#2 செல்டன் காட்ரெல்
செல்டன் காட்ரெல் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஆவார். இவரது விக்கெட் கொண்டாட்டங்கள் தனிச்சிறப்பு மிக்கதாக இருக்கும். இவரது ஆட்டத்திறன் 2019 ஐபிஎல் ஏலம் முடிந்தபின் வெளிப்பட்டுள்ளது. இங்கிலாந்திற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கிராஸ் ஐஸ்லெட்டில் நடந்த முதல் டி20யில் ஜோ ரூட், அலேக்ஸ் ஹல்ஸ், சாம் பில்லிங்ஸ் ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
கடந்தாண்டு டிசம்பரில் வங்கதேசத்தில் நடந்த வங்கதேசத்திற்கு எதிரான டி20 போட்டிகளில் 3 போட்டிகளில் பங்கேற்று 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சைல்ஹாட்-டில் நடந்த முதல் டி20யில் இவரது அதிகபட்ச டி20 ஆட்டத்திறனை வெளிபடுத்தினார். 4 ஓவர்களை வீசி 28 ரன்களை அளித்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த விக்கெட்டில் வங்கதேச அணியின் டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்களான ஷகிப் அல் ஹாசன், சௌம்யா சர்கர், தமீம் இக்பால், மேஹ்மதுல்லா ஆகியோர் அடங்குவர்.
காட்ரேல் பெரும்பாலும் டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்களை அதிகம் வீழ்த்தியுள்ளார். பிரிட்ஜ் டவுனில் நடந்த இங்கிலாந்திற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ஜானி பேர்ஸ்டோவ், மொய்ன் அலி, இயான் மோர்கன், ஜேஸன் ராய் ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
காட்ரேல்-லின் வேகம் மற்றும் இடதுபக்க கோண வளைவு பந்துவீச்சால் இவரது பந்துவீச்சை பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்வது மிகவும் கடினமான ஒன்றாகும். தொடக்க ஓவர்களை சிறப்பாக வீசும் திறமை கொண்டவர். லுங்கி நிகிடி விலகியுள்ளதால் தீபக் சகாருக்கு தொடக்க பந்துவீச்சை அளிக்கும். காட்ரேல் நிகிடிக்கு பதிலாக சேரக்கப்பட்டால் மற்றுமொரு தொடக்க ஓவர் வீசுபவராக திகழ்வார்.