#3 ஒரு டெஸ்ட் தொடரில் அதிக கேட்ச்களை பிடித்த இந்திய விக்கெட் கீப்பர்:
தற்போது நடைபெற்று வரும் பார்டர்- கவாஸ்கர் டிராபியில் இதுவரை 20 கேட்ச்களை பிடித்து ஓர் டெஸ்ட் தொடரில் அதிக கேட்ச்களை பிடித்த இந்தியவிக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்துள்ளார், ரிஷாப் பன்ட். ஏற்கனவே, 1954-55 -களில் நரேன் மற்றும் 1979-80-களில் சையத் கிர்மேனி போன்ற இந்திய விக்கெட் கீப்பர்களால் தலா 19 கேட்ச்களை பிடித்ததே இதற்கு முன்னர் இருந்த சாதனையாகும். அதனை தற்போது ரிஷாப் பன்ட் முறியடித்துள்ளார்.
#4 இங்கிலாந்து மண்ணில் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர்:
கடந்த ஆண்டில் நடந்து முடிந்த இங்கிலாந்து தொடரில் செப்டம்பர் மாதம் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் இங்கிலாந்து மண்ணில் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையும் மிக இளம் வயதில் சதமடித்த இரண்டாவது விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் படைத்தார், ரிஷாப் பண்ட்.மேலும் அந்த போட்டியில் 146 பந்துகளில் 114 ரன்களையும் குவித்தார்.
#5 ஆஸ்திரேலிய மண்ணில் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர்:
தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டியில் சதமடித்து இங்கிலாந்து மண்ணில் செய்ததைப் போலவே ஆஸ்திரேலிய மண்ணிலும் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரானார் ரிஷாப் பண்ட். மேலும், இந்த போட்டியில் 159* ரன்களை குவித்ததன் மூலம் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. அதுமட்டுமல்லாது, ஆஸ்திரேலியாவில் அதிக ரன்களை குவித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
எழுத்து: மஹின் பரத்வாஜ்
மொழியாக்கம்: சே.கலைவாணன்