# 4 மனோஜ் திவாரி
மனோஜ் திவாரி, உள்ளூர் (Domestic) போட்டிகளில் வங்காளத்தின் கேப்டன். அவரது காயம் காரணமாக தேர்ந்தெடுக்கப்பட்ட தொடர் முழுவதையும் விட்டுவிட்டார். மனோஜ் திவாரி, இந்தியா அணியின் பேட்டிங் வரிசைக்கு நிலைப்புத்தன்மையை வழங்க முடியும், ஏனெனில் அவர் பல முதல் தரப் போட்டியில் கேப்டனாகவும், நல்ல மிடில் ஆர்டர் ஆட்டக்காரராகவும் இருந்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்துள்ளார்.
யுவராஜ் சிங்கிற்கு மாற்றாக 2011 ல் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் அறிமுகமானார். இந்தியாவுக்கு 12 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அவர், 26.09 என்ற சராசரியில் 287 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் வலது கைச்சுழற் பந்து வீச்சாளரான இவர் சில விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.
முழங்கால் காயம் காரணமாக 2013 ஆண்டு நடைபெற்ற ஜிம்பாப்வேவிற்கு எதிரான தொடரிலிருந்து வெளியேறினார். பின்பு அணியில் இடம் பெற முயற்சித்தும் அம்படி ராயுடு சிறப்பாக செயல் பட்டதால் இவரது வாய்ப்பு பறிபோனது.
# 5 குர்கீரத் சிங் மன்
இந்திய A கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் குர்கீரத் சிங், உள்ளூர் (Domestic) போட்டிகளில் ஒரு முக்கிய நபராக இருந்தார். குர்கீரத், 2016 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான Quadrangular ஒருநாள் தொடரில் இந்திய அணியில் இடம் பிடித்தார்.
அவர் 3 போட்டிகளில் இந்தியாவுக்கு விளையாடி 13 ரன்களை எடுத்தார். கிடைத்த வாய்ப்பைச் சரிவரப் பயன்படுத்தாமல், அணியிலிருந்து நீக்கப்பட்டார்.
ஹர்தீக் பாண்டியா மற்றும் கேதர் ஜாதவ் ஆகியோருடன் இந்தியா முழுமையான ஆல்-ரவுண்டர் பலத்துடன் இருப்பதால், குர்கீரத் சிங் மேன் தேர்வாளர்களால் கூடக் கருதப்படமாட்டார்.