நடந்தது என்ன?
இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஃபில்டிங் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது அந்த அணியின் கேப்டன் இயான் மோர்கனுக்கு இடது கையின் ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டது. இயான் மோர்கன் உடனே மருத்துவரை அணுகி இடது கையினை X-ரே சோதனை செய்து பார்த்தார். இதனால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பயிற்சி ஆட்டத்திலிருந்து விலகியுள்ளார். மேலும் அடுத்து வரும் போட்டிகளிலும் பங்கேற்பது சற்று சந்தேகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கு தெரியுமா...
12வது மிக பிரம்மாண்டமான கிரிக்கெட் திருவிழாவான ஐசிசி 2019 உலகக் கோப்பை தொடர் மே 30 அன்று இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் தொடங்க உள்ளது. உலகக் கோப்பையில் பங்கேற்க உள்ள அனைத்து அணிகளும் இங்கிலாந்திற்கு சென்று தங்களது பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
2015 உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணியின் ஆட்டத்தை எவராலும் மறந்திருக்க முடியாது. அந்த உலகக் கோப்பை தொடரில் வங்கதேசத்திடன் தோல்வியை தழுவி குழு சுற்றுடனே நடையைக் கட்டியது இங்கிலாந்து கிரிக்கெட் அணி. இருப்பினும் 2015 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு இங்கிலாந்து அணி அதிகம் தனது ஆட்டத்திறனை மேம்படுத்தியுள்ளது. தற்போது ஓடிஐ கிரிக்கெட்டில் உலகின் நம்பர் 1 அணியாக திகழ்வது இதற்கு சான்றாக கூறலாம். அத்துடன் 2019 உலகக் கோப்பை தொடரில் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணியாக திகழ்கிறது.
கதைக்கரு
கடந்த 4 வருடங்களாக இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு இயான் மோர்கனின் கேப்டன் ஷீப் மிக முக்கிய காரணமாக இருந்து வந்துள்ளது. அவரது வழிநடத்தும் திறன் இங்கிலாந்து அணிக்கு மிக முக்கியமான கட்டங்களில் பெரிதும் உதவியுள்ளது. அத்துடன் மிடில் ஆர்டரில் அவரது பேட்டிங் பங்களிப்பு இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு ஓடிஐ கிரிக்கெட்டில் மிகவும் அதிகமாக இருந்துள்ளது. தற்போது இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கனுக்கு இடது கை-யின் ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டுள்ளது.
சில மணி நேரங்களுக்கு பிறகு அந்த காயத்தின் வலி மிகவும் அதிகமாக இருந்துள்ள காரணத்தால் இயான் மோர்கன் மருத்துவ மனைக்கு சென்று X-ரே பரிசோதனை செய்து பார்த்துள்ளார்.
அனுபவ இடது கை பேட்ஸ்மேனான இயான் மோர்கன் 221 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 6977 ரன்களை குவித்துள்ளார். இங்கிலாந்து அணியின் மிக முக்கியமான வீரராக இவர் உள்ளார். இவர் ஒரு இங்கிலாந்து கேப்டனாக மட்டுமல்லாமல் தொடரந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறமை கொண்ட பேட்ஸ்மேனாகவும் திகழ்கிறார். பாகிஸ்தானிற்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் இயான் மோர்கன் பங்கேற்காத போது இங்கிலாந்து அணியினை ஜாஸ் பட்லர் வழிநடத்தினார். எனவே பயிற்சி ஆட்டத்தில் ஜாஸ் பட்லர் இங்கிலாந்து கேப்டனாக செயல்படுவார் என தெரிகிறது.
அடுத்தது என்ன?
ஃபில்டிங் பயிற்சியின்போது எதிர்பாரத விதமாக இந்த விபத்து இயான் மோர்கனுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான இரு போட்டிகள் கொண்ட உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இயான் மோர்கன் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது. இயான் மோர்கனின் காயம் மிகவும் அதிகமாக இருப்பின் இங்கிலாந்து அணியின் உலககோப்பை கனவு கண்டிப்பாக பறிபோக வாய்ப்புள்ளது.