இந்திய கிரிக்கெட் அணி நேற்று வலைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது கேப்டன் விராட் கோலிக்கு கட்டை விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. சவுத்தாம்டன் மைதானத்தில் பயிற்சியில் சக வீரர்களுடன் விராட் கோலி ஈடுபட்டு கொட்டிருந்த போது இந்த காயம் இவருக்கு ஏற்பட்டுள்ளது. ஜீன் 5 அனறு தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டிக்கு முன்பாக விராட் கோலி குணமடைந்து விடுவார் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கட்டை விரலில் காயம் ஏற்பட்டுள்ள காரணத்தால் விராட் கோலி சற்று வலி உணர்வுடன் காணப்பட்டார். எனவே உடனே இந்திய பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் ஃபேர்ஹார்ட்-டம் அணுகி சிகிச்சை எடுத்துக் கொண்டார். விராட் கோலி சில ஐஸ் கட்டிகளை கட்டை விரலில் வைப்பதற்கு முன்பாக ஃபேர்ஹார்ட் சில வலி நிவாரணிகளை அவருக்கு அளித்தார். விராட் கோலி பயிற்சி குழுவிலிருந்து ஓய்வறைக்கு சென்று விட்டார். இந்திய அணி உலகக் கோப்பை தொடரில் 9 தகுதிச்சுற்று போட்டிகளில் பங்கேற்க உள்ள காரணத்தால் இந்திய அணி நிர்வாகம் விராட் கோலியின் உடல் தகுதியில் அதிக கவனம் செலுத்தியுள்ளது. விராட் கோலியின் கட்டை விரல் வலி அதிகமாக இருப்பின் இந்திய அணி நிர்வாகம் பெரும் தலைவலியை சந்திக்க நேரிடும்.
விராட் கோலியின் காயம் அதிகமானல் இந்திய கிரிக்கெட் வாரியம் கடும் விமர்சனம் மற்றும் நெருக்கடிக்கு உள்ளாகும். விராட் கோலி தற்போது உலகின் அனைத்து தலைசிறந்த பௌலர்களின் பந்துவீச்சை நொறுக்கி தள்ளும் அளவிற்கு சிறந்த ஆட்டத்திறனுடன் திகழ்கிறார். அத்துடன் தனது அதிரடி ஆட்டத்தை மேன்மேலும் மெருகேற்றிக் கொண்டே வருகிறார். 54 சராசரியில் 7000ற்கும் மேல் சர்வதேச ஓடிஐ ரன்களை எந்த அணி வீரர்களும் குவித்ததில்லை. விராட் கோலி தற்போது 219 ஓடிஐ போட்டிகளில் பங்கேற்று 59.57 சராசரியுடன் 41 சதங்களை விளாசியுள்ளார்.
இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் ஒரு கலப்பு முடிவை அளித்துள்ளது. உலகக் கோப்பை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணியாக திகழும் இந்திய அணி நியூசிலாந்திற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இருப்பினும் இரண்டு முறை உலகச் சேம்பியனாக வலம் வந்த இந்திய அணி, கடந்த வாரத்தில் நடந்த வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் மற்றும் சதம் விளாசினர் அவர்கள் குவித்த ரன்கள் முறையே 46 மற்றும் 108 ஆகும். இதன்மூலம் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 359 ரன்கள் வங்கதேசத்திற்கு இலக்காக நிர்ணயித்தது. அதன்பின் இந்திய பௌலர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 264 ரன்களில் வங்க தேசத்தை சுருட்டினர்.
இந்திய உலகக்கோப்பை தகுதிச் சுற்றின் முதல் போட்டியில் எதிர்கொள்ளவிருக்கும் தென்னாப்பிரிக்க அணி தனது முதல் உலகக்கோப்பை போட்டியில் மோசமான தோல்வியை தழுவியுள்ளது. முதல் போட்டியிலேயே தென்னாப்பிரிக்க அணி, இங்கிலாந்திடம் 104 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து 311 ரன்கள் குவித்தது. ஜேஸன் ராய், பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட், இயான் மோர்கன் ஆகியோர் அரை சதம் விளாசினர். தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 207 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
