# 8 பங்கஜ் சிங்
உள்ளூர் போட்டிகளில் மிகவும் அனுபவம் வாய்ந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் பங்கஜ் சிங் ஆவார். அவர் 2010 ல் இலங்கைக்கு எதிராக இந்தியாவுக்கு அறிமுகமானார். அவர் அந்தப் போட்டியில் 1 விக்கெட் வீழ்த்தி 7 ஓவர்களில் 45 ரன்கள் எடுத்துக் கொண்டார்.
2014 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக அறிவித்த டெஸ்ட் அணியில் இடம் பிடித்து, ஒரு ஆட்டம் விளையாடும் வாய்ப்பும் பெற்றார். கிடைத்த வாய்ப்பைத் தவறவிட்ட பங்கஜ் சிங், தனது திறனை வெளிக்காட்டாமல் சோபிக்க தவறினார். அதோடு இந்திய அணியும் அந்தப் போட்டியில் தோல்வியைச் சந்தித்தது.
நல்ல திறமை கொண்ட பங்கஜ் சிங், புவனேஸ்வர், பும்ராஹ், ஷமி, உமேஷ் யாதவ் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களை மீறி அணியில் இவர் இடம் பிடிப்பது சற்றே கடினமான ஒன்றுதான்.
# 9 தீபக் சாஹார்
கடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி, தனது வேகப்பந்து வீச்சால் பல பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தவர் தீபக் சாஹர். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ராஹ் இடம் பெறாததால் இவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.
பிளாட் பிட்ச் போன்ற மைதானத்தில் பல ஆட்டங்கள் நடைபெற்றதால், இவரது திறமைக்குச் சரியான தீனி கிடைக்காமல் போனது மற்றும் இவரது ஸ்விங் பௌலிங் அணிக்கு எந்த வகையிலும் உதவவில்லை. சமீபத்தில் நடைபெற்ற ஆசியா கோப்பையில், அவர் ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மன்களால் ரன்கள் விலாசப்பட்டார். மேலும் அவர் 9.25 என்ற எகானமி ரேட் (Economy Rate) இல் 4 ஓவர்களில் 37 ரன்களை வாரி வழங்கினார்.
தீபக் சாஹர் ஒரு திறமையான ஸ்விங் பௌலர் என்ற போதும், இவரைப் போல் சந்தீப் சர்மாவும் நன்றாக பந்தை ஸ்விங் செய்யக் கூடியவர். வாய்ப்பு கிடைத்தால் பயன் படுத்திக்கொள்ளும் முனைப்பில் இருவரும் உள்ளனர்.