# 6 பவன் நேகி
பவன் நேகி, டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக 8.5 கோடி ரூபாய்க்கு வாங்கியபோது டெல்லி அணியில் இருந்த அனைத்து ஆல்-ரவுண்டர்களையும் வென்றார். இருப்பினும், அவர் விலை குறிப்பிற்கு எந்தவொரு நீதியும் செய்யவில்லை. அடுத்த சீசனில் அணியால் வெளியேற்றப்பட்டார்.
அதற்கு முன்னதாக நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடிய இவர், 2016 ஆசியா கோப்பையில் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். அவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கெதிராக தனது முதல் வாய்ப்பைப் பெற்றார். அவரால் ஒரே ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்த முடிந்தது.
ஒரு நல்ல திறமை மிக்க ஆல்-ரவுண்டர் என அழைக்கப்பட்ட போதிலும், அவரால் பேட்டிங் மற்றும் பந்துவீச்சுகளில் சிறப்பாக செயல்பட முடியவில்லை.
# 7 ரிஷி தவான்
குறுகிய காலத்தில் நல்ல ஆல் ரவுண்டர் என்ற பெயர் எடுத்த ரிஷி தவான், இந்தியாவின் மிடில் ஆர்டருக்கான தீர்வு என பலரால் கருதப்பட்ட வீரர். சுமாரான பார்ம் காரணமாக தேசிய அணியில் இடம் கிடைக்காத போதும், IPL போட்டியில் கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கு விளையாடும் வாய்ப்பை பெற்றார்.
மூன்று சர்வதேச ஒரு நாள் மற்றும் ஒரு டி-20 போட்டிக்காக இந்திய அணியில் விளையாடினார், அந்தத் தொடரில் வெறும் 13 ரன்கள் மட்டுமே எடுத்தார். பந்து வீச்சில் 8.50 என்று அதிக எகானமி ரேட் (Economy Rate) மற்றும் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே எடுத்தார். அவர் கடைசியாக ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 2016 ல் இந்தியாவுக்கு விளையாடினார்.
அச்சமயத்தில் கேதார் ஜாதவ் நல்ல ஆல் ரவுண்டராக சிறப்பாக செயல் பட்டதால் இவரது வாய்ப்பு பறி போனது. பல IPL போட்டியில் விளையாடிய அனுபவம் இருந்தும் இவரால் தனது சிறந்த ஆட்டத்தை இந்திய அணிக்காக விளையாட முடியவில்லை.