்ப்பையும் நன்றாக பயன்படுத்தி கொண்ட இவர், நீண்ட நாள் அணியில் இருப்பார் போர் உள்ளது.