இந்தியாவில் மிக பிரமாண்டமாக நடைபெறும் கிரிக்கெட் தொடர் இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்). இது 2008 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் 11 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் இந்த கிரிக்கெட் தொடர் பெரும்பாலும் இந்திய அணியின் இளம் வீரர்களில் சிறந்த ஆட்டக்காரர்களை தேர்வு செய்ய உதவும் வகையில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த தொடர்களில் இளம் வீரர்கள் பங்கேற்று தங்களின் திறமையை வெளிபடுத்தினால் இந்திய அணியில் இடம்பெறலாம். ஐபிஎல் தொடரில் எட்டு அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய இளம் வீரர்கள் யார் யார் என அணிகள் வாரியாக காண்போம்.
#சென்னை சூப்பர் கிங்ஸ் : தீபக் சாஹார்
சென்னை அணியில் இளம் வேகபந்து வீச்சாளர் தீபக் சாஹார் 2018 ஐபிஎல்-லில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். இவர் தோனியின் கேப்டன்ஷியில் ஏற்கனவே ரைசிங் சூப்பர் ஜயன்ட் அணியில் விளையாடினார். கடந்த வருடம் தோனியின் தலைமையில் அவரின் அறிவுறையுடன் சிறப்பாக விளையாடினார். இதன் முலம் இந்திய அணியிலும் இடம் பிடித்தார். ஆசிய கோப்பையில் இந்திய அணியில் இடம் பிடித்தார். ஒரு நாள் மற்றும் டி-20 போட்டியிலும் இந்திய அணியில் இடம் பிடித்து அசத்தினார்.
#மும்பை இன்டியன்ஸ் : இஷான் கிஷான்
மும்பை அணியில் இளம் வீரர் விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷான் கடந்த வருட ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். இவர் மும்பை அணிக்காக தொடக்க வீரராக பல போட்டிகளில் களம் இறங்கினார். இவரின் அதிரடி ஆட்டத்தால் பல போட்டிகள் மும்பை அணி வெற்றி பெற்றது. இந்திய அணிக்கு இளம் விக்கெட் கீப்பராக திகழக்கூடிய திறமை கொண்டவர் இஷான் கிஷான்.
#சன்ரைசர்ஸ் ஐத்ராபாத் : சித்தார்த் கௌவுல்
ஐத்ராபாத் அணியில் சித்தார்த் கௌவுல் சிறப்பான ஆட்டத்தை கடந்த வருடம் ஐபிஎல் போட்டிகளில் வெளிபடுத்தினார். இவர் ஐபிஎல் லீக் போட்டிகளில் சிறப்பான பந்து வீச்சின் மூலம் எதிர் அணிகளை திணறச்செய்தார். இவரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணியிலும் இடம் பிடித்தார். இநதிய அணியில் ஒரு நாள் அணியிலும், டி-20 அணியிலும் இடம் பிடித்தார்.
#டெல்லி கேபிடல்ஸ் : ரிஷாப் பண்ட்
டெல்லி அணியில் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் ரிஷாப் பண்ட் கடந்த வருட ஐபிஎல் போட்டிகளில் கடைசி வரை அதிரடியை காட்டினார். இவர் டெல்லி அணிக்காக 4ம் இடத்தில் களம் இறங்கினார். இவர் மிகவும் அதிரடியான ஆட்டத்தை வெளிபடுத்த கூடியவர். இவரின் சிறப்பான ஆட்டத்தால் இவர் தற்போதைய இந்திய அணியில் நிரந்தர இடத்தை பிடித்துள்ளார். இந்த வருட உலககோப்பை அணியிலும் இடம் பெறுவார் என எதிர்பார்க்கபடுகிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : சுப்மன் கில்
கொல்கத்தா அணியில் இளம் இந்திய வீரர் சுப்மன் கில் கடந்த வருட ஐபிஎல்-லில் கொல்கத்தா அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். இவர் U-19 உலககோப்பை இந்திய அணியில் இடம் பிடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி இருந்தார்.
இந்த நிலையில் கடந்த வருட ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். குறிப்பாக சென்னை அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற செய்தார். இதன் முலம் இந்திய அணியிலும் இடம் பிடித்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணிக்காக விளையாடியது குறிப்பிடத்தக்கது.
#ராஜஸ்தான் ராயல்ஸ் : கிருஷ்ணப்பா கௌதம்
ராஜஸ்தான் அணியில் இந்திய இளம் வீரர் கிருஷ்ணப்பா கௌதம் கடந்த வருடம் ஐபிஎல்-லில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். இவர் வலதுகை சுழல்பந்து வீச்சாளர் மற்றும் ஆல்-ரவுண்டர் ஆக சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். இவர் ஆட்டத்தின் கடைசி நேரத்தில் சிறப்பாக விளையாடகூடிய திறமை கொண்டவர். கடந்த வருட ஐபிஎல் போட்டியில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடினார்.
#கிங்ஸ் லெவன் பஞ்சாப் : அன்கிட் ராஜ்புட்
பஞ்சாப் அணியில் இந்திய இளம் வேகபந்து வீச்சாளர் அன்கிட் ராஜ்புட் கடந்த வருட ஐபிஎல் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். இவர் பஞ்சாப் அணியில் சிறந்த பவுலராக திகழ்கிறார். இவர் கடந்த வருடம் டெல்லி அணிக்கு ஏதிரான போட்டியில் ஐந்து விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.
#ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு : முகமத் சீராஜ்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியில் சீராஜ் மட்டும் தான் கடந்த வருட ஐபிஎல் போட்டிகளில் ஓரளவு சிறப்பாக விளையாடினார். இவர் இந்திய அணியிலும் அடிகடி இடம் பெற்று வருகிறார். இந்த வருட ஐபிஎல் போட்டிகளில் வாசிங்டன் சுந்தர் மற்றும் சீராஜ் போன்ற வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்க படுகிறது.